உங்களுடைய அடுத்த தலைமுறைகளை கூட, வறுமையில் இருந்து காப்பாற்ற கூடிய சக்தி இந்த அருகம்புல் வேருக்கு உண்டு. அருகம்புல் வேர் வைத்து பணத்தை வசியப்படுத்துவது எப்படி?

gubera

இன்றளவிலும் நிறைய பேர் செய்யக்கூடிய ஒரு தவறு என்னவென்றால், அளவுக்கு அதிகமாக சொத்து சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவது தான். நம்முடைய வாழ்க்கைக்கும், நம்முடைய வயதான காலத்திற்கும், தேவையான அளவு சொத்து சேர்ப்பதில் தவறு கிடையாது. நாம் பெற்ற நம் பிள்ளைகளுக்கு சொத்து சேர்ப்பதில் தவறு கிடையாது. ஆனால் சில பேர் வீட்டில் இருக்கக்கூடிய சொத்தை எல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்தால், தனக்கு அடுத்து வரக்கூடிய ஐந்து தலைமுறைகளுக்கு கூட சொத்து சுகத்தை சேர்த்து வைத்திருப்பார்கள்.

பணம் காசு சொத்து சுகம் எல்லாம் ஒரே இடத்தில் முடங்கி கிடைப்பதில் என்ன பயன் இருக்கிறது. சொத்தின் மேல் ஆசை இல்லாமல், சொத்து சேர்க்காமல் இருப்பதும் தவறு. சொத்தின் மேல் அதிகமாக மோகம் கொண்டு நமக்கு அடுத்து வரக்கூடிய பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து வைப்பதும் தவறு தான். எதுவாக இருந்தாலும் ஒரு அளவோடு இருக்க வேண்டும்.

நாம் நன்றாக இருக்க வேண்டும். நம்முடைய அடுத்த வரக்கூடிய தலைமுறைகள் நன்றாக வாழ வேண்டும். அதற்கு தேவையான செல்வம் நமக்கு வந்து கொண்டே இருக்க வேண்டும். கைநிறைய அவரவர் உழைத்து, அவரவருக்குத் தேவையான பணத்தை சம்பாதித்துக் கொண்டே இருக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் நமக்கு அடுத்து வரக்கூடிய தலைமுறைகள் கூட வறுமையில் வாடி விடக்கூடாது. இதற்கு குபேர பகவானை நம் வீட்டிலேயே நிரந்தரமாக தங்க வைக்க, ஆன்மீக ரீதியாக என்ன பரிகாரம் செய்யலாம். தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

arugampul

குபேர பகவானை நம் வீட்டில் நிரந்தரமாக தங்க வைக்க நமக்கு தேவையான ஒரு பொருள் அருகம்புல் வேர். சுலபமாக எல்லா இடங்களிலும் இந்த அருகம்புல் கிடைக்கும். அதை வேரோடு பிடுங்கி எடுத்துக் கொள்ளுங்கள். வேரை இரும்பு கத்தரிக்கோலால் வெட்டக் கூடாது. உங்கள் கை விரல்களாலாயே வேரை மட்டும் அருகம் புல்லில் இருந்து கிள்ளி எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த வேரை சுத்தமான மஞ்சள் தண்ணீரில் கழுவி மீண்டும் ஒரு முறை சுத்தமான நல்ல தண்ணீரில் கழுவி, நிழலிலேயே உலர வைத்து ஒரு சிறிய டப்பாவில் போட்டு, அதன் உள்ளே ஒரு பச்சை கற்பூரத்தை போட்டு கொள்ள வேண்டும். இந்த டப்பாவை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து 1008 முறை ‘ஓம் குபேராய வசிய’ என்ற மந்திரத்தை சொல்லி இந்த வேருக்கு சக்தியைக் கொடுத்து விடுங்கள்.

arugampul-ver

பூஜையை முடித்துவிட்டு குபேர பகவானையும் மனதார நினைத்துக்கொண்டு, இந்த டப்பா வினை உங்கள் பீரோவுக்குள் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அருகம்புல் வேர் சில மாதங்கள் மட்டுமே நன்றாக இருக்கும். உங்கள் வீடுகளில் டப்பாவில் இருக்கும் வேர் பழுதடைந்து விட்டால், அந்த வேரை எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, மீண்டும் மேல் சொன்ன படி பூஜை செய்து அந்த அருகம்புல் வேரை உங்கள் வீட்டு பீரோவில் வைத்துக்கொண்டே வந்தால், உங்கள் வீட்டில் பண கஷ்டம் வருவதற்கு வாய்ப்பே கிடையாது. உங்கள் பரம்பரையே செல்வச் செழிப்போடு வாழும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.