பஞ்ச தீப எண்ணெய் விளக்கேற்றுவதால் கிடைக்கும் பலன்கள்

vilakku deepam
- Advertisement -

இந்து மத சம்பிரதாயங்களில் பெரும்பாலான சுப காரியங்கள், தெய்வீக நிகழ்வுகளின் போது தீபம் ஏற்றுவது காலங்காலமாக கடைபிடிக்கப்படுகிறது. தீபத்தில் எரியும் நெருப்பு அது ஏற்றப்படும் இடங்களில் இருக்கும் இருளை போக்கி வெளிச்சத்தை தருகிறது. அதோடு அனைத்து எதிர்மறை சக்திகளையும் அழிக்கும் தன்மை கொண்டதாகவும் அனைத்திலும் இறை சக்தியை நிரப்பும் தன்மை கொண்டதாகவும் தீபம் இருக்கிறது. அந்த தீபம் எரிவதற்கு பல வகையான எண்ணெய்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன. அதில் பஞ்ச தீப எண்ணெய் பற்றிய பல விடயங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

neideepam

தீபம் ஏற்றுவதில் பல வழிமுறைகள் இருக்கின்றன. தீபம் ஏற்றும் போது தீபம் ஏற்ற பயன்படும் விளக்கு, பயன்படுத்தபடும் திரி, தீபம் எரிய தேவையான எண்ணெய் ஆகியவற்றை பொறுத்து வேறுபட்ட பலன்கள் தீபமேற்றுவோருக்கு கிடைக்கும். அதில் தற்காலங்களில் கோயில்களில் பஞ்ச தீபம் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவது பிரபலமாக உள்ளது. இது குறித்து இங்கு விரிவாக காண்போம்.

- Advertisement -

பசு நெய், விளக்கு எண்ணெய், இலுப்பை எண்ணெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் என ஐந்து விதமான வஸ்துக்களை கலந்து தயாரிக்கப்படுவது தான் பஞ்ச தீப எண்ணெய். கடைகளில் பிளாஸ்டிக் குடுவையில், பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் பஞ்ச தீப எண்ணெயை விட, மேற்கூறிய ஐந்து பொருட்களையும் நாம் சேகரித்து, நாமாகவே அவற்றை ஒன்றாக கலந்து பஞ்ச தீப எண்ணெயாக தயாரித்து விளக்கேற்றுவதால் நிச்சய பலன்களை தரும். தற்போது அனைத்து விசேஷங்களுக்கும் பஞ்ச தீப எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கமாக இருந்தாலும். அக்காலங்களில் ஒரு நபருக்கு ஏவல், பில்லி சூனியம், செய்வினை, துஷ்ட சக்திகளின் தொல்லை போன்றவற்றின் தாக்கத்தை ஒழிக்கவே கோயில்களில் ஒரு குறிப்பிட்ட நாள், நேரத்தில் ஏற்றி வழிபட்டனர்.

deepam

அனுபவம் வாய்ந்த சில தாந்திரீகர்களின் கருத்துபடி மற்ற எந்த ஒரு விடயத்தை விடவும் அமானுஷ்ய சக்திகளின் பாதிப்புகள், நேரடி – மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்க பஞ்சதீப எண்ணெய் ஊற்றி தீபமேற்றினால் நிச்சய பலன்களை தரும். அமாவாசை, பௌர்ணமி, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 மணிக்கு மேல் வீடுகளிலோ அல்லது கோயில்களிலோ பஞ்ச தீப எண்ணெய் விளக்கேற்றுவதால் உங்களிடம் இருக்கும் துஷ்ட சக்திகள் நீங்கி, சுபிட்சங்கள் பெருகும். எதிரிகள் ஒழிவர். உங்கள் வாழ்வில் வளமை அதிகரிக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Pancha deepam oil benefits in Tamil. It is also called as Pancha deepam oil in Tamil or Pancha deepa ennai in Tamil or Pancha deepa ennai palangal in Tamil or Pancha deepa ennai in Tamil or Deepa ennai in Tamil.

- Advertisement -