சமையல் அறையில் இருக்கும் இந்த 1 பொருளுக்குள் இவ்வளவு பெரிய சக்தி மறைந்து உள்ளதா? இது தெரிந்திருந்தால் என்றைக்கோ கோடீஸ்வரராகி இருக்கலாமே!

cash

பரிகாரம் செய்யும் அளவிற்கு எங்களிடத்தில் நேரமில்லை, பணத்தை ஈர்க்கும் பொருளை வாங்கி வைத்துக் கொள்ள கையில் பணமும் இல்லை. பரிகாரத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் பரவாயில்லை. உங்களுக்கு இருக்கக்கூடிய பண கஷ்டத்தை போக்க, இதை முயற்சி மட்டும் செய்து பாருங்கள். நம்முடைய வீட்டு சமையலறையில் இருக்கும் இந்தப் பொருளை இப்படி செய்து பார்ப்பவர்களுக்கு, நிச்சயம் ஏதாவது ஒரு ரூபத்தில் வருமானம் கைக்கு வந்து சேரும். அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை.

perungayam

பெரும் காயங்களை கூட, சுலபமாக போக்க கூடியது, பெருங்காயம் என்று சொல்லுவார்கள். நம் உடலில் இருக்கக்கூடிய, உடல் உபாதைகள் பலவற்றை நீக்கக் கூடிய சக்தி இந்த பெருங்காயத் துண்டு. பெருங்காயம் சமையலில் முக்கிய பங்கு வகிப்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே! நம் உடல் உபாதைகளை ஏற்படுத்தும், பெரிய காயங்களை நீக்கக் கூடிய சக்தி இந்த பெருங்காயதிற்க்கு உண்டு என்றால், ஆன்மீக ரீதியாக நமக்கு இருக்கும் பெரிய பண கஷ்டத்தை நீக்கக் கூடிய சக்தியும் இந்த பெருங்காயத்துக்கு உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது.

நம்ப மாட்டீங்க! ஆனாலும் இது உண்மை. ஒரு சிறிய மஞ்சள் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சிறிய பெருங்காய கட்டியை வைத்து முடிச்சு போட்டு, நீங்கள் பணம் வைக்கும் பர்ஸில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு பண வரவு அதன் பின்பு எப்படி இருக்கிறது என்று நீங்களே சோதித்துப் பார்த்துக்கொள்ளலாம். பெருங்காயத்தை மணி பர்சில் வைத்து விட்டு, நீங்கள் வீட்டிலேயே அமர்ந்து கொண்டு பணத்தை, வா! என்று அழைத்தால், அதை நிச்சயம் வராது.

yellow-handkerchief

பலமுறை முயற்சி செய்தும் வராத பணம், இந்த பரிகாரத்தை செய்யும் பட்சத்தில் மீண்டும் மீண்டும் முயற்சி செய்யும் பட்சத்தில் அந்த பணம் உங்களைத் தேடிவர, நிறையவே வாய்ப்பு உள்ளது. இதை வியாழக்கிழமை அன்று செய்தால் மிகவும் நல்லது. சிறிய பெருங்காய கட்டியை எடுத்துக்கொள்ளுங்கள். மஞ்சள் உரசும் கல்லில் ஒரு சொட்டுத் பன்னீரை விட்டு, இந்த பெருங்காயத்தை இழைத்து, கொஞ்சமாக, அதை எடுத்து மோதிர விரலால் நெற்றியில் இட்டுக் கொண்டு வெளியே சென்று பாருங்கள்.

- Advertisement -

அன்றைய நாள் முழுவதும் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை. எக்காரணத்தைக் கொண்டும் பெருங்காயத்தை தண்ணீரில் குழைத்து மட்டும் நெற்றியில் இட்டுக் கொள்ளாதீர்கள். அது உங்களுக்கு பணத்தை வீண் விரையம் ஆக்கி விடும் என்பதும் உண்மை.

panner

உங்களுக்கு நம்பிக்கை இருந்தாலும் சரி, நம்பிக்கை இல்லை என்றாலும் சரி பணத்தேவை உள்ளபோது மட்டுமாவது இதை முயற்சி செய்து பாருங்கள். இந்த பரிகாரத்திற்க்கு செலவு என்று பார்த்தால் ஒரு ரூபாய் கூட கிடையாது. உங்கள் எல்லோரது வீட்டிலும் இந்த பெருங்காயம் நிச்சயம் இருக்கும். நஷ்டமடைய எதுவுமே இல்லை. நம்பிக்கை இருந்தால் லாபம் அடைவதற்கு, சாதிப்பதற்கு இந்த பெருங்காயம் உங்களுக்கு உறுதுணையாக நிற்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
சமையலுக்கு பயன்படுத்தும் புளி மொத்தமாக வாங்கி வைத்தால் 1 வருடம் வரை கறுத்துப் போகாமல், சுவை மாறாமல் இருக்க இப்படி செய்யலாமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.