பண விரயத்தை குறைக்கும் குறிப்புகள்

pana virayam
- Advertisement -

காலையில் கண் விழித்த நேரத்தில் இருந்து இரவு கண் உறங்கும் நேரம் வரை அல்லும் பகலுமாக பாடுபட்டு உழைப்பது பணத்தை சம்பாதிப்பதற்காக மட்டுமே தான். அப்படி பணத்தை சம்பாதித்தாலும் பணம் தங்கள் கைவசம் இருப்பதே இல்லை என்று புலம்பும் நபர்கள் பலர் இருக்கிறார்கள். இந்த ஆன்மீகம் குறித்த பகுதியில் என்னென்ன தவறுகளை செய்தால் பண விரயம் ஏற்படும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

பண வரவை அதிகரிக்க பல பரிகாரங்களையும் வழிபாடுகளையும் நாம் மேற்கொண்டாலும் அந்த பணம் விரையமாகாமல் சேமிப்பாக உயர வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். பண வரவிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட அதிக அளவு பண சேமிப்பிற்கும் தரவேண்டும். அப்பொழுதுதான் நம்முடைய கடினமான காலங்களில் அந்த பணம் நமக்கு உதவி செய்யும். வீட்டில் சில தவறுகளை நாம் செய்யும் பொழுது அது நம்முடைய பணத்தை விரயமாக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட தவறுகளை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

நம் வீட்டில் நாம் அன்றாடம் செய்யும் சில செயல்கள் நம்முடைய பணத்தை விரயமாக்கக்கூடிய செயல்களாக திகழ்கிறது. அதை நாம் நம்மை அறியாமலேயே செய்து விடுவோம். முதலில் தண்ணீரை வீணாக்க கூடாது. தண்ணீரை எந்த குடும்பத்தில் சிக்கனமாக செலவு செய்கிறார்களோ அந்த குடும்பத்தில் பணம் சேமிப்பு உயரும். வீண்விரயம் ஏற்படாது. அதேபோல் தண்ணீர் டேப்பில் இருந்து தண்ணீர் சொட்ட கூடாது. அப்படி சொட்டினால் சேமிப்புகள் கரையும் என்பது அர்த்தம்.

தண்ணீரை எப்படி சிக்கனமாக செலவு செய்ய வேண்டுமோ அதே போல தான் கரண்டையும் அதாவது மின்சாரத்தையும் சிக்கனமாக செலவு செய்ய வேண்டும். தேவையில்லாத இடங்களில் மின்சாரத்தை உபயோகப்படுத்த கூடாது. சிலரது இல்லங்களில் அனைத்து அறைகளிலும் மின்விளக்கு எரிந்து கொண்டே இருக்கும். அப்படி எரிந்தாலும் வீட்டில் பணம் தங்காது. மின்விசிறி ஒரு அறையில் ஓடிக்கொண்டிருக்கும், மற்றவர்கள் வேறொரு அறையில் இருப்பார்கள். இப்படி இருந்தாலும் பணம் தாங்காது.

- Advertisement -

பணவிரயம் ஏற்படும் மூன்றாவது மிகவும் முக்கியமான தவறு அதை நாம் தவறு என்று நினைத்ததே கிடையாது, அதுதான் மாதா மாதம் சம்பளம் வாங்கியதும் அந்த சம்பள பணத்தை எடுத்து வந்து பூஜை அறையில் சாமி படங்களுக்கு முன்பாக வைப்பது. இது நல்ல விஷயம் தானே என்று அனைவரும் நினைத்தாலும் அது நல்ல விஷயம் கிடையாது. அப்படி வைத்து எடுக்கும் பொழுது அந்த பணம் வீட்டில் சேராமல் ஏதாவது ஒரு ரூபத்தில் செலவாகிவிடும்.

அதற்கு மாறாக சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட பணத்தை மட்டும் எடுத்து பூஜை அறையில் இருக்கும் சுவாமி உண்டியலில் சேர்க்க வேண்டும். மீதம் இருக்கும் பணத்தை வடமேற்கு மூலையில் இருக்கக்கூடிய வடக்கு பார்த்த பீரோவில் சிவப்பு நிற துணியில் சுற்றி வைக்க வேண்டும். பீரோ வடக்கு பார்த்து வைக்க முடியாது என்று நினைப்பவர்கள் தங்கள் முதுகு வடக்குப் பார்த்தவாறு இருப்பது போல் நின்று பீரோவில் பணத்தை வைக்கலாம்.

இதையும் படிக்கலாமே: நீண்ட நாள் எண்ணம் நிறைவேற கிராம்பு பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த செயல்களை வீட்டில் செய்து பண விரயத்தை குறைத்து சேமிப்பை உயர்த்தலாம்.

- Advertisement -