பங்குனி மாத ராசி பலன் 2024 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

panguni rasipalan
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முயற்சிகள் வெற்றியடையும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவுக்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத வகையில் பண வரவிற்கு வாய்ப்புகள் உள்ளது. அதே சமயம் மாதம் முழுவதும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் பண விரயம் என்பது ஏற்பட்டு கொண்டே இருக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்வது நன்மையை தரும். எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும் பிறரின் ஆலோசனையை கேட்டு எடுப்பது நன்மையைத் தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்களை நம்பி எந்த வேலையும் ஒப்படைக்காமல் தாமே செய்வதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் எதிர்பார்த்த சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழில் நல்ல முன்னேற்றத்தை நோக்கி செல்லும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு தங்கள் கூட்டாளியுடன் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு தக்ஷிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மகிழ்ச்சிகரமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு பண வரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. அதே போல் தேவையற்ற வீண் விரயங்களும் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. உடல்நலம் சீராக இருந்தாலும் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மருத்துவ செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும். கணவன் மனைவிக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். வேலையில் யாரையும் நம்பாமல் இருப்பதன் மூலமும் தங்களுடைய வேலைகளை விரைவில் செய்து முடிப்பதன் மூலமும் நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த சலுகைகள் அனைத்தும் கிடைக்க வாய்ப்புகள் ஏற்படும். தொழிலை பொறுத்த வரை எதிர்ப்பார்த்ததை விட அதிக அளவில் லாபம் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களில் வெற்றிகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஏற்றம் மிகுந்த மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். இதுவரை இருந்து வந்த வீண் விரயங்கள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவிற்கும் வாய்ப்புகள் உள்ளது. சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். வேலையில் கவனம் செலுத்தி செய்வதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். இருப்பினும் உயர் அதிகாரிகளுடன் பேசும் பொழுது பக்குவத்துடனும் நிதானத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. தொழிலில் பல தடைகள் ஏற்படுவதற்கும் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு நந்தி பகவானை வழிபட வேண்டும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பண வர வரவு இருக்காது. அதற்கு இணையான செலவுகளும் ஏற்படும். உடல் நலனில் சிறு உபாதை ஏற்பட்டாலும் உடனே உரிய மருத்துவரை ஆலோசித்து சரி செய்து கொள்ள வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. பேச்சில் நிதானம் தேவை. தேவையற்ற வார்த்தைகளை உபயோகப்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது கவனத்தை கையாள வேண்டும்.

வேலையை பொருத்தவரை பாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. உயர் அதிகாரிகளிடம் இருந்து எதிர்ப்புகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. உழைப்பிற்கு ஏற்ற ஆதாயம் கிடைக்காது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும். மறைமுக எதிரிகளால் தொழிலில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. கூடுதல் கவனம் தேவை. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் யோசித்து செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். செலவுகள் அதிகரித்தாலும் அதை சமாளித்துக் கொள்ளும் அளவிற்கு வருமானமும் அதிகரிக்கும். துணையின் உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் குடும்ப உறுப்பினர்களின் உடல்நலத்தை பேணி காக்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். குழந்தை செல்வம் கிடைக்கும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். அதை திறம்பட செய்வதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகளை பெறுவதற்குரிய வாய்ப்புகளும் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த தொழில் ரீதியான நல்ல செய்தி வந்து சேரும். அதனால் போட்டிகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு வைத்தீஸ்வரரை வழிபட வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஏற்ற இறக்கம் நிறைந்த மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் அதற்கு இணையான செலவுகளும் ஏற்படும். உடல் நலத்தில் ஏதாவது ஒரு உபாதை மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். இருப்பினும் மற்ற குடும்ப உறுப்பினர்களிடம் பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். உயரதிகாரிகள் சொல்லும் வேலையை விரைவாக செய்து முடிப்பதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது என்றாலும் நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் நஷ்டத்தை தவிர்க்க முடியும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு நரசிம்மரை வழிபட வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். இதுவரை இருந்து வந்த வீண் விரயங்கள் அனைத்தும் நீங்கும். உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்வது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கும் முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். கூடுதலாக உழைக்கும் பட்சத்தில் அதிக அளவில் லாபத்தை ஈட்ட முடியும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் அனைத்தும் வெற்றியைத் தரும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காண முடியும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் திட்டமிட்டு செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது. ஒரு சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். உடல் நலனில் கவனம் தேவை. மருத்துவ செலவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

வேலையை பொருத்தவரை நினைத்த சலுகைகளை பெறுவதற்கு கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தொழிலை முன்னேற்ற வேண்டும் என்ற முயற்சியில் புதிய நண்பர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு மீனாட்சி அம்மனை வழிபட வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மன நிறைவான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் உருவாகும். உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமண யோகம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையை நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை கடினமாக உழைத்து பெரும் லாபத்தை ஈட்டுவீர்கள். தொழிலை முன்னேற்றுவதற்கு தேவையான உதவிகள் கிடைக்கும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மனக்குழப்பம் நீங்கும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். வாக்குவாதங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது.

வேலையை பொருத்தவரை இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கி எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும். உழைப்பிற்கு ஏற்ற ஆதாயம் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது என்றாலும் கடினமாக உழைத்தால் தான் நஷ்டத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும். எந்தவித முடிவையும் உடனடியாக எடுக்காமல் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள உதவும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு காலபைரவரை வழிபட வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். இதனால் பழைய கடன்களை அடைப்பதற்குரிய சூழ்நிலையும் உண்டாகும். உடல் நலனில் கவனம் தேவை. பணம் ரீதியான வாக்குறுதிகள் தருவதை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை அடுத்த கட்ட முன்னேற்ற பாதைக்கு எடுத்துச் செல்ல முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அலைச்சல் அதிகரிக்கும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். துணையின் உடல் நலனில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். எவ்வளவு பெரிய பிரச்சினைகள் வந்தாலும் அதை எளிதில் சமாளித்து விடுவீர்கள்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று குறைவாகவே இருக்கும். வேலையை எளிதில் செய்து முடித்து நற்பெயரை பெறுவதற்குரிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலில் எடுக்கக்கூடிய முயற்சிகளை ஒரு முறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.

- Advertisement -