பங்குனி மாத ராசிபலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

Panguni
- Advertisement -

ஒவ்வொரு மாதமும் நிகழக்கூடிய கிரக மாறுதல்கள் 12 ராசிக்காரர்களுக்கும் வெவ்வேறு விதமான பலன்களை குறிக்கிறது. அந்த வகையில் தமிழ் மாதமான பங்குனி மாத ராசி பலன்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். தொடங்க இருக்கும் பிலவ வருடத்தின் கடைசி மாதமான பங்குனி மாதம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி அமையப் போகிறது? என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் எதிர்பாராத முக்கிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நிதானம் தான் வெற்றியின் முதல் படிக்கட்டாக அமையும். பெண்களுக்கு மனதில் இருந்து வந்த சங்கடங்கள் மறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சிறு சிறு தடைகள் ஏற்பட்டாலும், உங்களுடைய விடாமுயற்சிக்கு உரிய பலன்களை அடைவீர்கள். தேவையற்ற வீண் வாகன செலவுகள் உண்டாகும் என்பதால் உரிய பராமரிப்பு தேவை. மறைமுக எதிரிகளின் தொல்லை மேலும் வலுவாகும் எனவே எப்போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மாணவர்களின் எதிர்காலம் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த நீண்ட நாள் பாதிப்புகள் படிப்படியாக குறையத் துவங்கும். திங்கட் கிழமையில் சிவ வழிபாடு செய்து வருவது நல்லது.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் குடும்பத்தில் அமைதி நிலவும் அற்புதமான மாதமாக அமைய இருக்கிறது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை பலப்படுவதற்கு வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் திட்டமிட்டு எந்த ஒரு செயலையும் செய்வது நல்லது. வெளியிடங்களில் உங்களுடைய மரியாதை, மதிப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியான வளர்ச்சி மேம்படும். தீர விசாரிக்காமல் எந்த ஒரு முடிவையும் எடுப்பது மனக்கசப்பை ஏற்படுத்தும். பெண்களுக்கு எதிர்பாராத வகையில் பொருட் சேர்க்கை ஏற்படும். மாணவர்களின் எதிர்காலம் பற்றிய கவலை தீரும். தேவையற்ற அலைச்சலை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் சிறுசிறு குறைகள் தோன்றி மறையும். சனிக்கிழமையில் துளசி மாலை சாற்றி பெருமாளை வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் சாதகமான பலன்களைக் கொடுக்க இருக்கிறது. அசாதாரணமான விஷயங்களைக் கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண நெருக்கடி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் பட்டாலும் பணம் பல வழிகளில் இருந்து வரும் எனவே கவலை கொள்ளத் தேவையில்லை. பெண்களுக்கு திடீர் ஆன்மீக சிந்தனை வலுவாக வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செவ்வாய் கிழமையில் முருக வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நீங்கள் நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து காணப்படுவீர்கள். எதிர்பாராத ஒரு புது புத்துணர்ச்சி ஏற்படும். மனதில் இதுவரை குழப்பிக் கொண்டிருந்த விஷயங்களுக்கு முடிவு கிடைக்கும். கணவன் மனைவி உறவில் மேலும் அன்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பல இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் வெற்றியடையும். சுபகாரிய முயற்சிகளில் ஏற்பட்டுக் கொண்டிருந்த தடைகள் விலகும். பெண்களுக்கு ஏற்பட்ட வீண் பழிகள் மறையும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் இருந்து வந்த தொல்லைகள் குறையும். சூரிய வழிபாடு நல்ல ஆற்றல்களை பெருக செய்யும்.

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நீங்கள் அனுகூலமான பலன்களை பெற இருக்கிறீர்கள். எதிர்பார்க்கும் விஷயங்கள் ஒவ்வொன்றாக நடக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆன்மீக வழியில் மனம் செல்லும். பெண்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு போதிய வருமானம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு துறைசார் நிபுணர்களின் ஆலோசனை தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு நெருக்கடியான சூழ்நிலையை கூட நேர்த்தியாக சமாளிப்பீர்கள். மாணவர்களின் கவனம் திசை திரும்பாமல் கட்டுபாடாக இருப்பது நல்லது. பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி உறவுக்கு இடையே அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை தேவை. சுக்கிர வார வழிபாடு நலம் தரும்.

- Advertisement -

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நீங்கள் தீட்டிய திட்டங்கள் எளிதாக நிறைவேறக் கூடிய அற்புதமான மாதமாக அமைய இருக்கிறது. கடிவாளம் கட்டியது போல உங்கள் இலக்கை நோக்கி தொடர்ந்து பயணம் செய்யுங்கள். தேவையற்ற விமர்சனங்களை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய விஷயங்களை ஆரம்பிக்கும் பொழுது கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விரும்பிய விஷயங்களை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற வீண் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை கவனத்துடன் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் அதிக அக்கறை உண்டாகும். ஆரோக்கியத்தில் சிறுசிறு குறைகள் ஏற்படலாம். தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள் நல்லது நடக்கும்.

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நீங்கள் எதிர்பார்க்க கூடிய விஷயங்களில் பல தடைகளைத் தாண்டிய முன்னேற்றம் நிச்சயம். எவ்வளவு இடையூறுகள் ஏற்பட்டாலும் மனம் தளராமல் மீண்டும் முயற்சி செய்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே கூடுதல் நெருக்கம் உண்டாகும். பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேருவதற்கான சூழ்நிலை ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நேரம் என்பது மிகவும் அவசியமானதாக இருக்கும். எதிலும் காலம் தாழ்த்தாமல் முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். விக்னங்களை தீர்க்கும் விநாயகரை வழிபடுதல் நல்லது.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நீங்கள் புதிய முயற்சிகளை எடுக்கக்கூடிய நல்ல மாதமாக அமைகிறது. நீண்ட நாள் கனவுகள் நிறைவேறுவதற்கு உரிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திட்டமிட்ட காரியங்களில் பின்னடைவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே சாதுரியமான முயற்சி தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத விவகாரங்களில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் நல்லது. அடுத்தவர்களுடைய பிரச்சினைகளில் ஈடுபடாமல் விலகி நில்லுங்கள். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். மாணவர்களின் கருத்துக்களை உறுதியாக முன் வைப்பது நல்லது. உங்கள் குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய மாதமாக அமைய இருக்கிறது. தேவையற்ற பயணங்களை தவிர்த்து கொள்வது உசிதமானது. கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்வது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை நீடிக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் தேவை. முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிர்ப்பது நல்லது. பெரிய மனிதர்களுடைய ஆதரவை பெறுவீர்கள். நண்பர்களின் உதவிக்கரம் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைத்து ஆச்சரியப்படுத்தும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. ஆரோக்கியம் மேம்படும். துர்க்கைக்கு விளக்கு ஏற்றுவது நல்லது.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நீங்கள் புது புது மாற்றங்களை சந்திக்க கூடிய மாதமாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கு இடையே ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்லுதல் நலம் தரும். தேவையற்ற வாக்குவாதங்களை வளர்த்தால் விபரீத முடிவுகள் உண்டாகும். புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுவது நல்லது. ஆரோக்கிய ரீதியான வீண் செலவுகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. வழக்குகளில் சாதக பலன் உண்டு. அம்பிகைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால் நினைத்த காரியம் நடக்கும்.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நீங்கள் எளிதாக குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். பொருளாதார ரீதியான முன்னேற்றம் ஏற்றம் காணும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மனக்கவலை நீங்கி புது தெளிவு உண்டாகும். சுபகாரியத் தடைகள் விலகி ஒற்றுமை நீடிக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறையும். தாய்வழி உறவினர்கள் அனுகூல பலன் கொடுப்பார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தடைகளைத் தாண்டிய முன்னேற்றம் இருக்கும். பெண்களுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அதிகரிக்கும். மாணவர்களின் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் நீங்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி வழிபடுங்கள்.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அற்புதமான நல்ல மாதமாக அமைய இருக்கிறது. புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதக பலன் உண்டு. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்குவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நிறைவேறாத நீண்டநாள் விருப்பங்கள் நிறைவேற கூடிய வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இழுபறியில் இருந்து வந்த விஷயங்கள் முடிவுக்கு வரும். புதிய முயற்சிகளுக்கு பல எதிர்ப்புகள் எழுந்தாலும், உங்களுடைய தன்னம்பிக்கை உந்துகோலாக இருக்கும். மாணவர்களின் ஆற்றல் நேர்மறையாக செயல்படும். ஆரோக்கியத்திற்கு நேரம் ஒதுக்கி கவனிப்பது நல்லது. கால பைரவர் வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.

- Advertisement -