நம் வாழ்க்கையில் எப்போது, எப்படி திடீரென்று பண கஷ்டம் வரும் என்று தெரியாது. எவ்வளவுதான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து அதில் சிறுக சிறுக சேமித்து வந்தாலும், அந்த பணத்திற்கான செலவை முன்கூட்டியே திட்டமிட்டது போல, கண் முன்னே வந்து நின்று விடும். நாம் ஒன்று நினைக்க, அது ஒன்று நடக்கும். இப்படி திடீரென்று பண கஷ்டம் வரும் போது அவசர தேவைக்கு பணம் கிடைக்க செய்ய வேண்டிய எளிய பரிகாரம் என்ன? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.
திடீரென்று பணக்கஷ்டம் வந்தால், யாரிடம் போய் கேட்பது? என்று நாம் தலையை சொரிந்து கொண்டு நின்று கொண்டிருப்போம். எவ்வளவு கடின உழைப்பாளியாக இருந்தாலும், திடீர் பணக்கஷ்டம் வந்தால், திக்கு முக்காடத்தான் செய்வார்கள். அடுத்தவர்களிடம் சென்று நிற்க வேண்டுமா? என்று நம் ஈகோ ஒரு பக்கம் தடுத்து நிறுத்தும். வேறு ஏதாவது வழியை தேடலாம் என்றால், உடனே அதில் பணம் கிடைக்காது, சிரமப்பட வேண்டி இருக்கும். அவசர தேவைகளுக்கும், திடீரென பணம் வேண்டும் என்று நினைக்கும் போதும், நாம் செய்ய வேண்டிய எளிய பரிகார முறை பற்றிய தகவல்களை தொடர்ந்து காண்போம்.
முதலில் திடீரென்று அளவிற்கு அதிகமாக பணகஷ்டம் வரும் பொழுது, முழு நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் இருக்க பழகுங்கள். எப்படியாவது இந்த கஷ்டத்தில் இருந்து நாம் மீண்டு விடுவோம் என்கிற தன்னம்பிக்கை, கடவுள் மீது வைக்கும் பக்தி ஆகியவை தான் உங்களுக்கு அந்த விஷயத்திலிருந்து மீண்டு வருவதற்கான வழியை காண்பிக்கும். “அய்யய்யோ இவ்வளவு பணத்திற்கு நான் எங்கே போவேன்?” என்று புலம்பினால், பணம் வந்து விடப்போவதில்லை! பணம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் எங்கெல்லாம் இருக்கிறது? என்று பொறுமையாக சிந்தித்துப் பார்க்க வேண்டும், கூடவே இந்த எளிய வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள்.
பூஜை அறைக்கு சென்று அங்கு ஒரு பித்தளை அல்லது செம்பு சிறிய தாம்பாள தட்டு இருந்தால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி நிறைய கல் உப்பை எடுத்து பரப்புங்கள். கல் உப்பை வலது கையில் தான் எடுக்க வேண்டும். கல் உப்பு மஹாலட்சுமியின் ஸ்வரூபம். உப்பு முழுவதுமாக பரப்பிய பின்பு அதன் நடுவில் ஒரு கற்பூர வில்லை ஒன்றை வையுங்கள். கற்பூரத்தை பற்ற வைத்து, உங்கள் இஷ்ட தெய்வம் அல்லது குலதெய்வம் அல்லது மகாலட்சுமி, குபேரன் போன்றவர்களை முன்வைத்து ஹாரத்தி காண்பியுங்கள். கற்பூரம் முழுவதுமாக எரிந்து கரைந்த பின்பு, சிறிது நேரம் கழித்து, அந்த உப்பை தண்ணீர் ஊற்றி கரைக்க வேண்டும்.
ஓம் யக்ஷாய குபேராய வைஶ்ரவணாய தனதான்யாதிபதயே
தனதான்ய சம்பத் குரு குரு ஸ்வாஹா!!
இதையும் படிக்கலாமே:
நன்மைகளைத் தரும் மகாலட்சுமி தீபம்
கற்பூர ஆரத்தி காண்பிக்கும் பொழுது மேற்கூறிய இந்த மந்திரத்தை 11 முறை சொல்ல வேண்டும். நவநதிகளுக்கும் சொந்தக்காரராக இருக்கக்கூடிய குபேர பகவானை வேண்டி, எனக்கு பணம் கொடு என்று கேட்பது போன்ற மந்திரம் ஆகும். மந்திரத்தை சொல்லி பூஜை செய்த பின்பு, உப்பை கரைத்து, அந்த நீரை யாருடைய காலிலும் படாதவாறு வெளியில் கொண்டு போய் ஊற்றி விடுங்கள். இந்த பூஜையை நீங்கள் வெள்ளி அல்லது வியாழன் கிழமைகளில் செய்யலாம். காலை அல்லது மாலை வேளையில் நல்ல நேரம் பார்த்து செய்யுங்கள். பூஜை செய்து பணம் கிடைத்த பின்பு, ஒரு மண் உண்டியலில் தினமும் உங்களால் முடிந்த காசை காணிக்கையாக செலுத்துவேன் என்று பிரார்த்தித்துக் கொள்ளுங்கள், நிச்சயம் பணம் கிடைக்கும்.