ஒவ்வொருவரும் பணத்தேவையை பூர்த்தி செய்வதற்கு போதுமான அளவு பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக தான் ஒரு வேலையில் சேர்கிறார்கள் அல்லது தொழிலை தொடங்குகிறார். தொழிலை தொடங்க நினைப்பவர்களுக்கு பல பிரச்சனைகளும் போராட்டங்களும் இருக்கும். வேலை செய்பவர்களுக்கு வேலை கிடைத்தால் போதும். அந்த வேலையை சிறப்பாக செய்தால் போதும் என்ற ஒரு நிலை இருக்கும்.
ஆனால் தொழில் செய்பவர்களுக்கு தொழிலை தொடங்குவதற்குரிய முதலீடு என்பது வேண்டும். அந்த தொழில் தொடர்பான அறிவு வேண்டும். அந்த முதலீட்டை பயன்படுத்தி சரியான நேரத்தில் தொழிலை தொடங்க வேண்டும். தொழிலில் இருக்கக்கூடிய நுணுக்கங்களை உணர்ந்து அந்த தொழிலை திறம்பட மேல் எடுத்துச் செல்ல வேண்டும். தொழிலில் இருக்கக்கூடிய போட்டிகளை சமாளிக்க வேண்டும். தொழிலை லாபகரமாக நடத்த வேண்டும். ஒரு மாதத்தில் லாப ம் வந்துவிட்டால் அடுத்த மாதம் அதைவிட அதிகமாக லாபத்தை பெறுவதற்காக உழைக்க வேண்டும்.
இப்படி பல விதமான சவால்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை என்பது உண்டாகும். இவற்றில் ஏதாவது ஒன்றை நம்மால் செய்ய முடியவில்லை என்றால் தொழிலில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாது. அதே சமயம் நஷ்டம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் எந்த தீபத்தை எந்த தெய்வத்திற்கு எப்படி ஏற்றி வழிபட்டால் நம் தொழிலில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளும் தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தொழில் முடக்கமும் பணம் முடக்கமும் நீங்க தீப வழிபாடு
நமக்கு எங்காவது அடிபட்டுவிட்டது என்றால் அப்பா என்று கூறுவோம் அல்லது அம்மா என்று கூறுவோம். அதே போல் தான் நம் வாழ்க்கையில் பிரச்சனைகளும் கஷ்டங்களும் வரும்பொழுது நம்முடைய குலதெய்வத்தை தான் நாம் முதலில் அழைக்க வேண்டும். அடுத்ததாக தான் இஷ்ட தெய்வத்தை அழைக்க வேண்டும். அந்த வகையில் இந்த தீப வழிபாட்டை நம்முடைய குலதெய்வத்தின் ஆலயத்தில் செய்வது என்பது மிகவும் சிறப்பு. குலதெய்வ ஆலயம் வெகு தூரத்தில் இருக்கும் பட்சத்தில் இஷ்ட தெய்வத்தின் ஆலயத்தில் இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்யலாம்.
இந்த தீபத்தை ஏற்றக்கூடிய நாள் என்பது முழு பௌர்ணமி நாள். அன்றைய தினம் அருகில் இருக்கக்கூடிய குலதெய்வத்தின் ஆலயத்திற்கோ அல்லது இஷ்ட தெய்வத்தின் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். உங்களால் முடிந்த பொருட்களை கோவிலுக்கு வாங்கிக் கொடுக்கலாம். இதோடு மட்டுமல்லாமல் 27 புது அகல் விளக்குகளை வாங்கி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் சுத்தமான பசு நெய்யையும் வாங்கிக் கொள்ளுங்கள். இதற்கு அடுத்தார் போல் பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய திரியையும் வாங்கிக் கொள்ளுங்கள்.
இப்பொழுது நேராக கோவிலுக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய மூலவரின் முன்பாக இந்த 27 விளக்குகளையும் வைத்து அதில் நெய் ஊற்றி பச்சை நிறத்திரியை போட்டு தீபம் ஏற்றுங்கள். இவ்வாறு தீபம் ஏற்றி முடித்த பிறகு அந்த தீபத்திற்கு முன்பாக அமர்ந்து உங்களுடைய குலதெய்வத்தை நீங்கள் மனதார நினைத்து தியான நிலையில் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது அந்த ஆலயத்தில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நம்மிடம் இருக்கக்கூடிய பிரச்சனைகளை சமாளிப்பதற்குரிய திறமை என்பது நமக்குள் ஏற்படும்.
அதாவது எதிர்மறை ஆற்றல்களை விலக்கி நேர்மறை ஆற்றல்களை உண்டாக்கும். அங்கு நடக்கக்கூடிய அபிஷேகத்தில் கலந்து கொள்ளலாம். இப்படி செய்வதன் மூலம் நமக்கு தொழிலில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் மட்டுமல்லாமல் வாழ்க்கையில் இருக்கக் கூடிய பிரச்சனைகளை தீர்ப்பதற்குரிய எண்ணங்கள் நம்மை அறியாமலேயே நம்முடைய உள் மனதில் தோன்றும்.
இதையும் படிக்கலாமே: கஷ்டங்கள் காணாமல் போக சிவன் கோவில் வழிபாடு
இந்த தீப வழிபாட்டை முழுமனதுடன் செய்பவர்களுக்கு அவர்களுடைய பிரச்சனைகள் தீர்ந்து நல்ல நிலைக்கு முன்னேற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.