ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது ஒரு கஷ்டத்தை நாம் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த கஷ்டங்களில் பல கஷ்டங்களில் இருந்து நம்மால் வெளியில் வந்து விட முடியும். ஆனால் சில கஷ்டங்களில் இருந்து வெளியில் வருவதற்கு மிகுந்த போராட்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதோடு மட்டுமல்லாமல் அந்த கஷ்டங்கள் தொடர்ந்து கொண்டே வருவதற்குரிய வாய்ப்புகளும் ஏற்படும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் மிளகை வைத்து இந்த முறையில் பரிகாரம் செய்ய நாம் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் பரந்தோடி விடும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவு நாம் பார்க்க போகிறோம்.
கஷ்டங்களை தீர்க்கும் மிளகு பரிகாரம்
இன்று சனிக்கிழமை உடன் சேர்ந்து வரக்கூடிய சனி பிரதோஷம். நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கர்ம வினைகளை தீர்க்கும் கிரகமாக திகழக்கூடியவர் சனீஸ்வர பகவான். அவருக்குரிய கிழமையான இந்த கிழமையில் பிரதோஷம் வருவதால் இன்றைய தினம் சிவ வழிபாடு என்பது சிறப்புக்குரியதாக இருக்கும். சிவ வழிபாட்டை நாம் மேற்கொள்ளும் பொழுது நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தேய்பிறை போல தேய்ந்து கொண்டே சென்றுவிடும் என்று கூறப்படுகிறது.
இதோடு இன்றைய தினம் மாதத்தின் கடைசி நாள் அதாவது 31 ஆகஸ்ட். இன்றைய தினத்தில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரம் நம்முடைய கஷ்டங்களை தீர்க்கக்கூடிய பரிகாரமாக இருக்கும். இந்த பரிகாரத்திற்கு எந்த வித நிபந்தனையும் கிடையாது. பெண்கள் வீட்டிற்கு தூரமான சூழ்நிலையில் இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்தை இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக செய்ய வேண்டும்.
நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்களுக்கு காரணமாக திகழ்பவர் சனி பகவான் என்றால் மற்றொரு பக்கத்தில் ராகு பகவானும் காரணமாக திகழக்கூடியவர்தான். அவருக்குரிய எண்ணாக கருதப்படுவது நான்கு. இன்று தேதி 31 இதன் கூட்டுத் தொகையும் 4 என்பதால் ராகுவிற்குரிய பரிகாரமாகவும் இந்த பரிகாரம் திகழ்கிறது.
இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்துக் கொண்டு அதில் இந்த மாதம் முழுவதும் நீங்கள் அனுபவித்த கஷ்டங்கள் என்னென்ன. எந்த கஷ்டங்கள் எல்லாம் உங்களுக்கு தீர வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அது அனைத்தையும் எழுத வேண்டும். பிறகு அதில் நான்கு மிளகை வைத்து நன்றாக மடித்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது வீட்டிற்கு வெளியே வந்து அந்த மிளகு மடித்த பேப்பரை உங்கள் தலையை மூன்று முறை வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் மூன்று முறை சுற்ற வேண்டும். இப்படி சுற்றி முடித்த பிறகு அந்த பேப்பரை பத்த வைத்து விட வேண்டும். பேப்பர் நன்றாக எரியும். அப்படி எரியும் பொழுது உள்ளிருக்கும் மிளகானது வெடிக்கும். இப்படி வெடித்து எறிவதன் மூலம் நம்முடைய கஷ்டங்களும் ஒன்றும் இல்லாமல் வெடித்து எரிந்து சாம்பலாக போய்விடும் என்று கூறப்படுகிறது.
இந்த பேப்பர் எரியும் பொழுது நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கிவிட்டது என்ற எண்ணத்துடன் நாம் அது எரிவதை பார்க்க வேண்டும். முழுவதுமாக எரிந்து முடிந்த பிறகு அதை அப்படியே அள்ளி கால்படாத இடத்தில் போட்டு விட வேண்டும். பிறகு வீட்டிற்குள் வந்து முகம் கை கால்களை கழுவி கொள்ளுங்கள்.
அடுத்ததாக எந்த இடத்தில் படுத்து உறங்குவீர்களா அந்த இடத்தில் ஒரு கண்ணாடி டம்ளர் தண்ணீரை எடுத்து அதில் கல் உப்பை போட்டு வைத்து விட வேண்டும். நீங்கள் படுக்கும் அறையில் தான் வைக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் இந்த தண்ணீரை கால்படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உங்களுடைய கஷ்டங்களும், எதிர்மறை ஆற்றல்களும் முற்றிலும் நீங்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு திருஷ்டி
இந்த எளிமையான அதே சமயம் சக்தி வாய்ந்த பரிகாரத்தை வீட்டில் இருக்கும் அனைவரும் செய்வதன் மூலம் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நாளை எப்படி புது மாதம் பிறக்கிறதோ அதேபோல் நம்முடைய வாழ்க்கையும் புதுமையாக இருக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.