பங்குனி அமாவாசை பரிகாரங்கள்

amavasai
- Advertisement -

நாளைய தினம் பங்குனி மாதத்தின் அமாவாசை திதியானது பிறக்கவிருக்கின்றது. அதாவது 08-04-2024 திங்கட்கிழமை அமாவாசை திதி. இந்த அமாவாசை எப்போதும் போல சாதாரண அமாவாசையாக நமக்கு பஞ்சாங்கத்தில் சொல்லப்படவில்லை. இந்த அமாவாசையில் அப்படி என்ன பெரிய அளவில் மாற்றம் நிகழவிருக்கிறது, என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில தகவலை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

பங்குனி அமாவாசை பரிகாரம்

இந்த அமாவாசை திதி அன்று ஐந்து கிரகங்கள் ஒன்றாக சேர்ந்து மீன ராசியில் அமரப்போகின்றது. இந்த கிரகச் சேர்க்கையானது எந்த ராசிக்காரர்களுக்குமே நன்மை தரக்கூடிய வகையில் அமையவில்லை என்பதும் ஜோதிடர்களின் கருத்து. அதாவது மீன ராசியில் சூரியன், சந்திரன், சுக்கிரன், புதன், ராகு, இந்த ஐந்து கிரகங்களின் சேர்க்கையானது இந்த அமாவாசை நாளில் நடக்கவிருக்கின்றது.

- Advertisement -

இந்த கிரக சேர்க்கை நமக்கு ஆரோக்கிய குறைபாட்டையும் மன கஷ்டத்தையும் கொடுக்கக் கூடிய விதத்தில் அமையும் என்பதும் ஜோதிடர்களின் கருத்து. இந்த சூழ்நிலையில் இருந்து தப்பித்துக் கொள்ள நமக்கு நாமே ஒரு பாதுகாப்பு வட்டத்தை போட்டுக் கொள்ள அமாவாசை நாளில் என்ன பரிகாரம் செய்வது.

வழக்கம் போல அமாவாசை திதியில் முன்னோர்களது வழிபாட்டை செய்து விடுங்கள். உங்களுடைய முன்னோர்களிடம் வழிபாட்டின் போது, உங்களுடைய குடும்பம் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிறகு அமாவாசை என்றால் குலதெய்வ வழிபாடு செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு.

- Advertisement -

நாளைய தினம் குலதெய்வத்தையும் மனதார நினைத்து வழிபாடு செய்து இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு உயிரும் நல்லபடியாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையை வைப்பது நல்லது. எல்லோரும் ஒன்று சேர்ந்தபடி கூட்டுப் பிரார்த்தனை செய்யும் பட்சத்தில் எந்த கிரக சேர்க்கையாக இருந்தாலும் அதனுடைய பாதிப்பை நிச்சயமாக நம்மால் குறைக்க முடியும்.

ஏனென்றால் நேர்மறை ஆற்றலோடு ஒட்டுமொத்தமாக இறைவனிடம் வைக்கும் பிரார்த்தனைக்கு சக்தி அதிகம். நாளைய தினம் எல்லோரும் இந்த பிரார்த்தனையும் செய்து கொள்ளுங்கள் இது எல்லோருக்கும் பொதுப்படையானது.

- Advertisement -

இந்த ஐந்து கிரகங்களும் மீன ராசியில் ஒன்று கூடுவதால் மீன ராசிக்காரர்கள் நாளை அன்னதானம் செய்யலாம். உங்களால் முடிந்த மூன்று பேருக்கோ, ஐந்து பேருக்கோ உங்கள் கையால் சாப்பாடு வாங்கி கொடுங்க. கோவிலுக்கு சென்று நவகிரகங்களை வழிபாடு செய்து விட்டு அங்கு இருக்கும் குருகளுக்கு ஒரு மட்டை தேங்காயையும், 1 கிலோ கோதுமையையும் வாங்கி தானம் கொடுத்து விடுங்கள். நாளைய தினம் மீன ராசிக்காரர்கள் இந்த தானத்தை செய்வது உங்களுக்கு இருக்கக்கூடிய தோஷத்தை விளக்கி விடும்.

திங்கட்கிழமையோடு இந்த அமாவாசை தினம் சேர்ந்து வந்திருப்பதால் நாளைய தினம் எல்லோரும் சிவன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். ஏற்கனவே நேரமும் காலமும் சரியில்லை கிரக சேர்க்கை சரியில்லை என்று சொல்லி வைத்துள்ளார்கள். இந்த கிரகச்சாரத்தின் மூலம் நமக்கு வரக்கூடிய பிரச்சனைகளை எல்லாம் சமாளிக்க வேண்டும் என்றால் நாம் சரணாகதி அடைய வேண்டிய ஒரே இடம் அந்த ஈசனின் பாதங்கள் தான்.

நாளைய தினம் பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று இரண்டு விளக்குகளை ஏற்றி வைத்துவிட்டு சிவபெருமானுக்கு உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி கொடுத்து ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை சொல்லி, உங்களுடைய குடும்ப நலனுக்காக பிரார்த்தனை வைப்பது நன்மையைச் செய்யும்.

இந்த கிரகங்களின் அமைப்பின் மூலம் பிரச்சனைகள் வரலாம் என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது அவ்வளவுதான். அதற்காக பெரிய அளவில் பாதிப்புகள் வந்துவிடுமோ என்ற பதட்டத்தோடு யாரும் இருக்க வேண்டாம். வருமுன் காப்போம் என்ற நம்முடைய முன்னோர்களின் கூற்றுக்கு இணங்க இந்த பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: எதிரிகள் தொல்லை நீங்க அமாவாசை வழிபாடு

எதற்கும் முன் ஜாக்கிரதியாக இருப்பது நல்லது தானே. ஆகவே நாளைய தினம் மேல் சொன்ன வழிபாட்டை பின்பற்றுங்கள் நிச்சயம் அந்த கடவுள் நமக்கு நல்ல வழியை காண்பித்து தருவான் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -