இந்த 1 பொருளை பெண்கள் தங்களுடைய முந்தானையில், முடிந்து வைத்திருந்தாலே போதும். நினைத்த காரியம், நினைத்த மார்கத்தில் நிறைவேறும்.

manjal

வீட்டில் இருக்கும் பெண்களுக்கு தான் எத்தனை கஷ்டங்கள்! எத்தனை துன்பங்கள்! எத்தனை வேண்டுதல்கள்! வெளியிடங்களுக்கு சென்று வேலை செய்யும் பெண்களாக இருந்தால், அவர்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள், நாலு பேரைப் பார்த்து பேசி பழகும் போது, அந்த கஷ்டம் கொஞ்சம் குறைவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் அவர்களுக்கும் மனதில் வேதனை இருக்கத்தான் செய்யும். இருப்பினும் ஆறுதல் கிடைக்கின்றது. இரண்டாவதாக வீட்டிலேயே இருக்க கூடிய பெண்களாக இருந்தால், வீட்டு வேலை செய்யும் நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் தங்களுடைய கஷ்டங்களை நினைத்து கொண்டால் நிச்சயமாக அது அவர்களுக்கு மன வருத்தத்தை கொடுக்கும். (ஆண்களுக்கு துன்பமே கிடையாதா என்று கேள்வி எழுப்ப வேண்டாம். இருப்பினும் பெண்களுக்கு இருக்கக்கூடிய மனவருத்தம் என்பது, எல்லா விஷயத்திலும் கொஞ்சம் அதிகம் அல்லவா?)

women1

நீங்கள் அலுவலகத்துக்கு சென்று வேலை செய்யும் பெண்களாக இருந்தாலும் சரி, வீட்டிலேயே இருந்து குடும்பத்தை மட்டும் பார்த்துக் கொள்ளும் பெண்களாக இருந்தாலும் சரி, உங்களுக்கு இருக்கக்கூடிய தீராத மன கஷ்டம், பண கஷ்டம் எதுவாக இருந்தாலும் அதை, சுலபமான முறையில் எப்படி தீர்த்துக் கொள்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

ஆன்மீக ரீதியாக மனத்திருப்தியுடன் செய்ய வேண்டிய பரிகாரம் இது. இதை செய்பவர்களுக்கு முழு பலனை அடைந்து விடுவார்கள் என்றும் சொல்லிவிட முடியாது. ஆனால், நிச்சயமாக பிரச்சனைக்கான தீர்வு ஓரளவுக்கு கட்டாயம் உங்களுக்கு, உங்களுடைய கண்களுக்கு புலப்படும் என்பது நம்பிக்கை. சிறிய நம்பிக்கையோடு கலந்து செய்யும் இந்த பரிகாரத்தின் மூலம், உங்களது பல நாட்கள் சபதம் கூட நிறைவேறுவதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது. சரி பரிகாரத்தை பார்த்துவிடுவோம்.

mudichu

பெரிய விஷயம் எல்லாம் எதுவுமே இல்லைங்க! உங்க பூஜை அறைக்கு செல்ல வேண்டும். இந்த பரிகாரத்தை செய்து நீங்கள் பலனடைய வேண்டும் என்றால் கட்டாயம் புடவை அணிந்து இருக்கவேண்டும். ‘புடவை முந்தானை’ இந்த புடவை முந்தாணை எப்போதுமே அதிக சக்தி கொண்டது. பெண்கள் பிரசாதத்தை வாங்குவதாக இருந்தாலும், இறைவனிடம் நமஸ்காரம் செய்ய வேண்டும் என்றாலும் முந்தானையை தன்னுடைய கைகளில் வைத்துக் கொண்டு தான் மங்களகரமான வேலைகளை செய்வார்கள்.

- Advertisement -

பணம் சம்பந்தப்பட்ட ஏதேனும் பிரச்சனை உங்களுக்கு இருந்தால் தீராத கஷ்டங்கள் ஏதேனும் இருந்தால், உங்களது முந்தானையில் ஒரு ரூபாயை வைத்து குலதெய்வத்தின் பெயரைச் சொல்லி, அந்த முந்தானையை சுருட்டி சிறிய முடிச்சாக போட்டு இடுப்பில் சொருகி கொள்ளுங்கள். கஷ்டம் தீர வேண்டும் என்று குலதெய்வத்தின் பெயரைச் சொல்லி முடிச்சு போட வேண்டும் என்பதே இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

one rupee

தினம் தினம் இரவு தூங்கப் போவதற்கு முன்பு, அந்த ஒரு ரூபாய் நாணயத்தை பூஜை அறையில் வைத்து விடலாம். மறுநாள் காலை குளித்து முடித்துவிட்டு மீண்டும் உங்களது கோரிக்கையை இறைவன் முன்பு சொல்லிவிட்டு அந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து முடிந்து வைத்துக்கொள்ளலாம். இப்படி செய்து வரும் பட்சத்தில் உங்களுடைய அந்த பணக்கஷ்டம் தீராத கஷ்டம் தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

manjal-kizhangu

இதேபோல்தான் வீட்டில் மங்கள கரமான காரியம் ஏதேனும் நடக்க வேண்டும். உங்கள் குழந்தைகளுக்கு திருமணம் நடக்க வேண்டும், குழந்தை பாக்கியம் பெற வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும், எனும் பட்சத்தில் ஒரே ஒரு மஞ்சள் கிழங்கு, குண்டு மஞ்சள் இருந்தாலும் சரி, கிழங்கு மஞ்சள் ஆக இருந்தாலும் சரி, அதை பூஜை அறையில் வைத்து விட்டு குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து உங்களுடைய முந்தானையில் முடிந்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

pray

கோரிக்கை நிறைவேறிய பின்பு, இந்த ஒரு ரூபாய் நாணயத்தை குலதெய்வ உண்டியலில் சேர்த்து விடலாம். மஞ்சளை நீங்கள் உங்களுடைய உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பரிகாரத்தை செய்து விட்டால், எல்லாம் நல்லபடியாக முடிந்து விடுமா? என்று சந்தேகிக்க வேண்டாம். நிச்சயமாக இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு கைமேல் பலன் உண்டு. புடவையே கட்ட முடியாத சூழ்நிலை உங்களுக்கு இருந்தால் உங்களுடைய துப்பட்டாவின் முனையிலும் இதை கட்டி வைக்கலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
மகாலட்சுமியின் முன்பு இந்த பொருட்களை வைத்து பூஜை செய்தால், அந்த வீட்டில் அதிர்ஷ்ட தேவதை ஐக்கியமாகி விடுவாள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.