பணம் சேர சமையலறை பரிகாரம்

mahalshmi8
- Advertisement -

வீட்டில் பணம் காசு சேர வேண்டும் என்றால், அந்த பொறுப்பை பெண்கள் தங்களுடைய கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். என்னதான் ஆண்களும் பெண்களும் சேர்ந்து சம்பாதித்தாலும் சரி, அல்லது வீட்டில் ஆண்கள் மட்டும் பணம் சம்பாதித்தாலும் சரி இல்லத்தரசிகள் பொறுப்போடு நடந்து கொள்ளும் பட்சத்தில் தான், வீட்டில் மகாலட்சுமி நிலையாக நிலைத்திருப்பாள்.

யார் இதற்கு புறம்பாக கருத்து பேசினாலும் அதை பெண்கள் ஒற்றுக்கொள்ளக் கூடாது. வீட்டில் பணம் காசு சேர்வதற்கு காரணம் வீட்டில் இருக்கும் பெண்கள் தான் என்று உறுதியோடு இருங்கள். இன்றிலிருந்து என்னுடைய குடும்பத்திற்கு சேமிப்பை நான் உயர்த்துவேன் என்று பெண்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டு இன்றைய பதிவிற்குள் செல்வோம்.

- Advertisement -

பணம் சேர சமையலறையில் எந்த இடத்தில் சில்லறை காசுகள் வைக்கணும்

இந்த பரிகாரம் செய்ய செம்பினால் செய்யப்பட்ட சின்ன சொம்பு வாங்கிக்கோங்க. வாங்கி வந்த புது சொம்பை நன்றாக தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து காய வைத்து விடுங்கள். இது மார்கழி மாதம். ஒரு நாள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அது வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமை ஞாயிற்றுக்கிழமை என்ன கிழமை இருக்கட்டும்.

அதிகாலை பிரம்ம முகூர்த்தத்திலே எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். வாங்கி வந்த சொம்பை சமையலறையில் ஏதாவது ஒரு இடத்தில் வையுங்கள். ஆனால் அடுத்தவர்கள் கண்ணுக்கு இது தெரிய வேண்டாம். உங்கள் வீட்டு உறுப்பினர்களுக்கு இது தெரியலாம். வெளி ஆட்கள் யாராவது சமையலறைக்கு வராங்க என்றால் ‘இது என்ன இங்க ஒரு செம்பு சொம்பு’ அப்படின்னு கேட்கக் கூடாது.

- Advertisement -

அந்த அளவுக்கு கொஞ்சம் மறைவாக உயரமான இடத்தில் கூட வைத்துக் கொள்ளலாம். முதல் நாள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் அந்த சொம்புக்கு மேலே மஞ்சள் குங்குமப்பொட்டு வையுங்கள். அந்த சொம்புக்கு உள்ளே முதலில் 3 துவரம் பருப்பு, 3 வெந்தயம், 3 வெள்ளை மொச்சை போடுங்கள்.

பிறகு குடும்ப தலைவியின் கையால் மூன்று 1 ரூபாய் நாணயங்களை போட்டு இந்த சொம்பை ஒரு இடத்தில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். குலதெய்வத்தை நினைத்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள் முதல் நாள்தான் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இதில் காசு போட வேண்டும் அடுத்த அடுத்த நாள், எப்போது கையில் காசு கிடைத்தாலும் இதில் போட்டு சேமிக்கலாம். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கும் போது அதில் சிலரை காசுகள் மிச்சம் கிடைக்கும் அல்லவா. அதை எல்லாம் கொண்டு வந்து இந்த சொம்புக்கு உள்ளே போட்டு சேமித்து வாருங்கள்.

- Advertisement -

சமையலறையில் செம்பு சொம்பு சில்லறை காசுகள் எந்த அளவுக்கு நிறைவாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு உங்களுடைய வீட்டில் செல்வ செழிப்பு உயர்ந்திடும். உங்களது வருமானம், உங்களது கணவரது வருமானம் பல மடங்கு உயரும். வீட்டில் நிச்சயம் பணம் நிறைவாக சேரும். தேவைக்கு ஏற்ப பணவரவு இருந்து கொண்டே இருக்கும் பயப்படவே வேண்டாம்.

சரி இந்த சொம்புக்கு உள்ளே போட்ட நாணயங்களை என்ன செய்யலாம். எடுத்து நீங்கள் செலவுக்கு பயன்படுத்தலாம். பால் வாங்க, பூ வாங்க, காய்கறிகள் வாங்க அப்படியே ரொட்டேஷனில் பயன்படுத்துங்கள். ஆனால் சொம்பை வெறுமனே விடக்கூடாது. சொம்பில் எப்போதும் ஒரு சில நாணயங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வைகுண்ட ஏகாதேசி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்

வெந்தயம், வெள்ளை, மொச்சை துவரம் பருப்பு மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாற்றினாலும் போதும். மூன்று மாதத்துக்கு ஒரு முறை சொம்பை சுத்தம் செய்து மீண்டும் இந்த பொருட்களை எல்லாம் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். பரிகாரம் இவ்வளவுதான். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மிகம் சொல்லும் இந்த பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -