பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைக்கும் முறை

poojai-room
- Advertisement -

வீடு என்ற ஒன்று இருந்தால், அதில் நிச்சயம் பூஜை அறை என்ற ஒன்று இருக்கும். அதில் சுவாமி படங்கள் இருக்கும். நாம் எப்படி தினமும் சாப்பிட்டு பசியாறுகிறோமோ, அதே போல தான் சுவாமிக்கும் தினமும் நெய்வேத்தியம் வைக்க வேண்டும் என்பது நம்முடைய ஆகம விதி. ஆனால் இன்று எல்லோராலும் இறைவனுக்கு நிவேதியும் வைக்க முடியவில்லை. விளக்கேற்றவே முடியவில்லை.

இதில் எங்கிருந்து நெய்வேத்தியம் வைத்து, சாமி கும்பிடுவது என்று கேட்காதீங்க. நம்முடைய இந்து சாஸ்திரப்படி தினமும் வீட்டில் விளக்கு ஏற்றி பூஜை அறையில் இருக்கும் இறைவனுக்கு நிவேதனம் வைத்து, இரண்டு கை கூப்பி அந்த இறைவனை வணங்க வேண்டும். அதுதான் முறை.

- Advertisement -

அதை பின்பற்றுவது நம்முடைய வாழ்க்கைக்கு ரொம்ப ரொம்ப நல்லது. சரி எங்களால் தினமும் இறைவனுக்கு நிவேதியும் வைக்க முடியாது. ஆனால் நிவேதியம் வைத்த பலனை நாம் பெற வேண்டும் என்றால் என்ன செய்யலாம். ஆன்மீகம் சொல்லும் ஒரு எளிய வழிபாட்டு முறை இதோ இந்த பதிவில் உங்களுக்காக.

பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைக்கும் முறை

பெரும்பாலும் இப்போது நாம் குடிப்பதற்கு RO வாட்டர் அல்லது வாட்டர் கேனில் கிடைக்கக்கூடிய தண்ணீரை தான் பயன்படுத்துகின்றோம். கூடுமானவரை இதையே எடுத்து சுவாமிக்கு வைப்பதை தவிர்ப்பது ரொம்ப ரொம்ப நல்லது. நம்முடைய வீட்டில் போர் வாட்டர் இருந்தால் அந்த தண்ணீரை இறைவனுக்கு நிவேதியமாக வைக்கலாம்.

- Advertisement -

நேரடியாக பூமியிலிருந்து எடுக்கப்பட்ட அந்த நிலத்தடி தண்ணீரை இறைவனுக்கு வைப்பது ரொம்ப ரொம்ப சிறப்பு. கிணற்றுத் தண்ணீர் கிடைத்தால் ரொம்ப ரொம்ப நல்லது. ஆனால் இந்த காலத்தில் கிணறை நம்மால் தேட முடியாது. முடிந்தவர்கள் நிலத்துக்கு அடியிலிருந்து வரும் போர் வாட்டியாவது பயன்படுத்தலாம்.

அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்பவர்கள் உங்களால் முடிந்த குடுக்கின்ற தண்ணீரை பஞ்ச பாத்திரத்தில் வைக்கலாம். வெறுமனே அந்த தண்ணீரை பஞ்சபாத்திரத்தில் ஊற்றாமல், தினமும் அந்த பஞ்சவாத்திரத்தில் ஒரு துளசி இல்லையோ, ஒரு வேப்ப இலையோ, ஒரு மாயிலையோ, அல்லது ஒரு ஏலக்காயோ போட்டு வைத்தால் ரொம்ப ரொம்ப நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

நீங்கள் அந்த தண்ணீரில் போடப்படும் இலையே இறைவனுக்கு பிரசாதமாக ஏற்றுக் கொள்ளப்படும். பிறகு நீங்கள் தினமும் நிவேதனம் வைக்க வேண்டிய அவசியமே இருக்காது. தினமும் பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை கீழே கொட்டி விட்டு, புது தண்ணீர் வைத்து அதில் ஒரு ஏலக்காயை போட்டு சுவாமிக்கு வைத்து விளக்கு ஏற்றி விடுங்கள் அவ்வளவுதான் முடிந்தது.

இந்த பூஜை முடித்துவிட்டு அந்த தீர்த்தத்தை நீங்களும் கொஞ்சம் பருகலாம். உங்களுடைய வேண்டுதல், இறைவனின் அருளாசி பெற்ற தீர்த்தம் அது. குறிப்பாக எல்லோர் வீடுகளில் செம்பில் இந்த பஞ்ச பாத்திரத்தை வைத்துக் கொள்வது ரொம்ப ரொம்ப சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

ஏலக்காய் கூட அந்த தண்ணீரில் போட முடியாதா. ஒரு டப்பா பச்சை கற்பூரம் வாங்கி வச்சுக்கோங்க. அதில், ஒரு சிட்டிகையிலும் குறைந்த அளவு எடுத்து அந்த தண்ணீரில் போட்டு இறைவனுக்கு நெய்வேதியமாக வைத்து விடுங்கள் அவ்வளவுதான். நெய்வேத்தியம் வைக்கவே முடியாது என்பவர்கள், இந்த தீர்த்தத்தை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வது பல மடங்கு நன்மை தரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: திருமணம் நடக்க துர்க்கை அம்மன் வழிபாடு

எளிமையான வழிபாட்டு முறை தான். இந்த குறிப்பு உங்களுக்கு பயன்படும் படி இருந்தால் உங்க வீட்டில் இந்த முறைப்படி சாமி கும்பிடுங்க. நிச்சயம் குடும்பத்தில் நன்மையே நடக்கும் என்ற வேண்டுதலை ஆண்டவனிடம் வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -