பணத்தை சம்பாதிப்பதற்காக பல விதங்களில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கக் கூடிய ஒவ்வொரு நபர்களும் பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று தான் எண்ணிக்கொண்டு இருக்கிறோம். அப்படி கஷ்டப்பட்டு உழைத்தும் பணவரவு வரவில்லை என்றாலோ, வந்த பணம் வீண் விரயமாக செலவாகிறது என்றாலோ இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை நாம் செய்யலாம். இந்த பரிகாரத்தை முழுமனதோடு செய்பவர்களுக்கு பணவரவிற்கு எந்தவித பஞ்சமும் இருக்காது. அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பண வரவு அதிகரிக்க பரிகாரம்
பணவரவு தொடர்பான பரிகாரங்களையோ, வேண்டுதல்களையோ முன் வைக்க வேண்டும் என்றால் அதற்கு மகாலட்சுமியின் அருள் என்பது கண்டிப்பாக வேண்டும். மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய எந்த பொருளாக இருந்தாலும் அந்த பொருள் இருக்கக்கூடிய இடத்தில் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக இருக்கும். அதன் மூலம் பணவரவும் அதிகரிக்கும். அந்த வகையில் பெருமாள் மற்றும் மகாலட்சுமி வீற்றிருக்கக் கூடிய அரச மர இலையைப் பயன்படுத்தி செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.
இந்த பரிகாரத்தை சனிக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். சனிக்கிழமை அன்று சுத்தமாக குளித்து முடித்துவிட்டு அருகில் இருக்கக்கூடிய அரச மரத்தடிக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய கிளியாத நல்ல நிலையில் இருக்கும் அரச இலையை பறித்துக் கொண்டு வீட்டிற்கு வரவேண்டும். அரச இலையை பன்னீரால் நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் மூன்று ஏலக்காய், மூன்று கிராம்பு, ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரம் வைத்து அதற்கு மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். இந்த ஒரு ரூபாய் நாணயத்திற்கு மேல் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை குங்குமத்தை வைத்து அரச இலையின் நுனி பகுதியை கீழிருந்து மேலாக சுருட்டி நன்றாக மடித்து சிவப்பு நிற நூலால் கட்ட வேண்டும்.
இப்படி கட்டிய இந்த அரச இலை மூட்டையை நம்முடைய பணம் வைக்கும் இடத்தில் நாம் வைத்து விட வேண்டும். மாதத்திற்கு ஒரு முறை இந்த பொருட்களை மாற்றலாம். இதில் இருக்கக்கூடிய ஒரு ரூபாய் நாணயத்தை திரும்பவும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். மிகவும் எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்பவர்களுக்கு மகாலட்சுமியின் அருளால் பணவரவு அதிகரிப்பதில் எந்தவித தடைகளும் இருக்காது.
இதையும் படிக்கலாமே: கேட்டதை தரும் துர்காஷ்டமி வழிபாடு
எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தை மகாவிஷ்ணுவையும் மகாலட்சுமியையும் மனதார நினைத்துக் கொண்டு செய்பவர்களுக்கு பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கும் பணவரவு அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.