இக்கோயிலில் எலுமிச்சை பழம் விலை ஒன்றரை லட்சம் – ஏன் தெரியுமா?

lemon

நமது பாரம்பரியத்தில் தினந்தோறும் இறைவழிபாடு என்பது வாழ்க்கையோடு இணைந்த ஒன்று. தினந்தோறும் அல்லது வாரத்திற்கு ஒரு முறையாவது கோயிலுக்கு சென்று இறைவனை வழிபடுவதை பெரும்பாலானவர்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். கோயிலில் பூஜை முடிந்த பிறகு தரப்படும் பிரசாதங்களை வாங்க அனைவரும் விரும்புவர். ஆனால் ஒரு கோயிலில் தரப்படும் பிரசாத பூஜை பொருட்களை வாங்க பக்தர்கள் கடும் போட்டி ஏற்படுவதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

kantha sasti kavasam lyrics

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த ஓட்டனந்தல் கிராமத்தில் இருக்கும் இரட்டை குன்றில் அமைத்திருக்கிறது மிக பழமையான ஸ்ரீ இரத்தின வேல் முருகன் கோயில். வருடந்தோறும் இக்கோயிலில் பங்குனி மாதத்தில் விழா நடத்தப்பட்டு, பத்தாம் நாளில் காவடி பூஜை செய்யப்படும்.

பெரும்பாலான முருகன் கோயிலில் இடும்பன் சந்நிதி இருப்பதை போல இங்கும் இடும்பன் சந்நிதி இருக்கிறது. பத்து நாள் விழாக்காலத்தில் இடும்பனுக்கு விஷேஷ பூஜைகள் செய்யப்படுகின்றன. 11 ஆம் நாள் இரவில் இடும்பன் பூஜை முடிந்து தினமும் பூஜையில் பயன்படுத்த பட்ட எலுமிச்சம் பழங்கள் பக்தர்களுக்கு ஏலம் விடப்படும்.

idumban

இதில் அதிசயம் என்னாவென்றால் முதல் நாள் பூஜையில் பயன்படுத்தப்பட்ட எலுமிச்சம் பழம் நாற்பத்தி ஓராயிரம் ரூபாய்க்கு பக்தர் ஒருவரால் ஏலம் எடுக்கப்பட்டது. இதே முறையில் 9 நாட்கள் பூஜையில் பயன்படுத்த பட்ட எலுமிச்சம் பழங்கள் அனைத்தும் சேர்த்து ஒரு லட்சத்தி ஐம்பத்தி ஐயாயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டிருக்கின்றன.

- Advertisement -

elumichai

கடந்தாண்டு இடும்பனுக்கு படையலாக வைக்கப்பட்ட கருவாட்டு சாதம் ஒரு லட்சத்தி இரண்டாயிரம் ரூபாய்க்கு பக்தர் ஒருவரால் ஏலம் எடுக்கப்பட்டது. இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளூர்காரர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால், வெளியூர்காரர்கள் உள்ளூர்காரர்களை வைத்து கோயில் பூஜை பொருட்களை ஏலம் எடுக்கின்றனர்.

Baby

இந்த முருகன் கோயில் விழாவில் பயன்படுத்தும் இந்த எலுமிச்சம் பழத்தை பிரசாதமாக சாப்பிடும் குழந்தை பாக்கியமில்லாத தம்பதிகளுக்கு நிச்சயம் குழந்தை பிறக்கும் என்பதாலும், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும் என்பதாலும் அதிக பணம் தந்து ஏலம் எடுக்க பக்தர்கள் தயங்குவதில்லை என கூறுகிறார்கள்.

இதையும் படிக்கலாமே:
திருப்பதியில் இங்கு சென்றால் அதிர்ஷ்டம் ஏற்படும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Elumichai prasadham elam in Tamil. It is also called as Kovil prasadam in Tamil or Murugan kovil prasadam in Tamil or Idumban poojai in Tamil.