உங்க பீரோவில் இதை மட்டும் தெரியாம கூட வச்சிராதீங்க. அப்புறம் பணம் சேரவே சேராது. பணமானது வீண் விரயமாகி கடன் சுமை அதிகரிக்க இதுவே காரணமாகி விடும்.

- Advertisement -

பணம் சேர வேண்டுமென்று நாம் நாளெல்லாம் உழைப்பதோடு வழிபாடு, பரிகாரம் என ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்து வருகிறோம். இதையெல்லாம் செய்தாலும் கூட வீட்டில் நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகளால் பணமானது நம்மிடம் தங்காமல் செலவழிவதுடன், கடன் சுமையும் அதிகரித்து விடும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன தவறு அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பணம் வரவானது தடையில்லாமல் இருக்க வேண்டும் என்றால் வீட்டில் ஒவ்வொன்றும் அது அது இருக்க வேண்டிய இடத்தில் இருப்பது மிகவும் முக்கியம். சமையலறை, படுக்கையறை, பூஜையறை இப்படி ஒவ்வொன்றும் அதற்கான திசையில் அமைந்து இருந்தால் மட்டுமே அங்கு பண வரவு தடையில்லாமல் இருக்கும். இவையெல்லாம் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது அதை அளவு முக்கியம்துவம் வாய்ந்தது வீட்டில் நாம் வைக்கும் பீரோ. இப்போது இந்த பதிவில் நாம் பீரோவை வைக்கும் திசை அதை எப்படி வைக்க வேண்டும். அதில் என்னெல்லாம் வைக்கக் கூடாது என்பதை தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

ஒரு வீட்டில் தென்கிழக்கு மூலை அதாவது குபேர மூலை, கன்னி மூலை என்று சொல்வார்கள் அந்த இடத்தில், தான் பீரோவை வைக்க வேண்டும். பீரோவின் கதவானது வடக்கே பார்த்தவாறு இருக்க வேண்டும். அதாவது நாம் பீரோவை திறக்கும் போது நம் முதுகு வடக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். இது தான் பீரோ வைக்க வேண்டிய சரியான திசை.

இந்த பீரோவில் தான் நாம் பணம் வைத்து எடுத்து புழங்குவோம் அப்படி இருக்கும் போது இந்த பீரோவை எப்பொழுதும் லட்சுமி கடாட்சத்துடன் வைத்திருக்க வேண்டும். ஒரு சிலர் வீட்டில் உடுத்திய பழைய அழுக்குத் துணிகளை ஒரு முறை தானே உடுத்தினோம் மீண்டும் ஒரு முறை உடுத்திய பிறகு துவைக்கலாம் என நினைத்து உள்ளே மடித்து வைப்பார்கள் அந்தத் தவறை ஒரு நாளும் செய்யவே கூடாது.

- Advertisement -

அப்படி துணிகளை வைக்கும் பொழுது அந்த இடத்தில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் அதிகரித்து பணவரவை முற்றிலும் தடை படுத்தி விடும். வீட்டில் ஆங்காங்கே அழுக்குத் துணிகளை போட்டு வைத்தாலே தரித்திரம் பிடிக்கும், கடன் சேரும் என்று நம் முன்னோர்களும் சொல்ல கேள்விப்பட்டிருக்கும். ஆனால் பண வைத்து எடுத்து பயன்படுத்தும் இடத்தில் இது போன்ற செயலை செய்யும் போது நிச்சயம் அந்த இடத்தில் தரித்திரம் உண்டாகி பணவரவு தடைப்பட்டு விடும்.

எப்பொழுதும் பீரோவில் துணிகளை வைக்கும் போது துவைத்து சுத்தமாக மடித்து வைத்து நேர்த்தியாக பராமரிக்க வேண்டும். அது மட்டும் இன்றி துணிகளில் நறுமணத்திற்காக ஏதேனும் வாசனை திரவியங்களை போட்டு வைக்க வேண்டும். பணம் வைக்கும் இடத்தில் துணிகளை வைக்கக் கூடாது முடிந்த அளவிற்கு பீரோவின் முதல் அடுக்கில் சிகப்பு நிற துணி விரித்து அதில் பணம் வைத்து எடுத்து புழங்குவது நல்லது. அல்லது லாக்கரில் இதே போன்று சிகப்பு நிற துணி வைத்து கொஞ்சம் பச்சை கற்பூரம், மல்லிகை மலர், ஏலக்காய், கிராம்பு போன்றவற்றை வைத்து அதற்கு மேல் பணத்தை வைக்கலாம்.

- Advertisement -

அதே போல் பீரோவில் பணத்தை வைக்கும் பொழுது சரியாக அடக்கி வைக்க வேண்டும். அப்படி இல்லாமல் பணத்தை சரியாக அடுக்காமல் கண்டபடி போடக்கூடாது. அது 100 ரூபாய் பணமாக இருந்தாலும் சரி, சில்லறை பணமாக இருந்தாலும், சரி அதை அடக்கி வைத்து தான் கையாள வேண்டும். இப்படி வைக்கும் பணத்தில் கொஞ்சம் புனுகு தடவி வைக்கும் பொழுது பணவரவானது அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

இது மட்டும் இன்றி சில வீடுகளில் பீரோவை துடைக்காமல் பீரோவின் மேல் தூசு படிந்து இருக்கும். அது போலவும் வைத்திருந்தால் அங்கு எதிர்மறையாற்றல் தான் நிறைந்திருக்கும். அதே போல் பீரோவை நாம் மாதத்திற்கு ஒரு முறையாவது கொஞ்சமாவது அசைத்து விட வேண்டும். ஒரே இடத்தில் அசைக்காமல் அப்படியே வைக்கும் போது அந்த இடத்தில் எதிர்மறையை ஆற்றலானது பரவத் தொடங்கி விடும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: காணாமல் போனவை மீண்டும் உங்களை வந்து சேர மூன்று நாட்கள் இப்படி தீபத்தை ஏற்றினால் போதும். நீங்கள் இழந்தது எதுவானாலும் உங்களை நிச்சயம் வந்து சேர்ந்து விடும்.

எந்த ஒரு பொருளாக இருந்தாலும் நாம் அதற்கு கொடுக்கும் முக்கியத்துவமும் அதை பராமரிக்கும் விதமும் தான் அது நம்மிடம் நிலைத்து நிற்கும். அதே போல தான் இந்த பணமும். உங்களிடம் இருப்பது 10 ரூபாயாக இருந்தாலும் அதை சரியான முறையில் பத்திரமாக வைத்து எடுத்து பயன்படுத்தினால் தான் அது பல மடங்காக பெருக்கும். இந்த தவறை நீங்களும் தெரியாமல் செய்திருந்தால் அதை சரி செய்து கொண்டு, உங்களுக்கான பண வரவு தடையை நீக்கி கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.

- Advertisement -