நாளை பங்குனி உத்திர வழிபாடு

murugan3
- Advertisement -

உண்மையான பக்தியோடு முருகா முருகா என்று மனம் உருகி கூப்பிட்டாலே அந்த முருகப்பெருமான், மனம் உருகி நம் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து விடுவார். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இருப்பினும் முருகனுக்கு உரிய விசேஷ நாள் நாளை வரவிருக்கின்றது. அவருக்குப் பிடித்த விஷயங்களை செய்யும் போது அதற்கு உண்டான பலன் இரட்டிப்பாக கிடைக்கும் அல்லவா.

நாளை பங்குனி உத்திரம். மாதங்களில் 12 வது மாதம் பங்குனி. நட்சத்திரத்தில் 12 வது நட்சத்திரம் உத்திரம். இதோடு சேர்த்து நாளை பங்குனி மாதம் 12ஆம் தேதியும் வந்திருக்கின்றது. ஆகவே இந்த நாளில் முருகர் வழிபாட்டை யாரும் தவற விடாதீர்கள். சீக்கிரம் திருமணம் நடக்கணும், சீக்கிரம் குழந்தை பாக்கியம் வேண்டும், வீட்டில் சந்தோஷம் நிறைவாக இருக்க வேண்டும், கடன் பிரச்சனை தீர வேண்டும், நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும், என்பவர்கள் எல்லாம் நாளைய தினம் முருகப் பெருமானை தவறாமல் வழிபாடு செய்து விடுங்கள்.

- Advertisement -

நாளைய தினம் முருகப்பெருமானுக்கு என்ன நெய்வேத்தியம் செய்து வைத்தால் சிறப்பு, உங்களுடைய வீட்டில் வேல் வழிபாடு செய்கிறீர்களா, நாளைய தினம் அந்த வேலுக்கு செய்ய வேண்டிய சிறப்பு பூஜைகளைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

நாளை பங்குனி உத்திர வழிபாடு

நாளைய தினம் முருகப்பெருமானுக்கு பஞ்சாமிர்தம் செய்து நிவேதியம் வைப்பது ரொம்ப ரொம்ப சிறப்பு. வாழைப்பழம், திராட்சை பழம், பேரிச்சம்பழம், கல்கண்டு, மாதுளை முத்துக்கள் இன்னும் உங்களுக்கு என்ன பழம் எல்லாம் கிடைக்கிறதோ அதை எல்லாம் இதோடு சேர்த்து, பிசைந்து கட்டாயமாக தேனும் நாட்டு சர்க்கரையும் சேர்த்து, கலந்து இந்த பஞ்சாமிர்தத்தை முருகப்பெருமானுக்கு நிவேதியமாக வைத்து என்ன வரம் கேட்டாலும் அது உடனே கிடைக்கும். முருகப்பெருமான் ஒரு பஞ்சாமிர்த பிரியர்.

- Advertisement -

ஆக நாளை பஞ்சாமிர்தம் செய்து பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யுங்கள். அடுத்ததாக தேனும் திணை மாவும் முருகருக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது. சுத்தமான மலை தேனோடு திணை மாவை சேர்த்து முருகப் பெருமானே வழிபாடு செய்யுங்கள்.

அடுத்தபடியாக சர்க்கரை பொங்கல். இது பொதுவாக எல்லா இறைவனுக்கும் செய்யக்கூடிய பிரசாதம் தான். உங்களால் மேலே சொல்லப்பட்டுள்ள மூன்று பிரசாதமும் செய்ய முடியும் என்றாலும் செய்து வைத்து வழிபாடு செய்யலாம். ஏதாவது ஒரு பிரசாதம் தான் செய்ய முடியும் என்றால் முருகப்பெருமானுக்கு பஞ்சாமிர்தம் நாளைக்கு தவறாமல் வைத்து வழிபாடு செய்யுங்கள்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் முருகர் சிலையோ அல்லது வேல் வைத்து வழிபாடு செய்யக் கூடிய வழக்கம் இருந்தால் அந்த சிலைக்கு கட்டாயம் நாளை பால் அபிஷேகம் செய்ய வேண்டும். கூடவே இந்த பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யலாம் சுத்தமான தேனை வாங்கி அபிஷேகம் செய்வது சிறப்பு. அபிஷேகத்தை முடித்து முருகர் சிலைக்கு வேலுக்கு சந்தன குங்குமம் இட்டு, தீப தூப ஆராதனை காண்பித்து, வெற்றிலை பாக்கு பூ பழத்தோடு, நாளை முருகரை வழிபாடு செய்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பண வரவை அதிகரிக்க வசம்பு பரிகாரம்

நாளை காலை 11.00 மணி வரை தான் பௌர்ணமி திதியும் பங்குனி உத்திரமும் சேர்ந்து இருக்கிறது. ஆகவே நாளை வீட்டில் செய்யக்கூடிய பங்குனி உத்திர முருகர் வழிபாட்டினை, காலை 11 மணிக்குள் செய்து முடிப்பது சிறப்பு. நாளைய தினம் முருகப்பெருமானின் அருளாசியை முழுமையாக பெற மேலே சொன்ன ஆன்மீகத் தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -