உங்கள் வீட்டில் இந்த 1 செடி இருந்தால் அதை தவறியும் அந்த இடத்தில் மட்டும் வைத்து விடாதீர்கள்! துரதிர்ஷ்டம் வீடு தேடி வர வாய்ப்புகள் உண்டாம்!

எல்லோருடைய வீட்டிலும் செடி, கொடிகள் வளர்ப்பது என்பது நல்ல ஒரு அதிர்ஷ்டத்தையும், வாஸ்து குறைபாட்டையும் நீக்க வல்லது ஆகும். ஆமாங்க! நீங்கள் வீட்டில் செடிகள் வளர்த்தாலே போதும்! வாஸ்து குறைபாடுகளால் வரும் பிரச்சனைகள் பெருமளவு குறைந்து விடும். இது பலருக்கும் தெரியாத ஒரு விஷயமாகவே இன்று வரை இருந்து வருகிறது. வீட்டில் சில செடிகளை வளர்ப்பது அதிர்ஷ்டத்தையும், சில செடிகள் துரதிர்ஷ்டத்தையும் தரும் என்பார்கள். குறிப்பாக முட்கள் போன்ற செடிகள், விஷத்தன்மை உள்ள செடிகள் வீட்டில் வளர்ப்பது துரதிர்ஷ்டத்தை கொண்டு வரும். அது போல இந்த ஒரு செடி வகையும் வீட்டில் இருந்தால் அதைத் தவிர்த்து விடுவது நல்லது. அது என்ன செடி? என்பதை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

vasthu-vastu

ஒரு சிலர் வீட்டை வாஸ்து படி அமைத்து இருக்க மாட்டார்கள். சிறுசிறு விஷயங்களிலும் கூட வாஸ்து குறைபாடு ஏற்படுவது உண்டு. இதனால் வீட்டில் இருப்பவர்களுக்கு பலவிதமான பிரச்சனைகள் வரக்கூடும் என்பது வாஸ்து சாஸ்திர விதியாகும். இந்த சிறுசிறு பிரச்சனைகள் தீர, வீட்டில் கட்டாயம் பசுமையான செடிகளையும், கொடிகளையும் சுற்றிலும் வளர்க்க வேண்டும். உங்கள் வீட்டின் அமைப்பிற்கு ஏற்ப வெளியிலிருந்து உள்ளே வரும் நபர்களுடைய கண்களுக்கு பசுமை தென்படும் படி தாவர வகைகளை அமைப்பது வாஸ்து குறைபாட்டை கட்டாயம் நீக்கும். அதனால் வரும் பாதிப்புகளும் குறையும்.

ஒரு சிலர் கற்றாழை வளர்ப்பது உண்டு. கற்றாழைச் செடி முட்கள் கொண்டதாக இருந்தாலும் அதன் மருத்துவ குணமும், ஆன்மீக பலனும் அதிகம். ஜோதிடம், ஆன்மீகம், மருத்துவம், வாஸ்து என்று அனைத்திலும் கற்றாழைச் செடி அதீத பலன்களைக் கொடுக்க வல்லது. இதில் வாஸ்து ரீதியாக வைக்கப்படும் கற்றாழை வீட்டிற்கு உள்ளே வைப்பது உண்டு. வீட்டிற்கு வெளியையும், உள்ளேயும் தாராளமாக இந்த செடியை வளர்க்கலாம். மேலும் திருஷ்டிக்காக கற்றாழை செடியை தலைகீழாக கட்டி தொங்க விடுவதும் உண்டு. இதனால் வீட்டிற்குள் எதிர்மறை சக்திகள் நுழைய முடியாது என்று கூறப்படுகிறது.

katralai

தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து, கற்றாழை செடிக்கு தண்ணீர் ஊற்றி வந்தால் கேட்ட நேரத்தில் பணம் கிடைக்குமாம். ஒருசிலர் பண பிரச்சினையில் தவித்துக் கொண்டிருப்பார்கள். உரிய நேரத்தில் பணம் கிடைக்காவிட்டால் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் கற்றாழை நல்ல ஒரு பலனைக் கொடுக்குமாம். ஆன்மீக வகையில் கற்றாழை செடி அதீத சக்திகளை கொண்டுள்ளது. காலையில் முதல் வேலையாக கற்றாழை செடிக்கு தண்ணீர் சிறிதளவு தெளித்து வர உரிய நேரத்தில் கிடைக்க வேண்டிய பணம் கிடைக்கும்.

கற்றாழைச் செடி நிறைய வகைகளை கொண்டுள்ளது. அதில் பாம்பு கற்றாழை என்று கூறப்படும் ஒருவகையான கற்றாழை செடியை வீட்டில் வளர்ப்பது துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமாம். இந்தச் செடி பாம்பு வீட்டிற்குள் வராமல் இருக்க, வாசலில் மற்றும் தோட்ட பகுதிகளில் வளர்ப்பது உண்டு. பாம்பு போன்ற தோற்றத்தையும், அமைப்பையும் கொண்ட இந்த கற்றாழை பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருந்தாலும் வாஸ்து ரீதியாக இவ்வகைச் செடி நல்ல பலன்களை கொடுப்பதில்லையாம்.

snake-katrazhai

பாம்பு கற்றாழை செடி வகையை வீட்டின் வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையில் கட்டாயம் வைக்கக்கூடாது. அப்படி நீங்கள் வைத்து இருந்தால் உடனே அதனை இடம் மாற்றி வைத்து விடுங்கள். பாம்பு கற்றாழை வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை உண்டு பண்ணக் கூடியது. இது அதிகமாக பாம்பு வரும் பண்ணை பகுதிகளிலும், தோட்டப் பகுதிகளிலும் வளர்த்தால் நல்லது ஆகும். ஆனால் வீட்டில், அதுவும் வீட்டிற்கு உட்பகுதியில் வைப்பது தேவையற்ற ஒன்று தான். நாம் அழகிற்காக வளர்க்கும் செடிகளுக்கு பின்னால் அதிர்ஷ்டமும், துரதிர்ஷ்டமும் சேர்ந்தே ஒளிந்திருக்கும் என்பதால் அவ்வகையான செடிகளை வாங்கும் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது.