- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபண வரவு அதிகரிக்க அம்மன் வழிபாடு

பண வரவு அதிகரிக்க அம்மன் வழிபாடு

- Advertisement -

பணம் வேண்டும் என்று தான் உலகில் உள்ள அனைவரும் ஆசைப்படுகிறார்கள் அது நியாயமானது தான். ஆனால் அந்த ஆசைக்கு ஏற்றவாறு அவர்களுடைய உழைப்பும் முயற்சியும் இருக்க வேண்டும் இதுவும் முக்கியம். அதை எந்த காரணத்திற்காகவும் மறக்கக் கூடாது மறக்கவும் முடியாது. ஆனால் அப்படி உழைத்தாலும் சிலரால் முன்னேற முடியவில்லை அதற்கு என்ன காரணம் என்ற கேள்வியும் எழும்.

என்ன தான் நாம் ஓடி ஓடி உழைத்தாலும் பணம் நம்மிடம் சேர வேண்டும் எனில் பணத்தை ஈர்க்கக்கூடிய தன்மை நம்மிடம் இருக்க வேண்டும். அது இல்லாத பட்சத்தில் நாம் எத்தனை பாடுபட்டு சம்பாதித்தாலும் கையில் தாங்காமல் விரையம் ஆகிக் கொண்டே இருக்கும். அப்படி பணஇருப்பு தன்மையை அதிகரிக்க கூடிய ஒரு எளிய பரிகார முறையைத் தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

பண வரவு அதிகரிக்க வெற்றிலை பரிகாரம்

இந்த பரிகாரம் மிக மிக எளிமையான முறை தான். ஆனால் மிகவும் சக்தி வாய்ந்ததாக சொல்லப்படுகிறது பணவரவிற்கான பரிகார முறைகள் வழிபாடுகள் பல இருந்தாலும் அதில் இது மிகவும் பலன் அளிக்கக் கூடியதாக உள்ளது. இந்த பரிகாரத்தை பற்றி இப்போது பார்க்கலாம்.

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு அம்மன் ஆலயத்திற்கு செல்லுங்கள். அப்படி செல்லும் வேளையில் அம்மனுக்கு வெற்றிலை, பாக்கு, பூ, பழம் போன்றவற்றை அர்ச்சனைக்கு வாங்கி செல்லுங்கள். இவை எல்லாம் கோவில் அர்ச்சகர் இடம் கொடுத்து அம்மனுக்கு அர்ச்சனை செய்ய சொல்லுங்கள்.

- Advertisement -

இதை செய்து முடித்து விட்டு திரும்பும் போது நீங்கள் கொண்டு சென்று வெற்றிலை பாக்கிற்கு பதிலாக ஆலயத்தில் அம்மன் முன்பு வைத்திருக்கும் வெற்றிலை பாக்கை கேட்டு வாங்க வேண்டும். ஒரு வேலை அதற்கு காணிக்கை செலுத்த வேண்டும் என்றால் செலுத்தியாவது வாங்கிக் கொள்ளுங்கள். அந்த வெற்றிலை தான் வாங்க வேண்டும் நீங்கள் கொண்டு சென்ற வெற்றிலை வாங்க கூடாது.

இந்த வெற்றிலை நேராகக் கொண்டு வந்து உங்கள் வீட்டில் பூஜை அறையில் வைத்து விடுங்கள். பண வரவு தாராளமாக அதிகரித்துக் கொண்டு செல்ல அம்மன் பாதத்தில் வைத்த இந்த ஒரு வெற்றிலை போதும். காய்ந்த பிறகு எடுத்து நீங்கள் சாம்பிராணி தூபம் போடும் போது அதில் சேர்த்து போட்டு விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: அடகு நகையை மீட்க மந்திரம்

மறுபடியும் அடுத்த வெள்ளிக்கிழமை அம்மன் நாளையத்திற்கு சென்று இதே போல் வெற்றிலை வாங்கி வந்து பூஜை அறையில் வைத்து விடுங்கள். இதைத் தொடர்ந்து செய்து வரும் பொழுது பணத்தடை நீங்கி பணவரவு அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் பெருகும் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

சற்று முன்