பணம் இல்லாமல் வாழ்வது என்பது இந்த காலத்தில் சாத்தியம் இல்லாத ஒரு விஷயம். இந்த பணத்தை சம்பாதிக்கவும், சேமிக்கவும் தான் இன்று பலரும் அல்லும் பகலும் பாடுபட்டு உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உழைத்து பாடுபட்டால் மட்டும் பணம் நம்மிடம் பெருகி விடும் என்றால் அது சந்தேகம் தான். பணம் பன்மடங்கு பெருக வேண்டும் என்றால், பண ஈர்ப்பு சக்தி நம்மிடம் இருக்க வேண்டும். அதை எப்படி பெறுவது என்பதை இந்த ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வீட்டில் பணம் சேர பரிகாரம்
இந்த பரிகாரத்தை செய்ய நம்முடைய பிறந்த தேதி மிகவும் அவசியம். அதாவது நம்முடைய பிறந்த தேதி, மாதம், வருடம் உள்ள எண்கள் வரும் நோட்டுக்களை முதலில் நாம் பத்திரப்படுத்த வேண்டும். ஒருவரின் பிறந்த தேதி 3.5.90 என்று வைத்துக் கொள்வோம். உங்களிடம் வரும் ரூபாய் நோட்டில் கடைசி எண் 03,05,90 என முடிய வேண்டும். இதுவே உங்களுடைய பிறந்த தேதி 13.10.90 எனில் ரூபாய் நோட்டின் கடைசி எண்கள் 13,10,90 என என முடிய வேண்டும். இப்படி மூன்று நோட்டுகளை நீங்கள் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதாவது உங்களின் பிறந்த தேதி எண் உள்ள ஒரு நோட்டு, மாதம் உள்ள ஒரு நோட்டு, வருடம் உள்ள ஒரு நோட்டு என மூன்று நோட்டுக்களை எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த பணத்தை நாம் எடுத்து செலவழிக்க கூடாது. எனவே அதிக தொகையாக எடுத்து வைக்காமல் பத்து இருபது ரூபாய் நோட்டுகளாக இருந்தால் நல்லது.
இப்போது பச்சை நிறத்திலான தூய பட்டு துரூபாய் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். இது மிகச் சிறிய அளவிலான துணியாக இருந்தால் கூட போதும். அந்த துணி ஒரு சிறிய பை போல தைத்துக் கொள்ளுங்கள். இப்போது உங்கள் கையில் இருக்கும் அந்த மூன்று நோட்டுகளையும் தனித்தனியாக மடித்து ஒவ்வொரு நோட்டையும் அந்த பச்சை நிறத்திலான பட்டுத் துணியில் வைக்க வேண்டும். இதை வைக்கும் போது பச்சை கற்பூரம், கிராம்பு, ஏலக்காய் மூன்றையும் சேர்த்து வைக்க வேண்டும். இப்படி வைக்கும் போது இந்த பணம் எனக்கு பல மடங்கு பெருக வேண்டும் என்று மகாலட்சுமி தாயாரை மனதார வேண்டிக் கொண்டு, அவர்களின் பாதத்தில் இந்த பணப்பையை வைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு இந்தப் பையை நீங்கள் நகை பணம் வைக்கும் இடத்தில் கொண்டு வைத்து விடுங்கள். அவ்வளவு தான் பரிகாரம் முடிந்தது. ஆனால் இந்த பணத்தை எடுத்து செலவு செய்யக் கூடாது. ஒரு முறை வைத்து அப்படியே இருக்க வேண்டும். நீங்கள் வெள்ளிக்கிழமை, விஷேச நாட்களில் இந்த பணபைக்கு சாம்பிராணி தூபம் மட்டும் காட்டி வைத்து விடுங்கள். இந்த பணப்பை இருக்கும் இடத்தில் பண ஈர்ப்பு அதிகமாகி செல்வம் பெருகிக் கொண்டே இருக்கும். இந்த பணப்பை இருக்கும் இடத்தில் நிச்சயம் பணம் தங்கும், வீண் விரயங்கள் தடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: நிலை வாசலில் இந்த விளக்கை ஏற்றினால், உங்கள் வீட்டிற்குள் பண பிரச்சனை, கடன் பிரச்சனை நுழையவே நுழையாது.
இந்த பணத்பை ரூபாய் நோட்டு பரிகாரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நீங்களும் இந்த பரிகாரத்தை செய்து பண பற்றாக்குறை இல்லாத ஒரு நிலையை பெறலாம் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.