இந்த பிரபஞ்சத்திற்கும் நமக்கும் நல்லதொரு இணைப்பை ஏற்படுத்தக்கூடிய வார்த்தைதான் சுவிட்ச்வார்டு (switch word) என்று சொல்லுவார்கள். இதை தமிழில் மந்திர வார்த்தை என்று சொல்லலாம். ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு கொடுப்பதற்கு ஒவ்வொரு மந்திர வார்த்தைகள் இருக்கிறது. அதன் அடிப்படையில் இன்று பண பிரச்சனையை தீர்க்க போகும் ஒரு மந்திர வார்த்தை தான் நான் தெரிந்து கொள்ள போகிறோம்.
வெள்ளிக்கிழமை தோறும் இந்த வார்த்தையை நீங்கள் சொல்ல சொல்ல, உங்களுக்கு வருமானம் அதிகரித்துக் கொண்டே செல்லும். பண பிரச்சினைகள் குறைந்து கொண்டே செல்லும். பண பிரச்சனையை தீர்க்கப் போகும் அந்த வார்த்தை என்ன. அந்த வார்த்தையை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
பணம் தரும் சுவிட்ச் வோர்ட்
வெள்ளிக்கிழமை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும், எப்போது வேண்டுமென்றாலும், இந்த வார்த்தையை நீங்கள் சொல்லலாம். வெள்ளிக்கிழமை பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த வார்த்தையை சொல்லுவது சிறப்பான பலனை தரும். எதிர்மறையாக எதையும் சிந்திக்காதிங்க. பணம் என்னை தேடி வரும் என்று முழுமையாக நம்புங்கள். என்னுடைய தேவைகள் எல்லாம் பூர்த்தியாகும் என்று நம்புங்கள். பிறகு இந்த வார்த்தையை சொல்லுங்கள். ‘venus sanction abundance’ இதுதான் பணம் தரும் அந்த ஸ்விச் வார்ட்.
இன்று வெள்ளிக்கிழமை இந்த பதிவை படித்த பிறகு இந்த வார்த்தையை இன்று மாலை 6:00 மணிக்கு பூஜையறையில் விளக்கு ஏற்றி சாமி கும்பிடும் போது சொல்லலாம். அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை மறக்காம பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து இந்த வார்த்தையை சொல்லவும். நீங்கள் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் வீடு திரும்பியதும் முகம் கை கால் கழுவி விட்டு ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து இந்த வார்த்தையை சொல்லுங்கள்.
இந்த வார்த்தையை சொல்லுவதற்கு எண்ணிக்கை கணக்கெல்லாம் கிடையாது. நம்பிக்கையோடு எத்தனை முறை இந்த வார்த்தையை நீங்கள் உச்சரிக்கிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் உங்களுடைய பண கஷ்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி விடும். வருமானம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கும்.
இன்று இரவு 8 மணி போல ஒரு பிரியாணி இலையை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பிரியாணி இலைக்கு உள்பக்கமாக ஒரு பச்சை நிற பேனாவைக் கொண்டு இந்த சுவிட்ச் வோர்டை எழுதி விடுங்கள். அதற்கு கீழே உங்களுக்கு எவ்வளவு பணம் தேவையோ அதை எழுதுங்கள். இது உங்களுக்கு தேவையான பணம். உங்கள் வாழ்க்கையை அனுபவிக்க தேவையான பணம்.
இந்த பணம் வந்தால் என் வாழ்க்கையில் சந்தோஷம் வந்துவிடும் என்று நினைத்து எவ்வளவு தொகையை நினைக்கிறீர்களோ ஒரு தொகையை அந்த பிரியாணி இலையில் எழுதி, அந்த இலையை உங்களுடைய பர்ஸில் வைக்கலாம். இல்லை ஏதாவது ஒரு நோட்டுப் புத்தகத்தில் வைத்து உங்கள் பேகில் வைத்துக் கொள்ளலாம், அல்லது இந்த பிரியாணி இலையை வீட்டிலேயே பத்திரப்படுத்தி வைக்கலாம்.
வெள்ளிக்கிழமை தோறும் இந்த பிரியாணி இலையை எடுத்து உங்கள் கையில் வைத்துக் கொண்டு இதே சுவிட்ச் வோர்டை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்கும்போது நீங்கள் அந்த பிரியாணி இலையை எழுதிய தொகை எப்படியாவது உங்கள் கையை வந்து சேரும். இந்த பரிகாரம் பலிக்க வேண்டும் என்றால் பணம் சம்பாதிக்கத்திற்கு உண்டான முயற்சிகளை நீங்கள் தான் மேற்கொள்ள வேண்டும்.
ஏதோ ஒரு பிரச்சனையில் சிக்கியிருக்கிறீர்கள். இந்த பிரச்சனையை தீர்வு கிடைத்தால் பணம் எனக்கு வரும் என்று ஒரு சூழ்நிலை எல்லோருக்கும் இருக்கும். அந்த பிரச்சினையை தீர்த்து வைக்கக்கூடிய வேலையை இந்த பரிகாரம் ரொம்ப ரொம்ப எளிமையாக செய்து விடும். வார்த்தைகளுக்கு ரொம்ப பவர் இருக்கு. அதிலும் இந்த மந்திர வார்த்தைகளுக்கு பல மடங்கு பவர் இருக்கு.
இதையும் படிக்கலாமே: ஆஷாட நவராத்திரியில் வெள்ளிக்கிழமை பூஜையில் சொல்ல வேண்டிய மந்திரம்
இதை உச்சரித்து பரிகாரத்தை செய்து பலன் பெற்ற பிறகு நீங்களே புரிந்து கொள்வீர்கள். நம்பிக்கை உள்ளவர்கள் செலவில்லாத இந்த பரிகாரத்தை செய்யுங்கள் நல்லதே நடக்கும் இந்த தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.