நாளை பங்குனி உத்திரம் – இதை செய்தால் மிகுதியான பலன்கள் நிச்சயம் உண்டு

murugan

பிரபஞ்சத்திற்கு மனிதர்களின் உடல் மற்றும் மனதிற்கும் தொடர்புள்ளது என்று கண்டறிந்தவர்கள் நமது சித்தர்கள் மற்றும் பண்டைய வானியல் சாஸ்திர நிபுணர்கள். எனவே தான் ஒவ்வொரு மாதத்திலும், ஆன்மீக ஆற்றல் மிகுந்த ஒரு நட்சத்திர தினத்தன்று மக்கள் அனைவரும் நன்மை பெற இறைவழிபாடு, பூஜைகள் செய்தல் போன்ற சம்பிரதாயங்களை உண்டாகியுள்ளனர். அந்த வகையில் பங்குனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திர தினத்தின் சிறப்புகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Sivanmalai Murugan

பங்குனி உத்திரம் ஒரு ஆன்மீக ஆற்றல் மிகுந்த ஒரு நன்னாளாகும். இந்த தினத்தில் அனைத்து கோயில்களிலும் விழாக்கள், வைபவங்கள் நடைபெறும் என்றாலும், முருகப்பெருமான் வழிபாட்டிற்குரிய ஒரு விஷேஷ தினமாக பங்குனி உத்திரம் கருதப்படுகிறது. ஏனெனில் இந்த நாளில் தான் முருகப்பெருமான் தெய்வானையை மணந்தார். எனவே முருகன் கோயில்களில் முருகன் திருக்கல்யாண வைபவங்கள் மிகச்சிறப்பாக நடைபெறும்.

பங்குனி உத்திர தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, உங்கள் வீட்டிலிருக்கும் முருகப்பெருமானுக்கு சிவப்பு நிற மலர்களை சமர்ப்பித்து, தூபங்கள் கொளுத்தி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி முருகனை மனதார வழிபட வேண்டும். பின்பு உணவேதும் அருந்தாமல் அருகிலுள்ள முருகன் கோயிலுக்கு சென்று முருகனுக்கு நடைபெறும் சிறப்பு பூஜைகள், திருக்கல்யாண வைபவங்கள் போன்றவற்றில் கலந்து கொண்டு முருகனை வழிபட வேண்டும். பூஜைகள் முடிந்த பிறகு கோயிலில் தரப்படும் பிரசாதத்தை உண்டு உங்களின் விரதத்தை முடிக்கலாம்.

Hindu Marriage

மேலே சொல்லப்பட்ட முறையில் பங்குனி உத்திர தினத்தன்று முருகப்பெருமானை வழிபடுபவர்களுக்கு திருமணமாகாதவர்களாக இருப்பின் விரைவில் திருமணம் நடைபெறும். தோஷங்கள் காரணமாக குழந்தைப்பேறு இல்லாமல் கவலைப்பட்டவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். பூர்வீக சொத்துகள்
போன்றவற்றில் நீடித்து வரும் பிரச்சனைகள் சுமூகமாக தீரும்.

இதையும் படிக்கலாமே:
தொழில், வியாபாரம் சிறக்க பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Panguni uthiram 2019 in Tamil. It is also called as Panguni matham sirappugal in Tamil or Thirumanam viraivil nadaipera in Tamil or Murugan kovil in Tamil.