பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பரிகாரங்கள்

poosam-natchathiram sani

நவகிரகங்களில் சனி கிரகத்திற்கு இருக்கும் வலுவான ஆற்றலை போன்று மற்ற கிரகங்களுக்கு இருப்பதில்லை. சனி கிரக பெயர்ச்சியால் அனைத்து ராசியினருக்கும் நன்மையான பலன்கள் மிகுந்தும், தீமையான பலன்கள் மிக கடினமாகவும் இருப்பதை நாம் அறிவோம். அப்படிப்பட்ட சனி பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்ட ஒரு நட்சத்திரம் தான் “பூசம்” நட்சத்திரம். இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களின் வாழ்வில் சிறக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

27 நட்சத்திரங்களின் வரிசையில் எட்டாவதாக வரும் நட்சத்திரம் “பூசம்” நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தின் நவகிரக அதிபதியாக “சனி” பகவான் இருக்கிறார். ” 8 ” என்பது சனி பகவானுக்குரிய எண் ஆகும் நட்சத்திர வரிசையில் 8 வதாக பூசம் நட்சத்திரம் வருவது சனி பகவானின் முழுமையான ஆதிக்கம் இந்நட்சத்திரக்காரர்கள் மீது இருப்பதை காட்டுகிறது. இந்த நட்சத்திரத்தின் அதிதேவதையாக “குரு” பகவான் இருக்கிறார். உறுதியான உடலும், மனமும் கொண்ட பூசம் நட்சத்திரகாரர்கள் தங்களின் வாழ்வில் பொருளாதார முன்னேற்றங்களை பெறவும், சொத்துகள் அதிகம் சேரவும் கீழ்கண்ட பரிகாரங்களை திட சித்தத்துடன் செய்து வருதல் அவசியம்.

பூசம் நட்சத்திரகாரர்கள் தங்கள் நட்சத்திர அதிபதியான சனி பகவானை சனிக்கிழமைகளில் கருப்பு எள் கலந்த விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, சனி பகவான் மந்திரங்கள் துதித்து வழிபட்டு வர வேண்டும். வருடத்திற்கொருமுறை திருநள்ளாறு சனி பகவான் கோயிலுக்கு சென்று, சனி ப்ரீத்தி பூஜை செய்து வழிபட வேண்டும். சனி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஆஞ்சநேயரையும் பூஜித்து வர வாழ்வில் நன்மைகள் பல உண்டாகும். தினமும் நீங்கள் காலை உணவை சாப்பிடும் முன்பு உணவிலிருந்து கொஞ்சத்தை எடுத்து காகங்களுக்கும், சாப்பிட்டு முடித்த பின்பு உணவின் மீதத்தை தெரு நாய்களுக்கு வைப்பது சனி தோஷத்தை போக்கும்.

crow feeding

சனிக்கிழமைகளில் துறவிகள், யாசகர்களுக்கு உங்கள் சக்திக்கேற்ப அன்னதானம் மற்றும் பொருள் தானம் செய்யலாம். உங்கள் வீடுகளில் நறுமணமுள்ள மலர்கள் பூக்கும் செடிகளை வளர்ப்பதால் இறையாற்றல் உங்கள் வீடுகளில் நிறையும். கடின உழைப்பிற்கு பெயர் பெற்ற விலங்குகளான கழுதைகளுக்கு உணவளிப்பதால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அனைத்து தோஷங்களும் நீங்கி, செல்வச்செழிப்பு உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
வல்லமை தரும் விநாயகர் பூஜை

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Poosam natchathiram pariharam in Tamil. It is also Poosam natchathiram valipadu in Tamil or Poosam nakshatra in Tamil or Poosam nakshatra adhipathi in Tamil or Poosam natchathira adhidevthai in Tamil.