- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணவசியம் ஏற்பட ஜனவரி ஒன்றாம் தேதி ஏற்ற வேண்டிய தீபம்

பணவசியம் ஏற்பட ஜனவரி ஒன்றாம் தேதி ஏற்ற வேண்டிய தீபம்

- Advertisement -

எந்த ஒரு தெய்வத்தை நாம் வழிபாடு செய்வதாக இருந்தாலும் அந்த தெய்வத்திற்கு என்றே நாம் தீபம் ஏற்றி வைத்து தான் வழிபாடு செய்வோம். தீபத்தில் அனைத்து விதமான தெய்வங்களும் ஆகர்ஷணம் ஆவார்கள் என்று கூறப்படுகிறது. முழுமனதோடு எந்த தெய்வத்தை நினைத்து தீபத்தை ஏற்றுகிறோமோ அந்த தீபத்தில் அந்த தெய்வம் அமர்ந்து அருள் புரிவார் என்று கூறப்படுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த தீபத்தில் பல நன்மைகள் உண்டாகும். 2025 ஆம் ஆண்டு முழுவதும் நமக்கு பணவசியம் ஏற்பட வேண்டும் என்றால் எந்த முறையில் தீபமேற்றி வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பணவசியம் ஏற்பட ஜனவரி தீபம்

தீபம் ஏற்றுவதால் பல நன்மைகள் உண்டாகும். பல விதங்களில் தீபம் ஏற்றலாம். தீபம் ஏற்றக்கூடிய நேரமும் அந்த தீபத்திற்குரிய பலனை நமக்கு அதிகரிக்கும். எந்த நாளில் ஏற்றுகிறோம் என்பதும் பலனைத் தரும். தீபம் தொடர்பாக நாம் என்ன செயலை செய்கிறோமோ அதற்கேற்றாற்போர் பலன் நமக்கு கிடைக்கும் என்றே கூறப்படுகிறது. அந்த வகையில் பண வசியம் ஏற்படவும் பணவரவில் எந்தவித தடைகளும் இல்லாமல் இருக்கவும் ஜனவரி ஒன்றாம் தேதி தீபம் ஏற்றும் முறையை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த தீபத்தை பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் ஏற்ற வேண்டும். அப்பொழுதுதான் இந்த தீபத்திற்குரிய முழுமையான பலன் நமக்கு கிடைக்கும். முதலில் வீட்டு நிலை வாசலில் தீபம் ஏற்ற வேண்டும். இரண்டு அகல் விளக்குகளை வைத்து அதில் நெய் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு அந்த தீபத்தில் இரண்டு கற்கண்டு ஒரு ஏலக்காய் என்ற வீதம் போட வேண்டும். அடுத்ததாக நம்முடைய வீட்டு பூஜை அறையில் ஒரு தாம்பாள தட்டை வைத்து அதில் அட்சதையை பரப்பி அதற்கு மேல் இரண்டு அகல் விளக்குகளை வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இரண்டு தீபங்களிலும் ஒன்று என்ற வீதம் கிராம்பை போட வேண்டும்.

அடுத்ததாக நம்முடைய வீட்டு சமையலறையில் உப்பு வைத்திருக்கும் இடத்திற்கு முன்பாக ஒரு தட்டை வைத்து அதில் இரண்டு அகல் விளக்குகளை வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு இந்த தீபத்தில் வசம்பு தூள் அல்லது வசம்பை உடைத்து கூட நாம் போடலாம். இந்த முறையில் நாம் ஜனவரி ஒன்றாம் தேதி பிரம்ம முகூர்த்த நேரத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த பணத்தடைகள் அனைத்தும் நீங்கும், பண வசியம் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

தீபம் எரிந்து முடித்த பிறகு அந்த தீபத்தில் நாம் போட்டிருந்த கிராம்பு, ஏலக்காய் மற்றும் வசம்பு இவை அனைத்தையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அன்று இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக வீட்டிற்கு வெளியே ஒரு அகல் விளக்கை வைத்து இவை அனைத்தையும் அதில் போட்டு அதனுடன் பச்சை கற்பூரம் மற்றும் சாதாரண கற்பூரம் இரண்டையும் சேர்த்து வைத்து எரித்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:தேவதை நாள் வழிபாடு

மிகவும் எளிமையாக ஏற்றக்கூடிய இந்த தீபத்தை முழுமனதோடு பிரம்ம முகூர்த்த நேரத்தில் யார் ஒருவர் ஏற்றி வழிபாடு செய்கிறார்களோ, அவர்களுடைய வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த பணத்தடைகள் அனைத்தும் விலகும், பணவசியம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்