- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபண தட்டுப்பாட்டை நீக்கும் பரிகாரம்

பண தட்டுப்பாட்டை நீக்கும் பரிகாரம்

- Advertisement -

பொங்கல் திருநாள் அனைவரின் இல்லங்களிலும் சிறப்பாக நிறைவடைந்திருக்கும். அனைவரும் தங்களுடைய இல்லங்களில் பானைகளில் பொங்கல் வைத்து இறைவழிபாட்டை மேற்கொண்டு இருப்போம். பலரும் மாட்டுப்பொங்கல் தினத்திலும் பொங்கல் வைத்து வழிபாடு செய்திருப்பார்கள். இப்படி பொங்கல் வைக்கும் பொழுது பொங்க பானையில் மஞ்சள் கொத்தை கட்டும் வழக்கம் என்பது இருக்கும். பொங்கல் வைத்து முடித்த பிறகு இந்த மஞ்சள் கொத்தை தூக்கி போட்டு விடுவார்கள். அப்படி போடாமல் இந்த ஒரு பரிகாரத்தை செய்தோம் என்றால் நமக்கு தடைபட்டிருக்க கூடிய பண வரவுகள் தடையின்றி உண்டாகும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பண தட்டுப்பாட்டை நீக்கும் பரிகாரம்

ஒருவருக்கு தெய்வங்களின் அருள் இருந்தால்தான் அவரால் பணத்தை சம்பாதிக்க முடியும். அப்படி சம்பாதித்த பணம் நிலையாக அவரிடம் நிலைத்திருக்க வேண்டும் என்றாலும் அதற்கு தெய்வத்தின் அருள் என்பது வேண்டும். யார் ஒருவருக்கு பண வசியம் என்பது இருக்கிறதோ அவர்களிடமே அதிக அளவில் பணம் சேரும் என்றும் கூறப்படுகிறது. ஒரு வேளை பணவசியம் இல்லாத பட்சத்தில் அவர்களிடம் எவ்வளவு பணம் வந்தாலும் அவர்கள் கையில் தங்காமல் சென்று விடும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பண வசியத்தை ஏற்படுத்தி பண தட்டுப்பாட்டை நீக்குவதற்குரிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை வரும் வெள்ளிக்கிழமைக்குள் செய்துவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பொங்கலுக்கு வாங்கிய இந்த மஞ்சள் கொத்தில் இருந்து சிறிய துண்டு மஞ்சளை எடுத்து வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு மஞ்சள் அல்லது வெள்ளை துணியை எடுத்து அதில் அந்த மஞ்சளை வைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு இவற்றையும் சேர்த்து வைத்து உங்களுடைய குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் மனதார நினைத்துக் கொண்டு மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள்.

இந்த மூட்டையை உங்கள் வீட்டு பூஜை அறையில் ஏதாவது ஒரு இடத்தில் தரையில் வைக்காமல் ஒரு கிண்ணமோ அல்லது தட்டோ வைத்து அதற்கு மேல் வைத்து விட வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்த முடிச்சை அவிழ்த்து அந்த மஞ்சள் நன்றாக இருக்கிறதா என்பதை பார்த்து பச்சை கற்பூரம் கரைந்து இருந்தால் திரும்பவும் வைத்து கட்டி விட வேண்டும். ஒருவேளை அந்த மஞ்சளில் வண்டு பிடித்திருக்கும் பட்சத்தில் அந்த மஞ்சளை கால்படாது இடத்தில் போட்டு விடலாம்.

- Advertisement -

இந்த முறையில் நாம் பொங்கலுக்கு வாங்கிய மஞ்சளை வைத்து இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் எப்படி நம் வீட்டில் பொங்கல் பொங்கி மகிழ்ச்சியாக இருந்தோமோ அதே போல் நம் வாழ்க்கையில் பணமும் எந்தவித தட்டுப்பாடும் இன்றி தாராளமாக வந்து சேரும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:ஆசைகளை நிறைவேற்றும் விநாயகர் வழிபாடு

நல்ல காரியத்திற்காக வாங்கிய பொருட்களை இந்த முறையில் நாம் பயன்படுத்தி பரிகாரம் செய்யும் பொழுது அந்த நல்ல காரியத்தின் பலனாலும் நாம் செய்த பரிகாரத்தின் பலனாலும் அனைத்து விதமான நன்மைகளும் நம்மை தேடி வரும். அதிலும் குறிப்பாக இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது நமக்கு பணவரவில் எந்தவித தடைகளும் இருக்காது என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்