பணம் தடையே இல்லாமல் சேர்ந்து கொண்டே இருக்க எப்பொழுதும் உங்கள் கையில் இருக்கும் ‘கர்ச்சீஃபில்’ இந்த 1 பொருளை வைத்துக் கொண்டால் போதுமே!

madhulai-cash

பணம் என்பது எல்லோருக்கும் முக்கியம் தான். நம் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், ஆடம்பர ஆசைகளை நிறைவேற்றுவதற்கும் மட்டுமல்ல! அறிவைப் பெறவும், மருத்துவத்தை பெறவும் கூட பணமானது இன்று இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அப்படி இருக்கும் பொழுது பணமே வேண்டாம்! என்று ஒதுக்கி வைத்து விட முடியாது. பணத்தை சம்பாதிப்பது மட்டும் அறிவல்ல! அதனை எப்படி தக்க வைத்துக் கொள்வது? என்பதிலும் சூட்சமம் உள்ளது. அதனைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

money

பணத்தை சேமிக்கும் சூட்சுமத்தை அறிந்து கொள்வதை விட, அதை செலவு செய்யும் சூட்சமத்தை தெரிந்து கொண்டால் பணமானது மேலும் மேலும் உங்களிடம் சேரும். பொத்தி பொத்தி உங்கள் வீட்டு பீரோவில் பணத்தை பதுக்கி வைத்தால் பணம் சேர்ந்து விடாது. அந்தப் பணத்திற்கு உரிய செலவு இந்த பிரபஞ்சம் உங்களுக்கு தயாராக வைத்திருக்கும்.

பிரபஞ்சத்திடம் இருந்து பணத்தை எப்படி பரித்துக் கொள்வது? என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பதுக்கி வைப்பதால் பணம் சேரும் என்பது முட்டாள் தனமான சிந்தனையாகும். பணத்தை தாராளமாக முதலில் செலவு செய்ய கற்றுக் கொள்ளுங்கள். ஐயோ! பணத்தை செலவு செய்து விட்டால் அடுத்து என்ன செய்வது? என்று யோசனை இருக்கக் கூடாது. பத்து ரூபாய் செலவு செய்தால் நூறு ரூபாய் வரும் என்கிற தன்னம்பிக்கை வேண்டும்.

money

மாத சம்பளம் வாங்கினால் கூட அவர்களுக்கு அந்த வருமானத்தை தவிர வேறு வருமானம் இருப்பதில்லை. ஆனால் அவர்களும் அந்த ஒரு வருமானத்தை நம்பி இல்லாமல், வேறு சில வருமானங்களையும் பெறும் படியாக தன்னை இன்னும் முன்னேற்றிக் கொள்ள வேண்டும். 100 ரூபாய் ஒரு நாளைக்கு ஏதாவது ஒரு முறையில் சுலபமாக நீங்கள் சம்பாதிக்க கற்றுக் கொண்டால் செலவு செய்ய தயங்கவும் தேவை இல்லை. சுயதொழில் புரிபவர்கள் எப்பொழுதும் பணத்தை செலவு செய்வதில் கஞ்சத்தனம் காட்டுவது கூடாது. அதுபோல் வீணாக விரயமும், தேவையில்லாத செலவுவும் செய்யவும் கூடாது. நீங்கள் செலவு செய்யும் பணம் ஆனது உங்களுக்கு புண்ணியத்தை சேர்க்கும் வண்ணம் அமைய வேண்டும். அப்பொழுது தான் இந்த பிரபஞ்சம் பணத்தை உங்களுக்கு வாரி வழங்கிக் கொண்டே இருக்கும்.

நீங்கள் கைகுட்டை பயன்படுத்துபவர்களாக இருந்தால்! உங்கள் கைக்குட்டையில் இந்த பொருளை வைத்து பாருங்கள். பணமானது பெருகிக் கொண்டே இருக்கும். நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்றாலும் பணம் உங்களை தேடி விரும்பி வரும். மாதுளை மரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. மாதுளை மரத்தின் குச்சியை சிறிய அளவில் உடைத்துக் கொள்ளுங்கள். அதனை உங்களுடைய பூஜை அறையில் வைத்து ஒரு மண்டலம் வரை அதாவது 48 நாட்கள் வரை பூஜை செய்யுங்கள். சாதாரணமாக நீங்கள் தூப, தீபம் காண்பிப்பது போல காண்பித்தால் போதுமானது. அதன் பிறகு அந்த குச்சியை உங்களுடைய கைக்குட்டையில் முடிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

madhulai1

நீங்கள் பயன்படுத்தும் எல்லா கைக்குட்டைகளிலும் இதுபோல் ஒவ்வொரு குச்சியை வைத்து முடித்துக் கொள்ளுங்கள். துவைக்கும் போது அப்படியே துவைத்துக் கொள்ளலாம். அதனை மீண்டும் பிரிக்க கூடாது. இந்த கைக்குட்டையை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், உங்கள் கைகளில் பணம் தடையில்லாமல் சேர்ந்து கொண்டே இருக்கும். வாரம் ஒரு முறை மனமுவந்து ஒருவருக்கு அன்னதானம் செய்யுங்கள். உங்களிடம் யாசகம் கேட்டு வருபவர்களுக்கு பணமாக நீங்கள் ஒரு பொழுதும் உதவி செய்யக் கூடாது. 50 ரூபாய்க்கு உணவு பொட்டலம் வாங்கி கொடுத்தால் கூட போதும்! உங்களுடைய புண்ணிய கணக்கு உயரும்.