ஒரு மனிதனுக்கு பணக்கார யோகம் கிடைக்க வேண்டும் என்றால் அவனுக்கு அதிர்ஷ்டம் முதலில் அடிக்க வேண்டும். நம்முடைய பக்கத்திலேயே நமக்கான அதிர்ஷ்டம் இருக்கும். ஆனால் அது நம் கண்ணுக்கு தெரியாது. நல்லதொரு வாய்ப்பு நம் பக்கத்திலேயே இருக்கும். ஆனால் அது நமக்கு தெரியாது. நம்முடைய பிரச்சனையை இவரிடம் சொன்னால், பிரச்சனை தீர்ந்துவிடும். அந்த நபர் நம் பக்கத்திலேயே இருக்கிறார். ஆனால் அந்த பிரச்சனையை நாம் அவரிடம் பொய் சொல்ல மாட்டோம்.
இது ஒரு உதாரணத்திற்காக சொல்லப்பட்ட விஷயம். அனைவருக்குமே வாழ்க்கைக்கு தேவையான நல்லது பக்கத்தில் தான் இருக்கும். ஆனால் அந்த நல்லது நம் கண்களுக்கு தெரிய வேண்டும் என்றால், அதற்கான நல்ல நேரம் கைகூடி வரவேண்டும். அந்த நல்ல நேரத்தை கொண்டு வந்து சேர்க்க கூடிய ஒரு எளிமையான ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம்.
நாம் எல்லோருக்குமே தெரியும். குபேர முத்திரை, பணத்தை வசியம் செய்யக்கூடிய முத்திரை என்பது. ஆனால் குபேர முத்திரையை பயிற்சி செய்பவர்கள் எல்லோருக்குமே பணம் சேர்ந்து விடுகிறதா என்று கேட்டால், நிச்சயம் கிடையாது. இந்த குபேர முத்திரையை சரியாக பிரயோகம் செய்யக்கூடிய ஒரு முறையைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது உங்களுக்கான அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய பதிவாகவும் இருக்கலாம்.
குபேர முத்திரை பயிற்சி
முதலில் வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ளுங்கள். வடக்கு திசை பார்த்து அமர்ந்து முதலில் ஒரு இரண்டு நிமிடங்கள் உங்களுடைய கையில் சங்கு முதிரையை வைக்க வேண்டும். சங்கு முத்திரையை வைத்து அந்த முத்திரை உங்கள் நெஞ்சுக்கு நேராக இருக்க வேண்டும். சங்கு முதிரையை பிடிக்கும்போது உங்களுடைய கவனம் முழுவதும் அந்த முத்திரையின் மேல் தான் இருக்க வேண்டும்.
இரண்டு நிமிடம் சங்கு முத்திரையை பிடித்த பிறகு தான், நீங்கள் குபேர முத்திரையை பிரயோகம் செய்ய வேண்டும். சங்கு முத்திரையை கையில் வைத்து விட்ட பிறகு, குபேர முத்திரையை நாம் பயிற்சி செய்தால் நமக்கான பலன், நமக்கான பணம் உடனடியாக நம்மை வந்து சேரும் என்று சொல்லப்பட்டுள்ளது.
குபேர முத்திரை நாம் எல்லோரும் அறிந்ததுதான். சுண்டுவிரலையும் மோதிர விரலையும் கீழே மடக்கிவிட்டு, மற்ற மூன்று விலகுகளின் நுனிப்பகுதியையும் ஒன்றாக சேர்த்து வைக்க வேண்டும். மடக்கி வைத்திருக்கக்கூடிய சுண்டு விரலும் மோதிர விரலும் சரியாக உள்ளங்கைகளில் இருக்கும் அந்த ரேகையின் மீது படும் படி மடக்கி வைத்துக் கொள்ளுங்கள். மீதம் இருக்கும் மூன்று விரல்களின் நுனிகளும் சரியாக வானத்தை பார்த்து இருக்க வேண்டும். (இந்த இரண்டு முத்திரைகளும் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது).
நீங்கள் முத்திரையை பிடிக்கும்போது உங்கள் கைகள் கொஞ்சம் இடது பக்கமோ, வலது பக்கமோ, அல்லது முன் பக்கமோ பின்பக்கமோ, சாய்ந்து விட்டால் இந்த முதிரையை பிடிப்பதின் மூலம் உங்களுக்கு முழுமையாக நல்ல பலன் கிடைக்காது. வீண் விரைய செலவுகள் ஏற்படலாம். வரவேண்டிய பணம் வராமல் போய்விடலாம், இதுபோல எதிர்மறையான விளைவுகளை உண்டு பண்ணுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.
முத்திரை என்பது சரியாக பிடிக்க வேண்டும். குபேர முத்திரையை கையில் வைத்தால் அந்த முத்திரை நம் தொப்புள் பகுதிக்கு நேராக இருக்க வேண்டும். மடக்கி இருக்கும் விரல்கள் சரியாக அந்த உள்ளங்கை ரேகையில் பட வேண்டும். மற்ற மூன்று விரல்களும் சரியாக வானத்தைப் பார்த்து இருக்க வேண்டும்.
முத்திரை கையில் இருக்கும் போது கவனம் முழுவதும் முத்திரையில் இருக்கட்டும். முத்திரையை அந்த பக்கம் இந்த பக்கம் சாய்க்காதீர்கள். முத்திரை வானத்தை பார்த்து மட்டுமே இருக்க வேண்டும். முத்திரை பிரயோகம் செய்யும் போது மனதிற்குள் “ஓம்” என்ற மந்திரத்தை சொல்லலாம். அப்படி இல்லை என்றால் “ஸ்ரீம்” என்ற மகாலட்சுமியின் பீஜ மந்திரத்தை சொல்லலாம். நாளைய தினம் ஏகாதசியோடு சேர்ந்த வெள்ளிக்கிழமை இருக்கிறது.
இதையும் படிக்கலாமே: நாளை 23-05-2025 வருதினி ஏகாதசி வழிபாடு
நாளை காலை சூரிய உதயத்திற்கு முன்பாக, நாளை காலை 5:30 மணிக்கு முன்பாக மொத்தமாக 20 நிமிடங்கள் இந்த முத்திரையை பிடித்து பயிற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக பல நாட்களாக பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருக்கும், ஒரு பிரச்சனை நாளைய தினமே தீருவதற்கு 100% வாய்ப்புகள் இருக்கிறது. சரியான முறையில் நம்பிக்கையோடு வேண்டுதல் வைத்தால். இந்த ஆன்மீகம் சார்ந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்று நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.