பெரிய பெரிய பணக்காரர்கள் எல்லாம், இந்தப் பொருளை பணம் வைக்கும் பெட்டியில், இப்படித்தான் வைத்திருப்பார்கள்! பணக்காரர்களிடம் மேலும் மேலும் பணம் சேர இதுவும் ஒரு காரணம்.

vasambu

பெரிய பெரிய பணக்காரர்களிடம் மீண்டும் மீண்டும் பணம் போய் சேர்வதற்கு காரணம் என்ன? அந்தப் பணத்தை வசியம் செய்யக்கூடிய தந்திரம் அவர்களுக்கு நிச்சயம் நன்றாகவே தெரிந்திருக்கும். வசியம் செய்து ஒரு பொருளை நம்மிடமே வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது தவறு கிடையாது. வசியம் என்ற வார்த்தை தவறான வார்த்தை அல்ல. ஆனால் நிறைய பேர் வசியம் என்ற வார்த்தையை தவறான வழி முறைகளுக்கு, தவறான வேலைகளை செய்ய பயன்படுத்தி வருகிறார்கள். அதை பற்றி இப்போது நமக்கு வேண்டாம்.

பணத்தை நம் வசப்படுத்திக் கொள்ள, வசம்பை வைத்து ஒரு சிறிய பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பணத்தின் மீது அன்பு செலுத்தி, பணத்தை விரும்பி, அந்த பணத்தை எப்படி இரட்டிப்பாக்கி, நம் வீட்டிலேயே தக்க வைத்து கொள்வது என்பதைப் பற்றிய சூட்சமமான ஒரு பரிகாரம் தான் இது. இதைத்தான் வசியம் என்று சொல்கின்றோம்.

பெரிய பெரிய பணக்காரர்கள் தங்களுடைய வீட்டில் பணம் தங்குவதற்கு எந்த பரிகாரங்களை செய்தாலும், குறிப்பாக அதை அவர்கள் வெளியாட்களிடம் பகிர்ந்து கொள்வது கிடையாது. காரணம் பரிகாரங்கள் செய்து பலன் அளித்த பின்பு, அதை வெளியாட்களுக்கு பகிர்ந்து கொண்டால், அந்த பரிகாரத்தின் பலன் தனக்கு கிடைத்து விடாமல் போகும் என்ற பயம் நிச்சயமாக எல்லோருக்குமே இருக்கும்.

deepam8

நீங்களும் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடைந்தால் கூட, உங்களுடைய சூட்சும ரகசியத்தை வெளி ஆட்களுக்கு பகிர கூடாது என்பதும் உண்மையான ஒரு விஷயம் தான். முதலில் கடைக்குச் சென்று பேரம் பேசாமல், வசம்பு என்ற வார்த்தையை உச்சரிக்காமல் நாட்டு மருந்து கடைகளில் இருந்து வசம்பை வாங்கிக் கொள்ள வேண்டும். ‘உரைப்பான், பெயர் சொல்லாதது என்று கேட்டாலே நாட்டு மருந்து கடைகளில் இருப்பவர்கள், புரிந்துகொண்டு வசம்பை கொடுப்பார்கள்.’

- Advertisement -

உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்த வசம்பை பூஜை அறையில் வைத்து விடுங்கள். ஒரு சிறிய மண் அகல் விளக்கில் கொஞ்சமாக நெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி, பூஜை அறையில் வைத்திருக்கும் வசம்பை எடுத்து அந்த தீபச்சுடரில் நன்றாக எரிய விடவேண்டும். வசம்பின் ஒரு முனையை உங்கள் கையில் பிடித்துக் கொள்ளுங்கள். மற்றொரு முனையை நெருப்பில் காட்டுங்கள்.

krambu

வசம்பு நன்றாக எரிந்த பின்பு, அதை லேசாக இடித்தால் சாம்பலாக உங்களுக்கு கிடைக்கும். இந்த வசம்பு பொடியை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். ஒரு வெள்ளை நிறத் துணியில் பச்சை கற்பூரம் சிறிய துண்டு, ஏலக்காய் 2, கிராம்பு 2, கொஞ்சமாக கல்லுப்பு, நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் வசம்பு பொடி சிறிதளவு இந்தப் பொருட்களை எல்லாம் மகாலட்சுமி தாயை வேண்டி, சுக்கிர பகவானையும் நினைத்து அந்த வெள்ளைத் துணியில் வைத்து பச்சை நிற நூலை கொண்டு சிறிய முடிச்சாக கட்டி கொள்ள வேண்டும்.

Elakkai

வசம்பு பொடி கருப்பு நிறத்தில்தான் இருக்கும் பரவாயில்லை. உங்கள் வீட்டில் நெய் தீபத்தில் பொசுங்கிய இந்த கருப்பு வசம்பு பொடிக்கு வசிய தன்மை மிக மிக அதிகம். இந்த மூட்டையை நீங்கள் எந்த பொருட்கள் இருக்கும் இடத்தில் வைக்கின்றீர்களோ, அந்த இடத்தில் இருக்கக் கூடிய பொருள் பன்மடங்காகப் பெருகும்.

cash-pachai-karpooram

எடுத்துக்காட்டுக்கு நகை வைக்கும் பெட்டியில் இந்த சிறிய முடிச்சை வைத்தால், நகையை நிறைய வாங்கும் யோகம் கிடைக்கும். பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பணம் பல மடங்கு பெருகும். வீட்டில் புத்தகங்கள் இருக்கும் இடத்தில் வைத்தால் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் நல்ல அறிவைப் பெற்று நன்றாக படிக்கும் திறமை வாய்ந்தவர்களாக மாறிவிடுவார்கள்.

cash-box-mirror

இப்படியாக இந்த பொருளை எங்கு கொண்டுபோய் வைத்தாலும் அந்த இடத்தில் இருக்கும் பொருள் உங்கள் வசமாகும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. மேலே சொன்ன பொருட்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளைத் துணியில் வைத்து, பச்சை நூல் போட்டு கட்டி, பல முடிச்சுகளை நீங்கள் தயார் செய்து, உங்களுடைய வீட்டின் பல இடங்களில் வைக்கலாம். இந்த முடிச்சை உங்களுடைய பர்சில் கூட வைத்துக் கொள்ளலாம். வசம்பு இருக்கும் இடத்தில், கெட்ட சக்திகள் அண்டாது இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இதன் உள்ளே இருக்கும் பொருட்கள் ஒன்றும் கெட்டுப் போவதற்கு வாய்ப்பு இல்லை. வருடம் ஒருமுறை பழைய மூட்டையை எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு புதிய முடிச்சை கட்டி வைத்தாலும் போதும். இந்த முடிச்சை உங்களுடைய வீட்டில் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் தயார் செய்து கொள்ளலாம். இந்த நேரத்தில் தான் முடிச்சை கட்ட வேண்டும்! இந்த நேரத்தில் தான் பணம் வைக்கும் பெட்டியில் வைக்க வேண்டும் என்ற எந்த அவசியம் இல்லை. இந்த சிறு பரிகாரம் உங்களுக்கு பெரிய அளவிலான நன்மையைத் தேடித் தரும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.