- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணம் பொருள் பல மடங்கு பெருக இந்தத் தாமரை விளக்கு பூஜையை எவ்வாறு செய்ய வேண்டும்

பணம் பொருள் பல மடங்கு பெருக இந்தத் தாமரை விளக்கு பூஜையை எவ்வாறு செய்ய வேண்டும்

- Advertisement -

அக்காலம், இக்காலம், எக்காலமாக இருந்தாலும் மனிதன் உழைத்தால் மட்டுமே உயர முடியும். அவ்வாறு ஒவ்வொரு மனிதர்களும் தங்களின் உழைப்பை கொட்டி கொடுத்துதான் வாழ்வில் முன்னேற முடியும். ஆனால் இன்றைய சமுதாயத்தில் கடினமாக உழைப்பவர்களுக்கு கிடைக்கின்ற ஊதியம் சிறிதளவே. தெளிவான அறிவுடன் சிறந்த கல்வி ஞானத்துடன் இருப்பவர்கள் கடினமாக உழைப்பவர்களை விட அதிகமான வருமானம் ஈட்டுகிறார்கள். எனவே இவர்கள் இருவரின் வாழ்க்கை தரமும் வெவ்வேறு விதமாக இருக்கிறது. இவ்வாறு சிறந்த கல்வி ஞானத்தை பெறுவதற்கும் பணம் அதிகமாக தேவைப்படுகிறது. எனவே பணமும் பொருளும் ஒருவரிடம் பெருகி கொண்டே இருக்க இந்த தாமரை விளக்கு பூஜையை தவறாமல் செய்திட வேண்டும். வாருங்கள் இந்த விளக்குப் பூஜையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

velai

பணம் இருப்பவரிடமமே அதிக அளவு பணம் சேர்ந்து கொண்டு இருக்கிறது. நாமும் கஷ்டப்பட்டுதான் உழைக்கின்றோம் நம்மிடம் எதுவுமே தாங்க வில்லையே என்று பலரும் புலம்பிக் கொண்டிருப்பதைப் கேட்டிருப்போம். இதற்கு உதாரணமாக வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் நமது சமுதாயத்தில் பணக்காரர்களாகவும் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் அவர்களிடம் வேலை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

- Advertisement -

இதற்குக் காரணம் என்னவென்றால் அவர்களுக்கு பணத்தின் அருமை அதிகமாகதெரிந்திருக்ககிறது. அவர்கள் எப்பொழுதும் பணத்தை ஒருவரிடம் இருந்து வாங்கும் பொழுது கண்ணில் ஒற்றி அதனை சுவாமி படத்தின் முன் வைத்து விட்டு அதற்கான மரியாதை செலுத்திய பின்னர் தான் தங்களிடம் வைத்துக்கொள்வார்கள். இவ்வாறு பல சூட்சம காரியங்களை அவர்கள் பின்பற்றி வருவதால் தான் அவர்களிடம் பணம் சேர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே அவர்கள் செய்யும் ஒரு சில சூட்சம பூஜைகளை நாமும் பின்பற்றி வந்தால் நம்மிடமும் பொன், பொருள், செல்வம், செல்வாக்கு அனைத்துமே பெருகிக் கொண்டே இருக்கும்.

cash

நாம் எப்படி ஒருவர் வீட்டிற்கு செல்லும் பொழுது அவர்கள் நம்மிடம் காட்டும் மரியாதையை பொறுத்து அந்த வீட்டில் இருப்பதும், மறுபடியும் அந்த வீட்டிற்கு செல்வத்தையும் நாம் முடிவு செய்வோம். அவ்வாறு பணம் மற்றும் நகை இவை இரண்டுமே மகாலட்சுமியின் அம்சம் வாய்ந்தவை. இவற்றிற்கு நாம் எந்த அளவு மரியாதை செலுத்துகிறோமோ அந்த அளவிற்கு நம்மிடம் நிரந்தரமாகவும் பல மடங்காகவு பெருகிக் கொண்டே இருக்கும்.

- Advertisement -

முதலில் ஒரு தாமரை மலரை எடுத்துக் கொள்ள வேண்டும். அது மொட்டாக இருந்தது என்றால் அதன் உச்சியில் உள்ளங்கையை வைத்து லேசாகத் தட்டினால் இதழ்கள் அனைத்தும் விரிய ஆரம்பிக்கும். அவ்வாறு அனைத்து இதழ்களையும் கைகளால் விரித்து வைத்துக் கொள்ள வே ண்டும். பின்னர் ஒரு சிறிய கண்ணாடிக் கிண்ணத்தில் பச்சரிசியை நிரப்பிக் கொண்டு அதன் மீது இந்த தாமரை மலரை வைத்து அதன் நடுவே ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்றி திரி போட்டு வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.

lotus

பின்னர் மகாலட்சுமி தேவியை மனதார நினைத்து கொண்டு நமக்கு வேண்டிய வரங்களை கேட்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை இந்த தீபத்தை ஏற்றி வந்தால் நம்மிடம் செல்வம், செல்வாக்கு, பணம், பொருள் அனைத்துமே நாம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு பெருகி கொண்டே செல்லும்.

சற்று முன்