- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணம் சுழற்சி தரும் ஏஞ்சல் நம்பர்

பணம் சுழற்சி தரும் ஏஞ்சல் நம்பர்

- Advertisement -

பணம் சம்பந்தப்பட்ட அத்தனை பிரச்சனைகளும் தீர வேண்டும். நம் கைக்கு வரவேண்டிய பணம் வந்து சேர வேண்டும். தொழிலில் முதலீடு செய்த பணம் எங்கேயும் தேங்கி நிற்கக்கூடாது. பணம் ஒரு சுழற்சியோடு இருக்க வேண்டும். லாபம் மடங்கு பெருக வேண்டும். நாம் செலவு செய்த பணம் பல மடங்காக பெருகி மீண்டும் நம் கைக்கே திரும்ப வேண்டும்.

இப்படிப்பட்ட பணசுழற்சியை சீராக்குவதற்கு நாம் ஒரு ஏஞ்சல் நம்பரை பயன்படுத்த வேண்டும். இந்த ஏஞ்சல் நம்பர் என்பது போனபோக்கில் சொல்லக்கூடிய விஷயம் அல்ல. சாதாரணமாக இருக்கக்கூடிய எண்களுக்கு வேண்டுதல் மூலம் சக்தி கொடுத்து, இந்த எண்களை ஏஞ்சல் நம்பர்களாக மாற்றி வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள். பண வரவிற்கு அவர்கள் பயன்படுத்திய ஒரு விதமான ஈர்ப்பு விதி  இது.

- Advertisement -

பண சுழற்சி ஏற்படுத்தும் ஏஞ்சல் நம்பர்

முதலில் அந்த ஏஞ்சல் நம்பர் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். பிறகு அதை எந்த இடத்தில் எல்லாம் எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம். பணப்புழக்கத்தை அதிகப்படுத்தும் ஏஞ்சல் நம்பர் ‘858’. இதை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் தினமும் காலையில் எழுந்து பிரபஞ்சத்திடம் பணப்புழக்கம் சீராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு உங்களுடைய மணிக்கட்டுப்பகுதியில் இதை எழுதிக் கொள்ளலாம்.

கடிகாரம் கட்டுவீர்கள் அல்லவா அந்த இடத்தில் நீல நிற பேனாவிலேயே இந்த நம்பரை எழுதிக் கொள்ளலாம். உள்ளங்கைக்கு மேல் பக்கம் இருக்கக்கூடிய மணிக்கட்டில் எழுத வேண்டும். முக்கியமான பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைக்காக வெளியே செல்கிறீர்கள். அந்த இடத்தில் உங்களுக்கு நல்லது நடக்க வேண்டும் உங்களுக்கான பணம் உங்கள் கையை வந்து சேர வேண்டும் என்றால் இந்த நம்பரை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருக்கலாம். இதுபோல இந்த நம்பரை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்கும்போது, உங்களுக்கு இருக்கும் பணத்தடை ஆனது விலகி பணவரவு அதிகரிக்கும்.

- Advertisement -

ஒரு வெள்ளிக்கிழமையாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். சுத்தமான வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேலே, ஒரு ஸ்கெட்ச் பென்சிலை வைத்து இந்த நம்பரை எழுதி, சுருட்டி மகாலட்சுமியின் பாதத்தில் வைத்துவிட்டு உங்களுடைய பண பிரச்சனை தீர வேண்டும் கடன் சுமை குறைய வேண்டும், எனக்கு வர வேண்டிய பணம் சீக்கிரம் வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டாலும், வருமானம் பல மடங்காக பெருகும்.

நீண்ட நாட்களாக வெளியிலேயே தேங்கியிருக்கும் பணம் உங்கள் கையை வந்து சேரும் என்பது நம்பிக்கை. மேலே சொன்ன மூன்று முறைகளையும் ஒருசேர கடைபிடிக்க வேண்டும் என்பது கிடையாது. உங்களுக்கு எந்த நேரத்தில் எது சௌகரியமாக இருக்கிறதோ, அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நம்பரை எந்த நேரத்தில் எப்படி பயன்படுத்தினாலும் சரி, உங்களுக்கு பணவரவு ஏற்படுவது என்பது உறுதி. பணத்தடை விலகும் என்பதும் உறுதி.

இதையும் படிக்கலாமே: புரட்டாசி சனிக்கிழமை லட்சுமி நரசிம்மர் வழிபாடு

முதலில் இரண்டு அல்லது மூன்று முறை இந்த நம்பரை பயன்படுத்தும் போது உங்களுக்கு பலன் கிடைக்காதது போல இருந்தாலும், விடக்கூடாது. மீண்டும் மீண்டும் இந்த நம்பரை சொல்லிக் கொண்டே இருங்கள். மீண்டும் மீண்டும் இந்த பரிகாரத்தை பின் தொடரும்போது உங்களுக்கு இந்த நம்பர் தானாக வேலை செய்ய தொடங்கிவிடும். ஒருமுறை இந்த நம்பரை பயன்படுத்தி உங்களுக்கு வெற்றி கிடைத்து விட்டால் இந்த நம்பர் உங்களுக்கானது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை செய்து பலன் பெறவும்.

சற்று முன்