உங்கள் தொழில், வியாபாரங்களில் லாபங்கள் பெருக இவற்றை செய்யுங்கள் போதும்

laksmi
- Advertisement -

பெரியளவில் பணம் இல்லாமல் ஒருவர் இறந்தால் அவரின் பிணத்திற்கு உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் கூட மரியாதை இல்லாமல் போய்விட்ட ஒரு உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இத்தகைய உலகத்தில் பிறரை கெடுக்காத எத்தகைய தொழில் செய்து பணம் ஈட்டினால் அது மேன்மையானதாகும். இங்கு தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கான எளிய பரிகாரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Money

இன்றைய காலத்தில் பலரும் பிறரிடம் வேலைக்கு சென்று சம்பாதிப்பதை விட சொந்தமாக தொழில், வியாபாரம் செய்து பொருளீட்ட வேண்டும் என்கிற சிந்தனை அதிகம் உள்ளது. அப்படி சொந்த தொழில், வியாபாரங்கள் தொடங்கிய அனைவருமே மிக பெருமளவில் பொருளீட்டுவதாக நாம் கருத முடியாது. பலர் தாங்கள் செய்கிற வியாபாரம், தொழில்களில் பல விதமான பிரச்சனைகளை சந்திக்கிறனர். இவை நீங்க கீழ்கண்ட எளிய பரிகாரங்களை கடைபிடிப்பது நல்லது.

- Advertisement -

செவ்வாய்க்கிழமைகளில் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளை வணங்கி, பிறகு லட்சுமி தேவியான தாயாருக்கு புது பருத்தி துணியில் திரியை செய்து, அதை பன்னீரில் தொய்த்து, காய்ந்த பிறகு ஒரு அகல் விளக்கில் நெய்யை ஊற்றி, அதில் இந்த திரியை போட்டு தீபமேற்றுவதால் உங்கள் தொழில், வியாபாரங்களிலுள்ள மந்த நிலை நீங்கி தனவரவு பெருகும். செவ்வாய் கிழமை மாலையிலும் இந்த பரிகார முறையை செய்ய வேண்டும்.

செவ்வாய்க்கிழமைகளில் தொழில், வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் அன்றைய தினம் புலால் உணவு உண்ணுதல், புகை, போதை வஸ்துகள் உபயோகிப்பது போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். முடிந்தால் அன்றைய தினம் ஒரு வேளையாவது உணவு உண்ணாமல் விரதம் இருந்து வள்ளி, தெய்வானை சமேதாமாக இருக்கும் முருகப்பெருமானை வழிபடுவதால் வேலை, தொழில், வியாபாரங்களில் ஏற்படும் பிராச்சனைகள், மறைமுக எதிரிகளின் தீச்செயல்களின் பாதிப்புகள் ஏற்படாமால் காக்கும். செவ்வாய்கிழமைகளில் எறும்புகள், தெருநாய்கள் போன்றவற்றிற்கு உணவிடுவதும் சிறந்த பரிகாரம் ஆகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
எதிரிகள் தொல்லை நீங்க இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Viyabara pariharangal in Tamil. It is also called as Tholil sirakka in Tamil or Sevvai kilamai in Tamil or Labam kidaikka in Tamil or Viyabaram tholil selikka in Tamil.

- Advertisement -