மீந்து போன சாதம் இருந்தா போதும் இரவு புதிய விதமான டிபன் 10 நிமிசத்துல தயார் செஞ்சி அசத்திரலாம்.

rice-cutlet3
- Advertisement -

எப்போதும் சாதம் வடிக்கும் பொழுது நாம் பார்த்து பார்த்து வடிப்பதில்லை. மீந்து போற மாதிரி தான் வடிப்போம். அதற்கு காரணம் மீந்து போனாலும் பரவாயில்லை. யாருக்கும் பத்தாமல் போய் விடக்கூடாது என்கிற பயம் தான் நமக்கு இருக்கும். மீதமான சாதத்தை என்ன செய்வதென்று தெரியாது. சிலர் சூடாக இல்லை என்றாலும் இரவில் சாப்பிட்டு விடுவார்கள். ஆனால் பலர் இரவில் சாதம் சூடாக இருக்க வேண்டும். அப்போது தான் உணவு தொண்டைக்குள் இறங்கும் என்பார்கள். இது போன்று இருக்கும் நேரத்தில் மீதமான சாதத்தை வைத்து பத்தே நிமிடத்தில் சுலபமாக புதிய வகை டிபனை செய்து விடலாம். அதை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

rice-cutlet

தேவையான பொருட்கள்:
மீந்து போன சாதம், துருவிய கேரட் அல்லது முட்டை கோஸ், பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், 1 டீஸ்பூன் அரிசி மாவு, 2 டீஸ்பூன் கடலை மாவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, உப்பு, எண்ணெய்.

- Advertisement -

மீந்து போன சாதத்தை நன்கு பிசைந்து கொள்ளுங்கள். அதனுடன் துருவிய கேரட் அல்லது முட்டைகோஸ் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களிடம் எது இருக்கிறதோ அதை சேர்த்துக் கொள்ளலாம். நறுக்கி வைத்த வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதில் அரிசி மாவு மற்றும் கடலை மாவு போட்டுக் கொள்ளுங்கள். சாதம் இருந்தாலும் அரிசி மாவு சேர்க்க வேண்டும், அப்போது தான் நன்றாக வரும். அவற்றுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.

cutlet-fry

இந்த கலவையை சிறுசிறு வடைகளாக கைகளில் தட்டி அப்படியே அழுத்தி விடுங்கள். உங்கள் கைகளில் எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள். எண்ணெய் தடவினால் ஒட்டாமல் வரும். உங்களுக்கு விருப்பமான வடிவங்களில் சதுரம், செவ்வகம், வட்டம் என்று நீங்கள் இதை தயார் செய்து கொள்ளலாம்.

- Advertisement -

பின்னர் எண்ணெயில் இதை டீப் ஃப்ரை செய்யலாம் அல்லது தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் விட்டு பொரித்தும் எடுக்கலாம். ஒரு புறம் நன்றாக பொன்னிறமாக வெந்ததும், மறு புறம் திருப்பி போடுங்கள். எண்ணெய் விட்டு இரண்டு புறமும் நன்றாக வெந்ததும் தட்டில் எடுத்து வைத்து விடுங்கள். இப்போது அனைவருக்கும் சூடாக பரிமாறலாம்.

rice-cutlet1

இனி சாதம் மீந்து போனால் அதை வீணாக்காதீர்கள். இது போல் புதுப் புது வெரைட்டிகளாக டிபன் வகைகள் அல்லது ஸ்நாக்ஸ் வகைகள் ஏராளமாக இருக்கின்றன. அது போல் செய்து கொடுத்தால் உங்கள் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் மட்டுமல்ல வீட்டில் இருக்கும் பெரியவர்களும் சூடான சுவையான இந்த வகை டிபனை மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். ஒரு முறை செய்து பார்த்து அசத்துங்கள்.

இதையும் படிக்கலாமே
இட்லி உப்புமா மாதிரி மீந்து போன இட்லியில், ‘இட்லி மஞ்சூரியன்’ 10 நிமிஷத்தில் செஞ்சி அசத்தி பாருங்க! உங்க வீட்ல 1 இட்லி கூட இனிமே வீணாகாது.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -