உழைக்கின்ற காசு கையில் தங்காமல் இருக்க நீங்கள் செய்யும் இந்த தவறும் கூட காரணமாக இருக்கலாம்

clothes-lakshmi
- Advertisement -

ஒவ்வொருவரும் நேரத்தை வீணாக்காமல் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம் இன்றைய உலகம் பணத்தை மட்டுமே மையமாக கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது. இப்படி கடினமாக உழைத்து சம்பாதிக்கும் பணம் கையில் வந்த உடனேயே எப்படி செலவாகிறது என்று கூட தெரியாமல் உடனே தீர்ந்து போய் விடுகிறது. இப்படி ஒவ்வொருவரும் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை எப்படியாவது சேமித்த வைக்க வேண்டும் என்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தாலும் அவர்களால் தாங்கள் சம்பாதித்த பணத்தை சேமித்து வைக்க முடிவதில்லை. இதற்கு நம்மை அறியாமலே நமது வீடுகளில் செய்யப்படும் சிறு சிறு தவறுகள் கூட காரணமாக இருக்கலாம். அப்படி பலரும் செய்யும் அந்த தவறுகளைப் பற்றி இந்தப் பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்வோம்.

உழைக்கின்ற காசு வீட்டில் தங்காமல் போக இந்த ஒரு தவறு தான் மிகவும் முக்கியமான காரணமாக இருக்கிறது. இந்த ஒரு தவறை செய்பவர்களின் வீட்டில் எப்போதும் பணம், காசு தங்குவதற்கு வாய்ப்பே இருக்காது. பொதுவாக ஒருவருக்கு கெட்ட நேரம் ஆரம்பித்து விட்டது என்றால் அந்த பலனை கொடுப்பது ராகு-கேது என்ற இருவர் தான்.

- Advertisement -

வீட்டிலும் பல்வேறு வேலை செய்யும் இடங்களிலும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவது கயிறு. இந்தக் கயிறு ராகு கேதுவின் அம்சமாக சொல்லப்படுகிறது. இந்த கயிறு பல்வேறு வேலைகளை சுலபமாக செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. இவற்றை தேவைப்படும் நேரத்தில் மட்டுமே பயன்படுத்தவேண்டும். எப்பொழுதும் இந்தக் கயிறை தவறாக உபயோகப்படுத்தக் கூடாது.

ஆனால் ஒரு சில வீடுகளில் வீட்டின் மையப் பகுதியிலேயே கயிறு மூலம் கொடி கட்டி, துணிகளை அந்தக் கயிறில் காய வைத்திருப்பார்கள். ஆனால் இப்படி எந்த நேரமும் கொடிக்கயிறில் துணிகளை தொங்க விட்டு வைத்திருந்தால் அந்த வீட்டில் தரித்திரம் பிடிக்கத்தான் செய்யும். ஏனென்றால் வீட்டிற்கு வரும் அனைவரின் கண்களிலும் இந்த அழுக்குத் துணிகள் தான் படும்.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு முறை நடந்து செல்லும் பொழுதும் அனைவரின் மீதும் இந்த துணிகள் உரசிக் கொண்டிருக்கும். துணிகளை காய வைக்க வசதி இல்லாதவர்கள் சிறிய வீட்டிலோ அல்லது வாடகை வீட்டில் இருப்பவர்கள் இதனைத் தவிர்ப்பது என்பது முடியாது. எனவே வீட்டின் உட்பகுதியில் கொடி கட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இவ்வாறு தவிர்க்க முடியாத சூழ்நிலை இருந்தால் அவர்கள் வீட்டின் ஒரு ஓரத்தில் இதுவரை சுவரை ஒட்டியவாறு கொடிகளை கட்டி கொள்ள வேண்டும்.

அப்படியில்லாமல் வீட்டின் வரவேற்பு அறையில் குறுக்கும் நெடுக்குமாக கொடி கட்டுவது, படுக்கை அறையில், வீட்டின் உள்ளே நுழையும் இடத்தில் குறுக்கும் நெடுக்குமாக கொடி கட்டி வைப்பதையும் தவிர்க்க வேண்டும். வசதி படைத்தவர்களின் வீட்டினை கவனித்துப் பாருங்கள். அழுக்குத் துணிகளை கொடிக்கயிறிலோ, நாம் பார்க்கும் இடத்திலோ வைத்திருக்க மாட்டார்கள். அவர்களின் அழுக்கு துணிகளை வைப்பதற்கென்று தனியாக ஒரு இடத்தை வைத்திருப்பார்கள். எனவே இதனை கவனமாக பின்பற்றி பாருங்கள். உண்டாகும் மாற்றத்தை விரைவாக உணர்ந்து கொள்வீர்கள்.

- Advertisement -