எல்லோருக்குமே சீக்கிரம் பணக்காரர் ஆகிவிட வேண்டும் என்ற ஆசை மட்டும் இருக்கிறது. ஆனால் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள தேவையான முயற்சிகளை மேற்கொள்வதில் மட்டும் சோம்பேறித்தனம். இன்று பணக்காரர்களாக இருப்பவர்கள் எல்லாம் தங்களுடைய உழைப்பை மூலதனம் செய்து தான் பணத்தை சம்பாதிக்கிறார்கள். அது எல்லாம் நம் கண்ணுக்கு தெரியாது.
அவனுக்கு மட்டும் பணம் வருது, அவன் மட்டும் பணக்காரர் ஆகின்றான், எனக்கு மட்டும் பணம் வரவில்லை, வந்த பணம் கையில் தங்கவில்லை என்று புலம்புவதை விட்டுவிட்டு, பணம் சம்பாதிக்க எப்படி உழைக்க வேண்டும், என்னென்ன முயற்சிகளை எல்லாம் மேற்கொள்ள வேண்டும் என்பதை பாருங்கள். நிச்சயம் உங்களுக்கான வாய்ப்பை கடவுள் கொடுப்பான்.
அதற்கான நேரம் காலம் வரும் வரை அயராது உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். கூடவே சேர்ந்து பின் சொல்லக் கூடிய இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் போது சீக்கிரம் நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். முதலில் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் சூரிய உதயத்திற்கு முன்பாகவே கண்விழித்து விட வேண்டும்.
சூரிய உதயத்திற்கு பிறகு தூங்கினால் அது தவறு. இரவு சாதாரணமாக 10 மணிக்கு தூங்குபவர்கள், சூரிய உதயத்திற்கு முன்பு காலை கட்டாயம் கண்விழிக்க வேண்டும். இரவு நிறைய நேரம் வேலை இருக்கிறது. நைட் சிஃப்ட் செய்பவர்களுக்கு இந்த கண்டிஷன் கிடையாது. அதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
தினமும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, சூரியன் உதயமாகும் சமயத்தில் சரியாக 6 மணி அளவில் சூரிய பகவானை நமஸ்காரம் செய்ய வேண்டும். சாதாரணமாக 2 கைகளை சேர்த்து சூரிய பகவானை கும்பிட்டாலே போதும். சூரியபகவானை வழிபாடு செய்து முடித்துவிட்டு இந்த மந்திரத்தை சொல்லுங்கள்
சூரிய நமஸ்காரம் செய்யும் போது சொல்ல வேண்டிய மந்திரம்
தனம் தேஹி
வித்யான் தேஹி
ஆயுள் தேஹி
தே ஹி மே ஆதித்யா நமஹ!
மந்திரம் இதுதான். மிக மிக எளிமையான மந்திரம். நான்கு வரி மந்திரம் தான். இதை எத்தனை முறை உச்சரிக்க முடியுமோ, காலையில் அத்தனை முறை உச்சரியுங்கள். கணக்கு தேவையில்லை. மந்திரத்தை உச்சரித்து விட்டு, உங்களுடைய அன்றாட வேலைகளை சுறுசுறுப்போடு தொடங்குங்கள். இது மட்டும் போதும்.
உங்கள் வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு உண்டான அத்தனை வழிகளும் உங்களுடைய கண்முன்னே தெரிய தொடங்கிவிடும். ஒரு நாள், இரண்டு நாள் இந்த வழிபாட்டை செய்துவிட்டு, நல்லது நடக்கவில்லை என்று பின்வாங்க கூடாது. தொடர்ந்து மூன்று மாதங்கள் இந்த வழிபாட்டை செய்தால், நீங்கள் நினைத்ததை சாதிக்கலாம். கடன் சுமையிலிருந்து வெளிவரலாம். நிறைய பணத்தை சம்பாதிக்க கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
கஷ்டங்கள் எல்லாம் படிப்படியாக குறையும். வாழ்க்கையில் எந்த பக்கம் போனாலும் இடி என்ற சூழ்நிலையில் சிக்கி இருப்பவர்கள். இந்த மந்திரத்தை சொல்லி பாருங்கள். நான்கு பக்கமும் அடைத்திருந்த வழி திறக்கும். பிரச்சினைகளுக்கு உண்டான தீர்வுகளை கண்டறிய தொடங்கி விடுவீர்கள். இப்படி அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
இதையும் படிக்கலாமே: ஆஷாட நவராத்திரியில் ஏற்ற வேண்டிய தீபம்
அத்தனை நன்மைகளும் உங்களை தேடி வரும். இதையெல்லாம் உங்களால் எப்போது உணர முடியும். நீங்கள் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து தயாராகி, சரியாக சூரிய உதயத்தின் போது, மந்திரத்தை சொல்லணும். அயராது உழைக்கணும், நல்லது தானாகவே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்து பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.