பணமே உங்களிடம் வந்து, பாசமாக தங்கிக் கொள்ளும். உங்களை விட்டுப் பிரிய, அந்த பணத்திற்கே மனம் இருக்காது. இந்த 1 வார்த்தையை மட்டும் நீங்கள் சொல்லிக் கொண்டே இருந்தா!

cash-question

குழந்தைகளாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி, நாமலே இருந்தாலும் சரி, எந்த இடத்தில் நிரந்தரமாக தங்க வேண்டும் என்று நினைப்போம். எந்த இடத்தில் பாசமும் மரியாதையும் சந்தோஷமும் அதிகம் கிடைக்கின்றதோ, அந்த இடத்தில் தான் நிரந்தரமாக தங்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் வரும். அனைத்திற்கும் இதே விதி தான். பணத்தை பத்திரமாக சந்தோஷமாக யார் வரவேற்கிறார்களோ, அவர்களிடத்தில் பணமும் பத்திரமாக தங்கிக் கொள்ளும். நம்முடைய வீட்டிற்கு, நமக்கு பிடித்தவர் யாரோ ஒருவர் உறவினர், நீண்ட நாட்களாக வரவில்லை என்றால், அவரை எப்படி அழைப்போம்? எங்க வீட்டுக்கு நீங்கள் கட்டாயம் வரணும் அப்படின்னு பாசமாக அழைப்போம் அல்லவா?

lakshmi-cash

பணத்திற்கும் இதே விதியை அப்ளை செய்து பாருங்கள்! வராத பணத்தை மீண்டும் மீண்டும் வர வைக்க முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். அதுவும் வெறுப்பு இல்லாமல், கோபம் இல்லாமல் திட்டாமல் அழைத்துக்கொண்டு இருந்தால், அந்தப் பணம் நிச்சயமாக உங்களிடத்தில் வந்து ஒட்டிக்கொள்ளும். சரி, அது என்ன வார்த்தை? எந்த வார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தால், நம் கைக்கு பணம் வரும் என்ற சூட்சுமத்தையும் இப்போதே தெரிந்துகொள்ளலாம்.

தமிழில் சொல்ல வேண்டும் என்றால் ‘எண்ணுதல்’ ஆங்கிலத்தில் சுலபமாக சொல்லி விடலாம் (count) கவுண்ட். உங்களுக்கு, உங்களுடைய தேவைக்கு எவ்வளவு ரூபாய் பணம் வேண்டுமோ, அந்த பணத்தை உங்கள் கையால் எடுத்து எண்ணுவது போல மனதில் நினைத்துக் கொண்டு, தேவையான பணத்தையும் சேர்த்து இந்த வார்த்தையை உச்சரிக்கவேண்டும். எடுத்துக்காட்டிற்கு உங்களுக்கு அடுத்த வாரம் 10,000 ரூபாய் தேவைப்படுகிறது.

money

10,000 ரூபாய் உங்களது கைக்கு கிடைத்து விட்டது போலவும், எண்ணுவது போல மனதில் நினைத்துக்கொண்டு ‘கவுண்ட் கவுண்ட்’ என்ற வார்த்தையை உச்சரித்தாலே போதும். உங்களுக்கு தேவையான 10,000 பணம் வந்துவிடும். ஆனால் பத்தாயிரம் ரூபாயை பெறுவதற்காக முழுமனதோடு, முழு மூச்சாக நீங்கள்தான் முயற்சி செய்ய வேண்டும். பத்தாயிரம் ரூபாய் பறந்து வந்து தானாக உங்கள் கையில் உட்காராது. இந்த ட்ரிக், நீங்கள் முயற்சி செய்து வராமல், உங்களுக்கு வரவேண்டிய பணமாக இருந்தால், அதை வரவைத்து கொடுக்க உதவியாக இருக்கும்.

- Advertisement -

இதே போல் உங்களது வலது கை உள்ளங்கைகள் மேல் பக்கத்தில், மணிக்கட்டு பகுதியில், பச்சை நிற பேனாவைக் கொண்டு count என்று எழுதி, தேவைக்கு ஏற்ப பணத் தொகையை எழுதிவிட்டால், அந்த பணம் உங்களது வலது கைக்கு வரும் சூழல் அமையும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கையோடு செய்தால், நிச்சயமாக இந்த ட்ரிக் உங்களுக்கு பலன் அளிக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

money-1

சாதாரணமாக நடுத்தர வர்க்கத்தில் வசிப்பவர்கள், கோடி ரூபாய் வேண்டும். இல்லை கோடிக்கும் மேல் பணம் வேண்டும் என்றெல்லாம் இந்த பரிகாரத்தை சோதித்துப் பார்த்தால், நிச்சயமாக நடக்கவே நடக்காது. தேவைக்கு ஏற்ப, அவசர தேவைக்காக மட்டும் இந்த ட்ரிக்கை, உண்மையான நம்பிக்கையுடன் முயற்சி செய்து பார்த்தால், பலன் கிடைக்கும். நீங்க ட்ரை பண்ணி பாருங்க! இதில் நஷ்டமாக எதுவுமே கிடையாது. லாபம் பெற இதில் நிறையவே உள்ளது என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
இந்த 1 பொருளை பெண்கள் தங்களுடைய முந்தானையில், முடிந்து வைத்திருந்தாலே போதும். நினைத்த காரியம், நினைத்த மார்கத்தில் நிறைவேறும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.