பணத்தை ஈர்க்க ரூபாய் நோட்டை இந்த ஒரு பொருளில் இப்படி சுருட்டி வைத்து பாருங்கள்! அதிர்ஷ்ட மழை உங்கள் பக்கம் திரும்பும்.

cash-pattai

பணம் தான் பணத்தை ஈர்க்கும் என்பது பணத்தின் உடைய விதியாகும். பணம் இருக்கும் செல்வந்தர்களிடம் தான் மீண்டும் மீண்டும் பணமானது அதிகமாக சேர்ந்து கொண்டே இருக்கும். அதுவே கஷ்டப்பட்டு உழைக்கும் நபர்களிடம் பணமானது தங்குவது இல்லை. வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும். அதே பார்முலா தான் பணத்திற்கும் நாம் செய்ய வேண்டும். பணத்தை கொண்டு தான் பணத்தை நாம் அதிகமாக ஈர்க்க வேண்டும். அதை எப்படி தாந்த்ரீகமாக செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

dhanalakshmi

ஒரு சில குறிப்பிட்ட பொருட்களுக்கு பணத்தை ஈர்க்கும் வசிய சக்தி உண்டு. அந்தப் பொருட்களை பணம் வைக்கும் இடங்களில் நாம் வைக்கும் பொழுது பணமானது மென்மேலும் பெருகுவதாக நம்பிக்கை உண்டு. இது பணத்தை ஈர்க்கக்கூடிய விதிகளில் ஒன்றாக இருக்கிறது. வாசனை மிகுந்த இடங்களில் தான் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. ஆகவே வாசனை தரக்கூடிய அனைத்து பொருட்களிலும் மகாலட்சுமி ஆனால் நிரந்தரமாக இருப்பார். உதாரணத்திற்கு ஏலக்காய், பச்சை கற்பூரம் ஆகிய பொருட்களுக்கு பணத்தை ஈர்க்கக்கூடிய வசிய சக்தி உண்டு. அவ்வரிசையில் இந்த ஒரு பொருளுக்கும் பணத்தை ஈர்க்கக்கூடிய சக்தி இருப்பதாக கூறப்படுகிறது.

கிராம்பு, சோம்பு, லவங்கம், புனுகு, அரகஜா, ஜவ்வாது ஆகிய பொருட்களுக்கும் பணத்தை ஈர்க்கக்கூடிய வசிய சக்தி உண்டு. அதில் லவங்கப் பட்டைக்கு ஈடு இணை எதுவுமே இல்லை என்று கூறலாம். லவங்கப் பட்டையுடன் சேர்த்து வைக்கப்படும் பணத்திற்கு எங்கே இருந்து வேண்டுமானாலும் பணத்தை ஈர்த்து கொண்டு வரக் கூடிய அற்புதமான வசிய சக்தி உண்டு. அதற்கு முறையான மந்திரங்கள் உச்சரித்து முறையாக பரிகாரம் செய்யும் பொழுது பலனும் அதிகம்.

pattai

பெரிய அளவிலான பட்டை ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். இது புதிதாக வாங்கிய வாசனை மிகுந்த பட்டையாக இருக்க வேண்டும். பழைய பட்டையில் உங்களுக்கு வாசனை அவ்வளவாக இருப்பதில்லை. அது எதுவும் பலன் தருவதும் இல்லை. புதிய லவங்க பட்டையை ஒரு விரல் அளவிற்கு இருக்கும் படியாக எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப 100 ரூபாய், 200 ரூபாய், 500 ரூபாய் ஆகிய தாள்களில் ஏதேனும் ஒன்றை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பட்டையின் மீது ரூபாய் நோட்டை சுருட்டி வைக்க வேண்டும். பின்னர் மஞ்சள் நூல் கொண்டு இறுக்கமாக கட்டிக் கொள்ளுங்கள். இதனை உங்களுடைய பூஜை அறையில் வைத்து நீங்கள் அன்றாட பூஜைகள் செய்யும் பொழுது இதற்கும் சேர்த்து தூப, தீப, ஆராதனைகள் காண்பித்து வர வேண்டும். உங்களுக்கு எப்பொழுதெல்லாம் பண பற்றாகுறை ஏற்படுகிறதோ! அப்பொழுதெல்லாம் இதனை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு கீழ்வரும் இந்த மந்திரத்தை 21 முறை கூற வேண்டும்.

money

மந்திரம்:
‘ஓம் ரீங் வசி வசி ஜனவசியம்
பண வசியம் வசி வசி’

mantra-signature

இதனை நீங்கள் தொழில், வியாபாரம், உத்தியோகம், வீடு என்று எங்கு வேண்டுமானாலும் வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். வியாபாரம் செய்பவர்கள் உங்களுடைய கல்லாப்பெட்டியில் இதனை வைத்துக் கொண்டால் பணமானது வெகுவாக சேர்ந்து நல்ல ஒரு முன்னேற்றம் உண்டாகும். இதனை அடிக்கடிமாற்ற முடியாவிட்டாலும் அதனுடைய வாசனை குறையும் பொழுது மட்டும் மாற்றி விடுவது நல்லது. கட்டாயம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் இதற்கு தூபம் காண்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.