- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபண வரவு அதிகரிக்க வழிபாடு

பண வரவு அதிகரிக்க வழிபாடு

- Advertisement -

செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக்கூடியவர் மகாலட்சுமி தாயார் என்றாலும் கூட அந்த செல்வத்தை வாரி வழங்கக் கூடிய ஆற்றல் குபேர பகவானுக்கே இருக்கிறது. அதனால் தான் மகாலட்சுமி தாயாரை தன் இதயத்திலேயே வைத்திருக்கும் பெருமாளுக்கு கூட குபேர பகவான் தான் செல்வத்தை வழங்கி இருக்கிறார். அதனால் தான் இன்றளவும் திருப்பதி வெங்கடாசலபதி பெருமாள் குபேரருக்கு கடனாளியாக திகழ்கிறார். இப்படிப்பட்ட குபேர பகவானை நாம் வழிபடும் பொழுது நம்முடைய செல்வ செழிப்பில் எந்த வித குறைவும் இருக்காது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் வியாழக்கிழமை அன்று குபேரர் சிலையை எப்படி வாங்கி வைத்து வழிபட செல்வ செழிப்பிற்கு பஞ்சம் இருக்காது என்று தான் பார்க்க போகிறோம்.

தேவலோகத்தின் நிதி அமைச்சராக திகழக்கூடியவர் குபேர பகவான். குபேர பகவான் நினைத்தால் மட்டும்தான் யாருக்கு வேண்டுமானாலும் செல்வத்தை அளிக்க முடியும். மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைத்தாலும் குபேரனின் அருள் இல்லை என்றால் ஒருவருடைய வாழ்க்கையில் செல்வ செழிப்பில் பிரச்சினைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதனால் ஒவ்வொருவருடைய இல்லத்திலும் கண்டிப்பான முறையில் எப்படி மகாலட்சுமி தாயாரை வழிபடுகிறோமோ அதே போல் குபேரரையும் வழிபட வேண்டும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

வியாழக்கிழமை அன்று குரு ஹோரையில் ஒரு சிறிய அளவிலான குபேரர் சிலையை வாங்கி வர வேண்டும். அவரை சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். குபேரர் சிலைக்கு ஏற்றவாறு ஒரு தாம்பாலத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தாம்பாலத்தில் பச்சரிசியை போட்டு அதில் மஞ்சள் கலந்து அச்சதையாக தயார் செய்து பரப்பி வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அதற்கு மேல் ஏழு ஏலக்காய்களை வைக்க வேண்டும். இந்த ஏலக்காய்க்கு மேலே நாம் வாங்கி வந்த குபேரர் சிலையை வைக்க வேண்டும். இந்த குபேரர் சிலையை வைக்கும் நேரம் ஆனது வியாழக்கிழமை மாலை 5:30 மணிக்கு மேல் இருப்பது போல் பார்த்துக் கொள்வது நல்லது. பிறகு குபேரருக்காகவே என்று தனியாக குபேர விளக்கு என்று இருக்கிறது. வசதி படைத்தவர்கள் அந்த குபேர விளக்கை வாங்கி வைத்து விளக்கேற்றலாம். வசதி இல்லாதவர்கள் சாதாரண ஒரு அகல் விளக்கை கூட உபயோகப்படுத்தலாம்.

- Advertisement -

அந்த விளக்கில் சுத்தமான பசு நெய்யை ஊற்றி தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பிறகு குபேரருடைய மந்திரத்தை 108 முறை கூறலாம். இப்படி தினமும் அவருக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து அவருடைய மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அடுத்த வாரம் வியாழக்கிழமை வரும்பொழுது தட்டில் வைத்திருக்கும் ஏலக்காயை எடுத்து பணம் வைத்திருக்கும் பணப்பெட்டியில் போட்டுவிட்டு பச்சரிசியை குருவிகளுக்கும் எறும்புகளுக்கும் தானமாக வைத்து விட வேண்டும்.

மறுபடியும் புதிதாக பச்சரிசியை அச்சதையாக தயார் செய்து ஏலக்காய் வைத்து அதற்கு மேல் குபேரரை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு நாம் வழிபாடு செய்யும்பொழுது கண்டிப்பான முறையில் குபேரருக்கு கற்கண்டு மட்டுமாவது நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வீண் விரயம் குறைந்து பணவரவு அதிகரிக்க பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த குபேர வழிபாட்டை நாமும் நம் இல்லங்களில் நம்பிக்கையுடன் செய்து குபேரரின் அருளை பரிபூரணமாக பெற்று செல்வ செழிப்புடனும் நலமுடனும் வாழ்வோம்.

சற்று முன்