- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்சிக்கன் மட்டன் போன்ற அசைவ குழம்புகளை தூக்கி சாப்பிடும் அளவிற்கு ஒரு சூப்பரானா பன்னீர்...

சிக்கன் மட்டன் போன்ற அசைவ குழம்புகளை தூக்கி சாப்பிடும் அளவிற்கு ஒரு சூப்பரானா பன்னீர் மசாலா கிரேவி சுலபமாக செய்யலாம் வாங்க.

- Advertisement -

முன்பெல்லாம் சப்பாத்தி, பூரி, நாண் இதற்கெல்லாம் சப்பாத்தி, தக்காளி தொக்கு,அல்லது கறி குழம்பு பூரி என்றால் உருளைக்கிழங்கு இப்படி இதுக்கு இது தான் என்று ஒரு சில உணவு வகைகள் மட்டுமே நாம் சமைத்து கொண்டிருந்தோம். இப்போதெல்லாம் அப்படி அல்ல சைட் டிஷ் வகைகளே ஏராளம் ஆக வந்துவிட்டது. அதிலும் இந்த பன்னீர் வைத்து செய்யும் ரெசிபிகள் பட்டியல் மிகவும் பெரியது. பன்னீரில் கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இருக்கிறது, அதே நேரத்தில் இது நல்ல ஒரு சுவையுடனும் அசைவ உணவுகளுக்கு இணையான ஒரு சுவையில் இது இருக்கிறது. சுவை மிகுந்த இந்த பன்னீரை வைத்து ஒரு அருமையான கிரேவியை எப்படி செய்வது என்று தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

தேவையான பொருட்கள்: பன்னீர் – 200 கிராம், வெங்காயம் -2, தக்காளி -2, இஞ்சி பூண்டு விழுது -1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், தனியா தூள் -2 டீஸ்பூன், கரம் மசாலா – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன், உப்பு -1/2 டீஸ்பூன், பால் ஆடை -1 டேபிள் ஸ்பூன், கஸ்தூரி மேத்தி 1/2 டீஸ்பூன், எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன், பட்டை -2 , ஏலக்காய் – 2, கிராம்பு- 2 , பிரிஞ்சி இலை -2 .

- Advertisement -

முதலில் பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பௌலில் எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு ஸ்பூன் தனியா தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து ஐந்து நிமிடம் அப்படியே ஊற விட்ட பிறகு அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் இந்த கலந்து வைத்த பன்னீர் மசாலாவை அதில் சேர்த்து மிதமான தீயில் ஒரு ஐந்து நிமிடம் வதக்கினால் போதும் பன்னீருடன் அந்த காரம் உப்பு எல்லாம் சேர்ந்து விடும்.

அதன் பிறகு அதை தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றி விட்டு அதே கடாயில் வெங்காயமும், தக்காளியும் பெரிதாகவே நறுக்கி சேர்த்துக் கொண்டு லேசாக பச்சை வாடை போகும் வரை வதக்கினால் போதும். இதை அரைக்கும் வேண்டியதால் அதிகமாக இரு வதங்க வேண்டிய அவசியம் இல்லை. வெங்காயம் தக்காளி வதங்கிய பிறகு அடுப்பை அணைத்துவிட்டு இதை அப்படியே ஆற விடுங்கள். அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம் தக்காளி இரண்டையும் நல்ல பைன் பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து எண்ணெய் ஊற்றி இரண்டு கிராம்பு, ஒரு ஏலக்காய், ஒரு பட்டை, ஒரு பிரிஞ்சி இலை, சேர்த்த பிறகு இந்த அரைத்து வைத்த வெங்காய தக்காளி விழுதை அதில் சேர்த்த பிறகு இஞ்சி பூண்டு விழுதுடன்,மீதம் இருக்கும் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து அந்த கிரேவியுடன் நன்றாக வதக்கினால் இது எண்ணெயிலேயே வதங்கி தனியாக எண்ணெய் பிரிந்து வர வேண்டும். அப்போது தான் இதன் பச்சை வாசனை அனைத்தும் போகும்.

அதன் பிறகு பாலாடையை சேர்த்து கிரேவிக்கு தேவையான உப்பும் சேர்த்த பிறகு நன்றாக கலந்து விட்டுக் கொள்ளுங்கள் (உங்களிடம் பிரெஷ் மில்க் கிரீம் இருந்தால் அதையும் சேர்க்கலாம்).இப்போது ஏற்கனவே ஃப்ரை செய்து வைத்த பன்னீரை இதனுடன் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள் ஐந்து நிமிடம் கொதித்தாலே போதும். அனைத்தையும் ஏற்கனவே தனித் தனியாக வதக்கி அரைத்து இருப்பதால் வேக அதிக நேரம் எடுக்காது அதன் பிறகு இறக்கும் போது மேலே கொஞ்சம் கஸ்தூரி மேத்தி தூவி இறக்கி விடலாம்.

இதையும் படிக்கலாமே: அரைச்சி தாளிச்ச சட்னி சாப்பிட்டு இருக்கீங்களா? காரசாரமா இப்படி ஒருமுறை சட்னி செஞ்சு சாப்பிட்டு பாருங்க, 10 இட்லி கூட உங்களுக்கு பத்தவே பத்தாது!

இதன் சுவை ஒரு நல்லரெஸ்டாரன்ட் ஸ்டைல் கிரேவிபோலவே இருக்கும். இது இருக்கும் போது மட்டன் சிக்கன் கிரேவிக்கு எல்லாம் அங்கு இடமே இல்லை இதன் சுவை அத்தனை அருமையாக இருக்கும். நீங்களுக்கும் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்.

சற்று முன்