ஒரு வீடு எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனில் அங்கு முதலில் நல்ல விஷயங்கள் தொடர்ந்து நடக்க வேண்டும். வீட்டில் சுப காரியங்கள் எந்தவித தடைகளும் இல்லாமல் நடக்க வேண்டும். காரிய தடைகள் இல்லாமல் இருக்க வேண்டும். இத்துடன் பணவரவில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை இருக்க வேண்டும்.
இவையெல்லாம் ஒரு சேர ஒரு வீட்டில் அமைந்தாலே அங்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் நிரந்தரமாக குடியிருக்கும்.இவற்றையெல்லாம் பெறுவதற்கு நாம் நிச்சயமாக உழைக்க வேண்டும். அதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டும். அத்துடன் சேர்த்து தெய்வ வழிபாட்டையும் செய்ய வேண்டும் இந்த தெய்வ வழிபாடு என்பது அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற தெய்வங்களை வணங்கலாம்.
எல்லோர் வீட்டிலும் பொதுவான தெய்வ படங்கள் என சிலர் இருக்கும் அவைகளை நாம் எப்போதும் வணங்க வேண்டும். சில குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட முறையில் அவர்களை வணங்கும் போது இது போன்ற யோகங்கள் திடீரென நமக்கு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. அது பற்றியதொரு தகவலை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
பண வரவு அதிகரிக்க வீட்டு தெய்வ வழிபாடு
முதலில் வீட்டு தெய்வம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்வோம். வீட்டு தெய்வம் என்றவுடன் பெரும்பாலும் அனைவரும் குலதெய்வம் என்று நினைத்துக் கொள்வார்கள். நம் வீட்டில் தினந்தோறும் பூஜை அறையில் வைத்து வணங்கக் கூடிய தெய்வங்கள் தான் வீட்டு தெய்வங்கள். இன்றைய தினத்தில் அவர்களை நாம் எப்படி வணங்க வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
இன்றைய நாளில் அவர்களுக்கு நம் மஞ்சள் நிறத்திலான பூக்களை சூட்டி வழிபாடு செய்ய வேண்டும். அத்துடன் எளிமையான ஏதேனும் ஒரு நெய்வேத்தியத்தை படைத்து வணங்குவது மேலும் சிறப்பு. முதலில் பூஜையறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு படங்களுக்கு மஞ்சள் நிறத்திலான பூக்களை வைத்து அந்த தெய்வங்களுக்குரிய மந்திரங்கள், ஸ்லோகங்கள் என உங்களுக்கு எது தெரிந்திருந்தாலும் அதை மனதார சொல்லி வழிபாடு செய்யுங்கள்.
அதன் பிறகு சிவபெருமான், பைரவர், முருகப்பெருமாள் இவர்கள் யாரேனும் ஒருவரை இந்த நாளில் சென்று அவர்களுக்கான வழிபாட்டை முறைப்படி செய்யுங்கள். செவ்வாய்க்கிழமை முருகர் வழிபாட்டுக்கு உகந்த நாள். இன்று அஷ்டமியும் சேர்ந்து இருப்பதால் பைரவரை வணங்கலாம்.
இவர்களுக்கெல்லாம் முதல் கடவுளான சிவபெருமானை வணங்குவது இன்னும் சிறப்பு. இந்த வழிபாட்டை இன்று இரவுக்குள் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது செய்து விடுங்கள். இன்றைய தினத்தில் இவைகளை செய்யும் பொழுது நல்ல செய்தியும் சந்தோஷமான சூழ்நிலையும் உருவாவதோடு பணவரவு நிச்சயம் வரும் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்க தீபம்
அது நமக்கு வரவேண்டிய பணமாக இருக்கலாம் அல்லது நாம் எதிர்பார்த்த பணமாக இருக்கலாம்.புதிய வேலை தொடர்பான தகவலாக இருக்கலாம் ஏதேனும் ஒரு நல்ல செய்தியுடன் கூடிய பணவரவு நிச்சயம் சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கை உடன் இந்த வழிபாடு முறைகளை செய்து பலன் அடையுங்கள்.