குலதெய்வத்தை வேண்டி, இந்த முடிச்சை கட்டி வைப்பவர்களுக்கு எதிர்பார்த்த பணம் 7 நாட்களில் கைக்கு வந்து சேரும்.

perumal-cash

குலதெய்வத்தை வேண்டி நாம் செய்யும் எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும், அதற்கான பலனை உடனடியாக நம்மால் பெறமுடியும். முழு நம்பிக்கையோடு பரிகாரத்தை செய்தால்! அந்த வரிசையில், இன்று இந்த பதிவின் மூலம் சொல்லப்பட்டிருக்கும், இந்த பரிகாரத்தை குலதெய்வ ஆசீர்வாதத்தோடு தான் நாம் செய்யப் போகின்றோம். சில பரிகாரங்களை வீட்டில் செய்து பார்த்து பலனளிக்காத பட்சத்தில், அதை குலதெய்வ கோவிலுக்கு சென்று செய்தோமே ஆனால், அதன் மூலம் நமக்கு முன்னோர்களின் ஆசீர்வாதம் பெறப்பட்டு, குலதெய்வத்தின் ஆசீர்வாதமும் பெறப்பட்டு, பரிகாரத்திற்கான பலன் இரட்டிப்பாக உடனடியாக கிடைக்கும் என்பதில் ஒரு துளி அளவுகூட சந்தேகமே இல்லை.

kadan

உங்களுடைய பணக் கஷ்டத்தை தீர்ப்பதற்கு உங்களுக்கு தேவையான பணம் உங்கள் கைக்கு வந்து சேருவதற்கு, உங்கள் கடன் பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு, உங்களுக்கு இந்த தாந்த்ரீக பரிகாரம் மிகவும் உதவியாக இருக்கும். மிக மிக சுலபமாக சொல்லப்பட்டுள்ள இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு ஒரே ஒரு முறை செய்து பாருங்கள். பலன் அளித்தால் லாபம் அடைய நிறைய உள்ளது. பலனளிக்கவில்லை என்றால் நஷ்டம் அடைவதற்கு எதுவுமே இல்லை என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை தொடங்கலாம்.

மஞ்சள் நிற பட்டுத் துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை கொஞ்சமாக பன்னீரில் நனைத்து உலர வைத்துக் கொள்ளுங்கள். துணி வாதமாக இருக்க வேண்டும். இந்த துணியுடன் கொண்டைக்கடலை 9 (வேகவைக்காத கொண்டைக்கடலை), பச்சைக் கற்பூரம் 9 சிறிய துண்டுகள், சோம்பு 9, மிளகு 9, ஏலக்காய் 9, இந்த ஐந்து பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

Kondai Kadalai

உங்களுடைய குலதெய்வ கோவிலில் தான் கட்டாயம் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். கையில் இருக்கும் பொருட்களை எல்லாம் அப்படியே வைத்துக்கொண்டு, குலதெய்வத்தை தரிசனம் செய்துவிட்டு, கோவில் பிரகாரத்தில் உள் பகுதியிலேயே அமர்ந்து, அந்த மஞ்சள் துணியில் கொண்டகடலை, ஏலக்காய், பச்சை கற்பூரம், சோம்பு, மிளகு இந்த ஐந்து பொருட்களையும் வைத்து ஒரு சிறிய முடிச்சு போல் கட்டிக்கொள்ளுங்கள். இந்த முடிச்சை கட்டும்போது குலதெய்வத்தின் பெயரை மனதிற்குள் உச்சரித்துக்கொண்டே கட்டுங்கள்.

- Advertisement -

இந்த முடிச்சை உங்கள் உள்ளங் கைகளில் வைத்துக்கொண்டு உங்களுக்கு இருக்கக்கூடிய பணக்கஷ்டம் விரைவாக தீர, வழிகளை அந்த ஆண்டவன், உங்கள் வீட்டு குல தெய்வம் உங்களுக்கு காண்பிக்க வேண்டும் என்று மனதார உச்சரித்து, வேண்டி குலதெய்வ கோவிலில் நமஸ்காரம் செய்துவிட்டு, இந்த முடிச்சை கொண்டு வந்து உங்களுடைய பணப் பெட்டியில் வைக்க வேண்டும்.

manjal-mudichu

குலதெய்வ கோவிலில் வெள்ளிக்கிழமை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்தால் பரிகாரத்திற்கு பலன் பல மடங்கு பெருகும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை. குலதெய்வ கோவில் தெரியாதவர்கள், இந்த பரிகாரத்தை லட்சுமி குபேரரை நினைத்து உங்களுடைய வீட்டிலேயே செய்து, இந்த முடிச்சினை பணப்பெட்டியில் வைத்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள். நல்ல பலன் இருக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
ஆண்களின் முன்னேற்றம் தடைபட இதுவும் ஒரு காரணம். வீட்டில் இருக்கும் ஆண்கள், பெண்களிடம் பேசவே கூடாத வார்த்தைகளில் இதுவும் ஒன்று.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.