- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகேட்டதை தரும் துர்காஷ்டமி வழிபாடு

கேட்டதை தரும் துர்காஷ்டமி வழிபாடு

- Advertisement -

ஒவ்வொரு மாதமும் அஷ்டமி என்பது வரத்தான் செய்யும். வளர்பிறை தேய்பிறை என்று இரண்டு முறை அஷ்டமி வரும். அதிலும் குறிப்பாக நவராத்திரியில் வரக்கூடிய அஷ்டமியை நாம் துர்காஷ்டமி என்று கூறுகிறோம். துர்க்கை அம்மனுக்குரிய அஷ்டமியாக இந்த அஷ்டமி கருதப்படுகிறது. இந்த நாளில் நாம் துர்க்கை அம்மனை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வழிபாடு செய்து வரங்களை கேட்க அந்த வரத்தை அம்மன் வாரி வழங்குவார். அப்படிப்பட்ட ஒரு வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கேட்டதை தரும் துர்காஷ்டமி வழிபாடு

கால பைரவருக்கு உகந்த திதியாக அஷ்டமி திதி திகழ்ந்தாலும் நவராத்திரியில் வரக்கூடிய அஷ்டமிக்கு துர்காஷ்டமி என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட துர்காஷ்டமி அன்று நாம் கால பைரவரை வழிபாடு செய்வதோடு துர்க்கை அம்மனையும் வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்வதன் மூலம் நம்மிடமும் நம்மை சுற்றிலும் இருக்கக்கூடிய அனைத்து விதமான தீய சக்திகளும் எதிர்மறை ஆற்றல்களும் விலகுவதோடு நாம் கேட்ட வரத்தையும் அம்மன் அருள்வாள்.

- Advertisement -

அஷ்டமி திதி என்பது செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி மாலை 4:32 மணிக்கு ஆரம்பித்து செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி மாலை 6:06 மணிக்கு நிறைவடைகிறது. இந்த துர்காஷ்டமி பூஜையை நாம் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி மாலை 5:42 மணிக்கு ஆரம்பித்து 6:30 மணிக்குள் இருக்கக்கூடிய 48 நிமிடங்களில் செய்து முடித்து விட வேண்டும். அஷ்டமி திதி நிறைவடைய கூடிய கடைசி 24 நிமிடங்களும் நவமி திதி தொடங்கக்கூடிய முதல் 24 நிமிடங்களும் சேர்ந்த இந்த 48 நிமிடங்கள் மிகவும் சக்தி வாய்ந்த நிமிடங்களாக திகழ்கின்றன. இந்த நேரத்தில் நாம் இந்த ஒரு எளிமையான வழிபாட்டை செய்து துர்க்கை அம்மனை வழிபாடு செய்ய நாம் கேட்ட வரம் நமக்கு கிடைக்கும்.

வீட்டில் துர்க்கை அம்மனின் படம் இருக்கும் பட்சத்தில் துர்க்கை அம்மன் படத்தை அலங்காரம் செய்து கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு குங்குமத்தை போட்டு அதனுடன் தண்ணீர் மற்றும் பன்னீர் கலந்து நன்றாக கரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் எட்டு அகல் விளக்கை வைக்க வேண்டும். ஒவ்வொரு அகல் விளக்கும் ஒவ்வொரு திசையை பார்த்தவாறு எட்டுத்திக்குகளை நோக்கி தீபங்கள் எரிவதைப் போல் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு அந்தந்த திசைக்கு ஏற்ப தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த தீபத்தில் தான் துர்க்கை அம்மன் வீற்றிருக்கிறார் என்று நாம் மனதார நினைத்துக் கொண்டு பின்வரும் இந்த ஒரு எளிமையான வழிபாட்டை நாம் செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த தீபத்திற்கு முன்பாக ஒரு சிறிய இலை அல்லது கிண்ணத்தை வைத்து நமக்கு தெரிந்த ஏதாவது ஒரு துர்க்கை அம்மனின் மந்திரத்தை கூறி 108 முறை குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். துர்க்கை அம்மனின் எந்த மந்திரமும் தெரியாது என்பவர்கள் “ஓம் துர்கா தேவியே காத்தருள வேண்டும்” என்று அர்ச்சனை செய்தாலே அம்மனின் அருளை நம்மால் பெற முடியும். இப்படி 108 முறை அர்ச்சனை செய்து முடித்த பிறகு நம்முடைய வேண்டுதலை நாம் துர்க்கை அம்மனிடம் முன்வைக்க துர்க்கை அம்மன் மனம் மகிழ்ந்து நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றுவார். அர்ச்சனை செய்த குங்குமத்தை வெளி நபர்கள் யாருக்கும் தராமல் வீட்டில் இருக்கக் கூடியவர்கள் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

இதையும் படிக்கலாமே: அதிர்ஷ்டம் தேடி வர சொல்ல வேண்டிய வார்த்தைகள்

வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய துர்காஷ்டமி நாளில் துர்க்கை அம்மனை இந்த முறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு கேட்ட வரத்தை துர்க்கை அம்மன் அருள்வாள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்