பன்னீர் பட்டர் மசாலாவை, இவ்வளவு ஈஸியா, இவ்வளவு சுலபமா, வேற யாராலயும் செய்ய முடியாதுங்க! இந்த ட்ரிக்க நீங்க மட்டும் தெரிஞ்சுக்கோங்க! வேற யாருக்கும் சொல்லிடாதீங்க!

panner
- Advertisement -

எல்லோருக்கும் பிடித்த ரிச்சான டேஸ்ட்ல, பன்னீர் பட்டர் மசாலாவை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம், இந்த குறிப்பை நீங்கள் தெரிந்து கொண்டு, உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுங்கள். கட்டாயம் எல்லோரும் கேட்பாங்க! இதை எப்படி செஞ்ச? அப்படின்னு! அந்த அளவுக்கு ருசி இருக்கும். இந்த ட்ரிக்க நீங்க மட்டும் ரகசியமா வச்சுக்கோங்க. வெளியாட்களுக்கு சொல்லிடாதீங்க. நமக்குன்னு ஒரு கைப்பக்குவம் வேணும்தானே! பன்னீர் பட்டர் மசாலா சூப்பரா, சிம்பிளா எப்படி செய்வது இப்பவே தெரிஞ்சுக்கலாமா?

panner

Step 1:
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, 1 டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, 1/2 கிலோ தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளுங்கள். இதோடு பட்டை – 1 துண்டு, பிரியாணி இலை – 1 , பச்சை மிளகாய் – 2, காய்ந்த மிளகாய் – 2, ஏலக்காய் – 5, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன், முந்திரி – 15 இவை அனைத்தையும் மொத்தமாக போட்டு கிளறி விட்டு விடுங்கள்.

- Advertisement -

1/4 ஸ்பூன் அளவு உப்பு சேர்த்து, ஒரு சிறிய டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி, ஒரு மூடி போட்டு, தக்காளியை பச்சை வாடை போகும் அளவிற்கு வேக விட்டு விடவேண்டும். மிதமான தீயில் 15 நிமிடத்திலிருந்து 20 நிமிடம் வரை வேக வைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதானது நன்றாக ஆறிய பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து தயாராக எடுத்து அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

tometo

Step 2:
மீண்டும் ஒரு கடாயில் 4 டேபிள் ஸ்பூன் அளவு வெண்ணெய் ஊற்றி உருக்கிக் கொள்ள வேண்டும். இதோடு 1 ஸ்பூன் அளவு எண்ணெயும் சேர்த்துக் கொள்ளலாம். பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன், சிவப்பு காஷ்மீரி சில்லி பவுடர் இருந்தால் – 2 ஸ்பூன் போட்டுக்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால், 1 ஸ்பூன் – தனி மிளகாய் தூளை சேர்த்து வெண்ணையில் ஒரு நிமிடம் வரை வதக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக மிக்ஸியில் தயாராக அரைத்து வைத்திருக்கும் விழுதை கடாயில் ஊற்றி 3 நிமிடங்கள் வரை கொதிக்கவிடுங்கள். இந்த இடத்தில் தேவையான அளவு உப்பை போட்டுக்கொள்ளுங்கள். கிரேவி 5 நிமிடங்கள் நன்றாக கொதித்த பின்பு 300 கிராம் அளவு கியூப் வடிவில் வெட்டி வைத்திருக்கும் பன்னீரை கிரேவி யோடு சேர்த்து ஒரு மூடி போட்டு மிதமான தீயில் 7 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

Step 3:
இறுதியாக இந்த பன்னீர் பட்டர் மசாலாவை இறக்குவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்பு, கஸ்தூரி மேத்தி – 1/4 ஸ்பூன், கரம் மசாலா – 1/4 டீஸ்பூன், சர்க்கரை – 1/2 ஸ்பூன், பிரஷ் க்ரீம் – 1/4 கப், சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலந்து விட்டு, கீழே இறக்கி விட்டால், ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலா, சூப்பரா ரெடியா இருக்கும். இந்த குறிப்பில் கொடுத்திருக்கா ஒரு பொருளை கூட மிஸ் பண்ணாமல், செஞ்சு பாருங்க கட்டாயம் டேஸ்ட் நல்லா வரும். ஒரு வாட்டி ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.

இதையும் படிக்கலாமே
சமையலில் உங்களுக்கு தெரியாத சில ரகசியங்களும், அதன் தேவைகளும்! தெரிந்தால் ஆச்சரியபடுவீர்கள்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -