- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணத்தை ஈர்க்கும் மூன்றாம் பிறை பரிகாரம்

பணத்தை ஈர்க்கும் மூன்றாம் பிறை பரிகாரம்

- Advertisement -

நம்முடைய ஆழ் மனதிற்கும் பிரபஞ்சத்திற்கும் அதிகமான அளவு தொடர்பு இருக்கிறது என்று கேள்விப்பட்டு இருப்போம். நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நமக்கு நடக்கும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். நீ என்னவாக வேண்டும் என்று நினைக்கிறாயோ அதுவாகவே ஆகுவாய் என்றும் புராணங்களில் கூறப்பட்டு இருக்கிறது. இப்படி எண்ணங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதால்தான் நாம் நல்லதை மட்டுமே நினைக்க வேண்டும், நல்லதை மட்டுமே சொல்ல வேண்டும், நல்லதை மட்டுமே செய்ய வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். அந்த வகையில் மூன்றாம் பிறை நாளான இன்று எந்த ஒரு வரி வாக்கியத்தை எழுதினால் பணத்தை ஈர்க்க முடியும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

பணத்தை ஈர்க்கும் பரிகாரம்

இந்த உலகத்தில் உயிர் வாழக்கூடிய ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படையாக தேவைப்படக்கூடியது பணம்தான். இந்த உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் பணம் இருந்தால் தான் அவர்களால் அவர்களுடைய வாழ்க்கையை வாழ முடியும் என்ற நிலை ஆளாகிவிட்டது. அதனால் பணத்தை அதிக அளவில் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் மனிதர்களிடையே உருவாக்கி விட்டது. எண்ணம் மட்டும் உருவானால் போதுமா? அதற்குரிய முயற்சிகளை செய்ய வேண்டும் அல்லவா? அப்படி முயற்சிகளை செய்தாலும் அந்த முயற்சிகள் வெற்றி அடைந்து அதன் மூலம் பணவரவு உண்டாக வேண்டும் அல்லவா? இதற்கான ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

நாம் பேசக்கூடிய ஒவ்வொரு வார்த்தையையும் நம் கண்ணுக்கு தெரியாமல் நம்மை சுற்றி இருக்கக்கூடிய தேவதைகளும் பிரபஞ்ச பேராற்றல்களும் கேட்டுக் கொண்டு இருக்கின்றன என்றும் அவர்கள் அதை நிறைவேற்றி விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் நாம் சொல்லக்கூடிய வார்த்தைகள் கூட நேர்மறையான வார்த்தைகளாக இருக்க வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சிறப்பு மிகுந்த நாட்களாக கருதக்கூடிய சில முக்கியமான நாட்களில் நாம் சொல்லக்கூடிய வார்த்தைகளுக்கு பல மடங்கு சக்திகள் இருக்குமாம். அந்த வகையில் தான் அமாவாசை முடிந்து வரக்கூடிய மூன்றாம் பிறை நாளும் திகழ்கிறது. அந்த நாளில் நாம் கூறக்கூடிய எந்த ஒரு வார்த்தையாக இருந்தாலும் அந்த வார்த்தைக்கு பிரபஞ்ச ஆற்றல் என்பது மிகவும் அதிகமாக இருக்கும்.

அதை அடிப்படையாக வைத்து நாம் பணத்தை ஈர்க்கும் ஒரு வரி வாக்கியத்தை 27 முறை எழுத வேண்டும். ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கோடு போட்டிருக்கக் கூடாது. அதில் பச்சை நிற பேனாவை பயன்படுத்தி பின்வரும் இந்த ஒரு வரி வாக்கியத்தை முழுமனதோடு எந்தவித சஞ்சலமும் இல்லாமல், தயக்கமும் இல்லாமல், மன மகிழ்ச்சியுடன் கூறிக் கொண்டே எழுத வேண்டும். சந்திரன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நட்சத்திரத்துடன் இருக்கிறார் என்பதால்தான் இந்த வாக்கியத்தை 27 நட்சத்திரங்களை கருத்தில் கொண்டு 27 முறை எழுத வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.

- Advertisement -

27 முறை எழுதி முடித்த பிறகு இந்த பேப்பரை மடித்து நாம் எந்த இடத்தில் பணம் வைத்து புலங்குவோமோ அந்த இடத்தில் வைத்து விட வேண்டும். இந்த பேப்பரை மாற்ற வேண்டிய அவசியமே இல்லை. எப்பொழுது இந்த பேப்பர் கிழியும் நிலைக்கு போகிறதோ அப்பொழுது அதை எடுத்து எரித்துவிட்டு அடுத்து வரக்கூடிய மூன்றாம் பிறை நாளில் இதே வழிமுறையை பின்பற்றி எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த வாக்கியத்தை மாலை 6 மணியிலிருந்து இரவு 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் எழுதலாம். இதற்கு எந்தவித தீட்டும் தடையாக இருக்காது என்பதால் அனைவராலும் இதை எழுத முடியும்.

பண ஈர்ப்பு வாக்கியம்

“தெய்வீக பிறை பணவரவை அதிகரித்தது”

இதையும் படிக்கலாமே:அக்னி நட்சத்திர நிறைவு நாள் வழிபாடு

முழு மனதோடும், மன மகிழ்ச்சியோடும் இந்த ஒரு வரி வாக்கியத்தை இன்று இரவுக்குள் 27 முறை எழுதுபவர்களுக்கு பண வரவை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைவதோடு பண வரவும் அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்