இன்று பங்குனி வளர்பிறை சதுர்த்தி – இதை செய்தால் பலன்கள் அதிகம்

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் சதுர்த்தி தினங்கள் வருகின்ற. அந்த வகையில் பங்குனி மாத வளர்பிறை சதுர்த்தி வழிபாட்டால் ஏற்படும் பலன்கள் இதோ.

vinayagar

மாதத்தில் வரும் ஒவ்வொரு தினமும் இறைவனை வழிபடுவதற்குரிய சிறந்த தினங்களாக இருக்கிறது. பலரின் விருப்பத்திற்குரிய இஷ்ட தெய்வமாக இருப்பவர் விநாயக பெருமான். விநாயகரின் எளிமையான தன்மையே பக்தர்களை அவர் பால் ஈர்க்கிறது. அந்த கணபதியை வழிபடுவதற்குரிய ஒரு சிறந்த நாளாக சதுர்த்தி தினம் இருக்கிறது. அந்த வகையில் பங்குனி மாதத்தில் வருகிற வளர்பிறை சதுர்த்தி தினத்தில் விநாயகரை வழிபடும் முறை மற்றும் அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

vinayagar

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்திற்கு நான்காவது தினம் அல்லது திதியாக வருவது சங்கடஹர சதுர்த்தி எனவும், அமாவாசை தினத்திற்கு நான்காவதாக வருவது சதுர்த்தி தினம் எனப்படுகிறது. இந்த இரண்டு சதுர்த்தி தினங்களும் விநாயகர் பெருமானை வழிபடுவதற்குரிய சிறந்தத தினமாக இருக்கிறது. அதிலும் தெய்வீக மாதமாக இருக்கும் பங்குனி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி தினத்தில் விநாயக பெருமானை வழிபடுவதால் நன்மைகள் பல உண்டாகிறது.

பங்குனி வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று அதிகாலை நீராடி, உணவு ஏதும் உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதனாகிய விநாயகப்பெருமான் நினைவோடு விரதம் இருக்க வேண்டும். உணவு சாப்பிட்டாக வேண்டிய நிலையில் இருப்பவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிடலாம். மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்கோ அல்லது அவரது சந்நிதிகோ சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனை, பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். வழிபாடு முடிந்ததும் ஆலயத்தை எட்டு முறை வலம் வர வேண்டும். கோயிலில் அனைத்து பூஜை வழிபாடுகள் முடிந்ததும் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ளவேண்டும்.

vinayagar

பங்குனி மாத வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று மேற்கூறிய முறையில் விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய்கள் நீங்க பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து பல வகையான கஷ்டங்களை சந்தித்து வருபவர்களுக்கு, அக்கஷ்டங்கள் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். குழந்தைகளுக்கு இருக்கும் மந்த புத்தி நீங்கி, அறிவுகூர்மை உண்டாகி கல்வி, கலைகளில் சிறப்பார்கள். கடன்கள் இல்லாத வாழ்க்கை வாழும் சூழல் ஏற்படும். செல்வ சேமிப்பு அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே:
கோயில் எலுமிச்சை பழம் விலை ஒன்றரை லட்சம் ஏன் தெரியமா?

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Panguni valarpirai sathurthi in Tamil. It is also called as Panguni matham in Tamil or Vinayagar valipadu in Tamil or Sathurthi viratham in Tamil or Panguni sathurthi in Tamil.