வெந்தயத்துடன் இந்த 4 பொருட்களை சேர்த்து பீரோவுக்குள் வைத்துப் பாருங்களேன்! வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் தங்கமும் பணமும் உங்கள் வீடு தேடி வரத்தான் ஆசைப்படும்.

vendhayam

நம்முடைய வீட்டிற்கு தங்க நகையும் பணமும் வரவேண்டும் என்று நாம் தான் ஆசைப்படுவோம் அல்லவா? ஆனால் அந்த தங்க நகைகளும் பணமுமே நம்முடைய வீட்டிற்கு விரும்பி வருவதற்கு ஆசைப் படும். இந்த பரிகாரத்தை உங்களுடைய வீட்டில் செய்து வைத்தால். அந்த அளவிற்கு ஆன்மீக ரீதியான சக்தி வாய்ந்த பரிகாரம் இது. வாழ்க்கையில் அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ்வதற்கு, உங்களுடைய வீடு சுபிட்சம் அடைவதற்கு, வீட்டுப் பெண்களின் கையால் குலதெய்வத்தை வேண்டி இந்த பரிகாரத்தை செய்வது மிகவும் நல்லது.

pudhan

பொதுவாகவே புதன் பகவானின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கப் பெற்றால் நாம் அதிர்ஷ்டசாலியாக மாறிவிடுவோம். ஒரு வீடு அஷ்ட லட்சுமி கடாட்சமும் சேர்ந்த வீடாக இருக்க வேண்டுமென்றால், அந்த வீட்டில் வசிப்பவர்கள் நிச்சயமாக திறமைசாலிகளாக இருக்க வேண்டும். திறமை இருந்தால் அந்த திறமையை முதலீடாக வைத்து பணத்தையும் நகையையும் சுலபமாக நம் பக்கம் ஈர்த்துக் கொள்ளலாம்.

ஆக மொத்தத்தில் நம்முடைய வீட்டிற்கு, நம் வீட்டில் உள்ளவர்களுக்கு புதன் பகவானின் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும். புதன் பகவானுக்கு உரிய தானியமாக சொல்லப்படுவது தான் இந்த வெந்தயம். ஐஸ்வரியமும், ஐஸ்வர்யத்தை கட்டிக்காக்கும் திறமையும், நமக்கும் நம் வீட்டிற்கும் கிடைக்க வேண்டுமென்றால் வெந்தயத்துடன் எந்தெந்த பொருட்களை சேர்த்து வைக்க வேண்டும் என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Vendhayam

ஒரு சிறிய அளவில் இருக்கும் பச்சை நிறத் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் வெந்தயம், சிறிய துண்டு பச்சை கற்பூரம், உங்கள் வீட்டில் இருக்கும் சிறிய குண்டுமணி தங்கம், வெள்ளி செம்பு இந்த மூன்று உலகங்களை அந்த வெந்தயத்துடன் வைக்க வேண்டும்.

- Advertisement -

தங்கம், வெள்ளி, செம்பு நாணயங்கள் ஆக இருந்தாலும் வைக்கலாம். அணிந்துகொள்ளும் அணிகலன்கள் ஏதாவது இந்த உலகத்தில் இருந்தாலும், நீங்கள் பயன்படுத்தும், அணிகலன்களாக இருந்தாலும் அதை தண்ணீரில் கழுவி விட்டு அதன் பின்பு இந்த பரிகாரத்திற்க்கு பயன்படுத்திக் கொள்ளலாம். தவறொன்றும் கிடையாது.

pachai-karpooram

பச்சை துணியில், வெந்தயம், பச்சைக்கற்பூரம், வெள்ளி, செம்பு, தங்கம் இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து சிறிய முடிச்சாக பச்சை நூலால் கட்டி உங்கள் பீரோவில் வைத்து விட வேண்டும். அவ்வளவு தான். இந்த பரிகாரத்தை எப்போது செய்யலாம்? எந்த கிழமையில் வேண்டுமென்றாலும் செய்யலாம். வெள்ளிக்கிழமைகளில் செய்தாலும் நல்ல பலனை கொடுக்கும். அப்படி இல்லை என்றால் புதன் கிழமைகளில் செய்யலாம். நிறைந்த பௌர்ணமி தினத்தில் குலதெய்வத்தையும் அம்பாளையும் வேண்டிக் கொண்டு செய்யலாம்.

coins-gold

இந்த முடிச்சை உங்கள் பீரோவுக்குள் பணம் வைக்கும் இடத்தில், தங்க நகை வைக்கும் இடத்தில், வீட்டுப் பெண்களின் கையால் வைத்து விட்டாலே போதும். தங்கத்தையும் பணத்தையும் ஈர்க்கக் கூடிய சக்தி இந்த சிறிய முடித்துக்கு உண்டு. 6 மாதத்திற்கு ஒருமுறை இதன் உள்ளே இருக்கும் வெந்தயத்தை எடுத்து காக்கை குருவிகளுக்கு சாப்பிட போட்டுவிட்டு, துணியை நன்றாக துவைத்து மீண்டும் புதியதாக இந்த பொருட்களை சேர்த்து, முடிச்சுப் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். வெந்தையம் பச்சை கற்பூரம் புதியதாக வைக்க வேண்டும். தங்கம் வெள்ளி செம்பு நகைகளை ஒரு முறை கழுவி விட்டு மீண்டும் அதே நகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

copper

இந்த முடிச்சை பீரோவுக்குள் வைத்த பின்பு, வாரம் வெள்ளிக்கிழமை உங்களுடைய வீட்டில் பூஜை செய்யும் போது, தீப ஆராதனையை பூஜை அறையில் இருக்கும் மகாலட்சுமிக்கு காண்பிப்போம் அல்லவா? அதேபோல் உங்களது பீரோவை திறந்து தங்க நகையையும் பணம் வைக்கும் இடத்திற்கும் தீப ஆராதனையை காட்ட வேண்டும்.

poojai

பீரோவில் துணிகள் பணம் இருக்கும் இடத்தில் கொண்டு போய் நெருப்பை கிட்ட வைக்க வேண்டாம். கொஞ்சம் ஜாக்கிரதையாக, பூஜை செய்யும் புகை பீரோவுக்குள் போகும்படி பார்த்துக்கொள்ளுங்கள் போதும். இப்படியாக தங்க நகைகளுக்கும் பணத்திற்கு முறையான மரியாதையை நாம் செலுத்தி வந்தாலே போதும். தங்கமும் நகையும் விரும்பி நம் வீட்டிற்குள் வர ஆசைப்படும். முயற்சி செய்து பாருங்கள் நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.