ஒருமுறை ஃபிரைட் ரைஸை வீட்டில் இப்படி செய்தால், மறுமுறை ஹோட்டலுக்கு போய் பன்னீர் ஃபிரைட் ரைஸ் வாங்கவே மாட்டீங்க.

panner-fraid-raise
- Advertisement -

நம்மில் நிறைய பேருக்கு பன்னீர் ஃபிரைட் ரைஸ் என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஹோட்டலுக்கு போனால் பெரும்பாலும் இதை நிறைய பேர் ஆர்டர் பண்ணி சாப்பிடுவாங்க. ஆனா கடையில் வாங்கி சாப்பிட்டால் அதில் நிச்சயம் அஜினோ மோட்டோ சேர்த்திருக்கும். அடிக்கடி அஜினோ மோட்டோ சேர்த்த சாப்பாட்டை சாப்பிடுவது உடலுக்கு அவ்வளவு ஆரோக்கியம் இல்லை. பிறகு எப்படி ருசியான ஃப்ரைட் ரைஸ் கிடைக்கும். அஜினோ மோட்டோ சேர்க்காமலும் நம்முடைய வீட்டிலேயே பன்னீர் ஃபிரைட் ரைஸ் சுவையாக செய்யலாம். எப்படின்னு தெரிஞ்சுக்க ஆர்வம் உள்ளவர்கள் ரெசிபி தொடர்ந்து படியுங்க.

செய்முறை

முதலில் இதற்கு ஒரு டம்ளர் அளவு பாசுமதி அரிசியை எடுத்து நன்றாக கழுவி விட்டு, நல்ல தண்ணீரை ஊற்றி 1/2 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். பிறகு ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதி வந்தவுடன் 1/2 மணி நேரம் ஊறிய பாசுமதி அரிசியை சுடுதண்ணியில் போட்டு தேவையான அளவு உப்பு, 1 ஸ்பூன் ரீஃபென்ட் ஆயில் ஊற்றி அரிசியை முக்கால் பாகம் வேகவைத்து தண்ணீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு 250 கிராம் பன்னீர் எடுத்துக்கோங்க. அதை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக்கோங்க. கடையில் இருந்து வாங்கிய பன்னீராக இருந்தால் இந்த பன்னீரை சுடுதண்ணியில் போட்டு அலசி எடுத்துவிட்டு, அதுக்கு பிறகு சமைப்பது ரொம்ப ரொம்ப நல்லது. இப்படி சுடுதண்ணியில் போட்ட பன்னீரை, தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, இந்த பன்னீர் துண்டுகளை போட்டு மேலே தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் 1/2 ஸ்பூன் தூவி, இதை நன்றாக ரோஸ்ட் செய்யவும். லேசாக வறுபட்டு வந்தவுடன் பன்னீரை எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். (இப்படி ரோஸ்ட் செய்த பன்னீரின் மேலே எலுமிச்சைச்சாறு பிழிந்து அப்படியே சாப்பிட்டாலும் ருசியாக தான் இருக்கும்.)

- Advertisement -

அடுத்து தேவையான காய்கறிகளை நறுக்க வேண்டும். நீலவாக்கில் நறுக்கியது வெங்காயம் 1 கைப்பிடி அளவு, நீளவாக்கில் நறுக்கியது குடைமிளகாய் 1 கைப்பிடி அளவு, நீளவாக்கில் நறுக்கிய கேரட் 1 கைப்பிடி அளவு, நீளவாக்கில் மெல்லிசாக நறுக்கிய முட்டைக்கோஸ் 1 கைப்பிடி அளவு, வெங்காயத்தாள் நறுக்கியது 2 டேபிள் ஸ்பூன் அளவு. இதை முன்கூட்டியே தயார் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது சாதத்தை பிரைட் ரைஸ்க்கு தாளிக்கலாம். அடுப்பில் ஒரு அகலமான அடிகனமான கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, முதலில் அதில் மிகப் பொடியாக நறுக்கிய பூண்டு பல் 15 போடவும். பிறகு அந்த பூண்டு லேசாக வதங்கி வந்தவுடன் முதலில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு ஒரு நிமிடம் வரை வதக்கி விடுங்கள்.

- Advertisement -

பிறகு நறுக்கி வைத்திருக்கும் ஒவ்வொரு காய்கறிகளாக இதில் சேர்த்து விட்டு வதக்க வேண்டும். இப்படி பிரைட் ரைஸ் செய்யும் போது காய்கறிகளை வதக்கும்போது அடுப்பு முழு தீயில் இருக்க வேண்டும். அதாவது ஹை ஃப்ளேமில் இருக்க வேண்டும். காய்கறிகளை வகுக்கும்போது இதில் 1/2 ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து வதக்கினால், காய்கறிகளின் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

3ல் இருந்து 4 நிமிடம் காய்கறிகளை வதக்கினால் போதும். காய்கறிகள் முக்கால் பாகம் வெந்தவுடன் வடித்த சாதத்தை இதில் கொட்டி தேவையான அளவு உப்பு தூவி, மிளகுத்தூள் 1 ஸ்பூன் தூவி, சோயா சாஸ் 1 டேபிள் ஸ்பூன் ஊற்றி, ஒரு கரண்டியை வைத்து அரிசி உடையாமல் எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து விடுங்கள்.

வடித்து வைத்த சாதம் உடைய கூடாது. மெதுவாக கலந்துக்கோங்க. இறுதியாக இதன் மேலே நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தாள், வறுத்து வைத்திருக்கும் பன்னீரை தூவி மீண்டும் ஒருமுறை கலந்து விட்டு பரிமாறினால் சூப்பரான பிரைட் ரைஸ் தயார்.

இதையும் படிக்கலாமே: வயிற்றுப்புண், வாய்ப்புண், உடல் உஷ்ணம் தணிய அருமையான சுவையில் ஆரோக்கியமான மணத்தக்காளி கீரை சட்னி வீட்டிலேயே எளிதாக அரைப்பது எப்படி?

பின்குறிப்பு:
அரிசி வேக வைக்கும் போது உப்பு, பன்னீரை வறுக்கும்போது உப்பு, பிறகு இறுதியாக காய்கறிகள் சேர்த்து அரிசி போட்டு கலக்கும்போது உப்பு. ஆகவே, நீங்கள் சேர்க்கக்கூடிய உப்பின் அளவை ஜாக்கதியாக பார்த்துக்கோங்க நிறைய போட்டுடாதீங்க.

- Advertisement -