உங்கள் வீட்டு பூஜை அறையில் பஞ்ச பாத்திரத்தை இப்படி வைத்தால் பஞ்சமே இருக்காது. மகாலட்சுமி நிரந்தரமாக பூஜை அறையில் குடியேறி விடுவாள்.

panja-pathiram

நம் வீட்டில் செய்யக்கூடிய பூஜை புனஸ்காரங்கள் முழுமையான பலன் அளிக்க வேண்டும் என்றால், அதற்கான சில சின்னச் சின்ன மாற்றங்களை கொண்டு வருவதில் தவறொன்றும் கிடையாது. பெரும்பாலும் நாம் எல்லோருடைய வீட்டிலும் பூஜை அறையில் பஞ்சபாத்திரம் என்ற ஒன்றை வைத்து இருப்போம். ஒருவீட்டில் பஞ்சபாத்திரம் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருந்தால் அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும் என்பதைப் பற்றிய சின்ன சின்ன குறிப்புகளை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

thulasi-theertham

இந்த மாற்றத்தை நீங்கள் உங்களுடைய வீட்டில் கொண்டு வந்து தான் ஆக வேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் முடிந்தால் மட்டுமே, உங்களுடைய வீட்டில் இந்த வழிபாட்டு முறையை பின்பற்றலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. நம்முடைய எல்லோரது வீட்டிலும் பஞ்ச பாத்திரம் என்பது பெரும்பாலும் செம்பு உலோகத்தில் இருக்கும். செம்பு உலோகத்தால் செய்யப்பட்ட பஞ்ச பாத்திரத்தை தான், பூஜை அறையில் வைத்து வழிபாட்டிற்காக பயன்படுத்தி வருகின்றோம். செம்பு நேர்மறை ஆற்றலை ஈர்க்கக் கூடிய தன்மை கொண்டதுதான். செம்பில் பஞ்ச பாத்திரத்தை வைப்பது தவறொன்றும் கிடையாது.

ஆனால் இந்த பஞ்ச பாத்திரத்தை முடிந்தவரை வெள்ளியில் வீட்டில் வைத்துக்கொண்டால் மகாலட்சுமியின் அம்சம் மேலும் நிறைந்திருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. வெள்ளி பஞ்ச பாத்திரத்தை எல்லோராலும் வாங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. நீங்கள் செம்பில் பஞ்ச பாத்திரத்தை வைத்து இருந்தாலும், அது நிறைய தண்ணீரை ஊற்றி அதில் ஒரு வெள்ளி நாணயத்தை போட்டு, ஒரு ஏலக்காய், ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை கலந்து, பூஜை அறையில் வைத்தால் சுக்கிரனின் அம்சம் நிறைந்து, மகாலட்சுமி கடாட்சம் நம் வீடு தேடி வரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

pancha-pathiram

மகாலட்சுமிக்கும் சுக்கிரனுக்கும் உகந்தது ஏலக்காய். மங்களத்தை கொடுப்பது மஞ்சள்தூள். வெள்ளி சுக்கிரனுக்கு மகாலட்சுமிக்கு உரிய உலோகமாக சொல்லப்பட்டுள்ளது. ஆக இந்த எல்லாப் பொருட்களும் சேர்ந்து அந்த பாத்திரத்தில் நிறைவாக இருக்கும் போது உங்கள் வீடும் பஞ்சம் இன்றி, நிறைவாக இருக்கும் என்பதே நம்பிக்கை.

- Advertisement -

வெள்ளி நாணயம் மிகக் குறைந்த விலைகளில் கூட கடைகளில் கிடைக்கின்றது. சிறிய அளவில் இருக்கும் லக்ஷ்மி படம் பதித்த நாணயம் கிடைத்து என்றால், அதை பஞ்சபாத்திர தண்ணீரில் எப்போதுமே போட்டு வைப்பது இன்னும் சிறந்தது. வாரத்திற்கு ஒருமுறை வியாழக்கிழமை அன்று பூஜை அறையை சுத்தம் செய்யும் போது, இந்த பஞ்ச பாத்திரத்தை கழுவி, உள்ளே இருக்கும் வெள்ளி நாணயத்தையும் கழுவி, ஏலக்காயை மற்றும் புதியதாக மாற்றிக் கொண்டு சுத்தமான தண்ணீரை மீண்டும் நிரப்ப வேண்டும்.

poojai1

இந்த மாற்றத்தை இன்றைக்கே உங்கள் வீட்டு பூஜை அறையில் கொண்டு வர வேண்டும் என்பது அவசியம் கிடையாது. பெண்கள் தங்களுடைய பூஜைக்காக வெள்ளியில், இந்த பஞ்ச பாத்திரத்தை வாங்க வேண்டும் என்பதற்காகவோ, அல்லது வெள்ளி நாணயத்தை வாங்க வேண்டும் என்பதற்காகவோ சிறுக சிறுக காசை சேர்த்து, அதன் பின்பு உங்கள் வீட்டிற்கு மகாலட்சுமி தேடி வரவேண்டும் என்ற எண்ணத்தோடு, சிறிய வெள்ளி நாணயத்தை வாங்கி உங்கள் பஞ்சபாத்திரம் போட்டு வைத்து பாருங்கள்.

coin

நிச்சயமாக இந்த வெள்ளி நாணயத்தை வாங்குவதற்காக சேமிக்க பழகிய உங்களது கைகள், பணத்தை அதன் பின்பு தொடர்ந்து சேமிக்க ஆரம்பித்து விடும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. உங்கள் வீட்டில் வெள்ளிப் பொருட்களை, குறிப்பாக பூஜைக்கான வெள்ளி பொருட்களை, நீங்கள் எந்த அளவிற்கு வாங்கி வீட்டில் சேர்த்துக் கொண்டே இருக்கிறீர்களோ அந்த அளவிற்கு, லட்சுமி கடாட்சமும் உயர்ந்து கொண்டே செல்லும். முயற்சி செய்து பாருங்கள். நல்ல பலனை உங்களால் உணர முடியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் கட்டாயம் இருக்கக் கூடாத 4 பொருட்கள்! இந்த பொருட்களை வீட்டில் வைத்தால் நடக்கும் விபரீதத்தை யாரும் தடுக்க முடியாது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.