செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் மகாலட்சுமியை வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. மகாலட்சுமியை மட்டும் நாம் வழிபாடு செய்தோம் என்றால் நமக்கு செல்வ செழிப்பு ஏற்படாது. மகாலட்சுமியை வழிபாடு செய்வதற்கு முன்பாக பெருமாளை நாம் வழிபாடு செய்ய வேண்டும். அப்பொழுதுதான் மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைக்கும். அதனால் சாதாரணமாக மகாலட்சுமி வழிபாடு செய்வதாக இருந்தால் கூட கண்டிப்பாக முறையில் பெருமாளை நாம் வழிபாடு செய்ய வேண்டும். அப்படிப்பட்ட பெருமாளுக்கு உரிய திதியாக ஏகாதசி திதி திகழ்கிறது. அதிலும் ஆனி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசி திதி அன்று எந்த முறையில் பெருமாளை வழிபாடு செய்தால் பணக்கஷ்ட முற்றிலும் தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வளர்பிறை ஏகாதசி வழிபாடு
விரதங்களிலே மிகவும் சிறப்பு வாய்ந்த விரதமாக திகழ்வது ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு முறை ஏகாதசி என்பது வரும். இந்த இரண்டு நாட்களிலும் நாம் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்யும் பொழுது பெருமாளின் அருளும் மகாலட்சுமி தாயாரின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும். மேலும் ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு விதமான பெயர்கள் இருக்கிறது என்றும் அந்த ஏகாதசியில் விரதம் இருந்து வழிபாடு செய்யும்பொழுது ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டாகும் என்றும் கருட புராணத்தில் கூறப்பட்டிருக்கிறது. முறைப்படி ஏகாதசி விரதம் இருக்க இயலாதவர்கள் மிகவும் எளிமையான முறையில் கூட விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்யலாம். அப்படிப்பட்ட ஒரு எளிமையான வழிபாட்டு முறையை தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
ஜூலை மாதம் ஆறாம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஏகாதசி திதி இருக்கிறது. அன்றைய தினத்தில் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து பெருமாளை நினைத்து விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும். மாலை 6:00 மணிக்கு மேல் வழிபாடுகள் செய்து முடித்துவிட்டு விரதத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம். விரதம் இருக்க இயலாது என்பவர்கள் சாதாரணமாக வழிபாட்டை மட்டுமாவது நாம் செய்து கொள்ளலாம். வழிபாட்டை மட்டும் செய்யலாம் என்று நினைப்பவர்கள் இரவு 10 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வழிபாடு செய்யலாம். அன்றைய தினத்தில் தலைக்கு குளித்து இருக்க வேண்டும். அசைவத்தை தவிர்த்து இருக்க வேண்டும் என்பது மட்டுமே முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
பூஜை செய்யும் பொழுது வீட்டில் இருக்கக்கூடிய மகாலட்சுமியின் படத்திற்கும் பெருமாளின் படத்திற்கும் துளசி மாலையை சாற்றுவது வாசனை மிகுந்த மலர்களால் மாலைகள் சாற்றுவது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். பிறகு பெருமாளுக்கு முன்பாக மூன்று விளக்கில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு வடக்கு திசை பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். கண்டிப்பான முறையில் நெய்வேத்தியமாக பால் பாயாசம் அல்லது காய்ச்சிய பால் போன்றவற்றை வைக்கலாம். இவ்வாறு வைத்துவிட்டு பெருமாளுக்கு துளசி இலைகளால் இந்த ஒரு நாமத்தை 111 முறை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி அர்ச்சனை செய்வதன் மூலம் பெருமாளின் அருளால் நம்முடைய பணகஷ்டம் தீரும்.
மந்திரம்
“ஓம் நமோ கோவிந்தாய நமோ நமஹ”
இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் வெற்றிலை பரிகாரம்
விரதங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த விரதமாக கருதப்படக் கூடிய ஏகாதசி விரதமன்று விரதம் இருக்க இயலாதவர்கள் கூட இந்த எளிமையான வழிபாட்டு முறையை பின்பற்றும் பொழுது பெருமாளின் அருளால் அவர்களுடைய பணக்கஷ்டம் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.