மனச்சோர்வு, உடல் சோர்வு எது இருந்தாலும் 5 நிமிடத்தில், 5 விரல்களை வைத்து சரி செய்துவிடலாம். ‘பஞ்சபூத மந்திர தியானத்தை’ மிஸ் பண்ணாம தெரிஞ்சு வெச்சுக்கோங்க!

meditation

‘உன் வாழ்க்கை உன் கையில்’ என்று சொல்லுவார்கள் அல்லவா? இது முற்றிலும் உண்மையான ஒரு கூற்று. நம்முடைய வாழ்க்கை நம் கையில் தான் உள்ளது. உடல் சோர்வு மனச்சோர்வு என்று நாம் எடுக்கக்கூடிய முயற்சிகளை எக்காரணத்தைக் கொண்டும் தள்ளிப் போட்டு விடக் கூடாது. அன்றைக்கு செய்ய வேண்டிய காரியத்தை அன்றைக்கே செய்து முடித்து விட வேண்டும். நாளைக்கு என்று, எவரொருவர் தள்ளிப் போடுகிறாரோ அவர்களால் நிச்சயம் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது என்று கூட சொல்லலாம்.

sad

உங்களுடைய வாழ்க்கையில் அடிக்கடி பிரச்சினைகள் வரும்போது உங்களுடைய ‘மனமும்’, அதிகப்படியான உழைப்பை கொடுக்கும் போது உங்களுடைய ‘உடலும்’ சோர்ந்து போகின்றதா? இதற்கு தீர்வாக, நம்முடைய முன்னோர்கள் நமக்காக சொல்லி வைத்திருக்கக்கூடிய இந்த பயிற்சியை செய்து விடுங்கள். நாம் இருந்த இடத்திலிருந்தே, உட்கார்ந்த இடத்தில் இருந்தே, சுலபமாக மிக மிக சுலபமாக செய்யக்கூடிய தியானம்தான் இது. இந்த பஞ்சபூத தியானத்தை எப்படி செய்வது என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாமா?

எந்த தியானத்தை செய்வதாக இருந்தாலும், எந்த முத்திரையை பிடிப்பதாக இருந்தாலும் முதலில் நம்முடைய முதுகுத் தண்டு நேராக இருக்க வேண்டும்‌. நீங்கள் வீட்டில் இருந்தால் சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டு இதை செய்யலாம். அலுவலகத்திலோ அல்லது வெளி இடங்களிலோ அல்லது பயணத்தின் போதோ செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், நாற்காலியில் அமர்ந்தபடி கூட இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம்.

panja-bootha-dhyanam

நேராக நிமிர்ந்து உட்கார்ந்து விட்டு, உங்களது வலது கையில் இருக்கும் ஐந்து விரல்களை விரித்து வைத்து கொள்ளுங்கள். அதன் பின் இடது கையால், வலது கையில் இருக்கும் கட்டை விரலிலிருந்து, சுண்டு விரல் வரை அழுத்தம் கொடுத்து எடுக்க வேண்டும். எல்லா வீரர்களுக்கும் சீரான அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்பது கவனிக்கப்படவேண்டிய விஷயம். மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். உங்களது வலது கை கட்டை விரலை, இடது கையால் இருக்க மூடிக்கொண்டு தொடர்ந்து ஒன்றிலிருந்து, பத்து வரை எண்ணுங்கள்.

- Advertisement -

அதன் பின்பாக, கட்டை விரலை விட்டு விடுங்கள். அடுத்த படியாக இருக்கும் ஆள்காட்டிவிரலை இதேபோல் இருக்கமாக பிடித்துக் கொள்ளுங்கள். ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணுங்கள். இதேபோல் நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் இப்படியாக அழுத்தம் கொடுத்து 10 வரை எண்ணிக் உங்களது தியானத்தை முடித்துக் கொள்ள வேண்டியதுதான். இப்படி அழுத்தம் கொடுக்கும் போது கண்களை மூடிக் கொள்ளலாம். (ரொம்ப அழுத்த வேண்டும் என்பதற்காக, அழுத்தி விரலை உடைத்துக் கொள்ளாதீர்கள். முடிந்த அளவிற்கு அழுத்தம் கொடுத்தால் மட்டும் போதும்.) வலதுகை பயிற்சி நிறைவடைந்தவுடன், அதன்பின்பு இடது கை, இப்படியாக உங்களது கைகளை மாற்றி, ஒரு முறை, பத்து விரல்களுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும். அவ்வளவுதாங்க!

நம்முடைய ஐந்து விரல்களும் பஞ்சபூதத்தின் சக்திகள் அடங்கி இருக்கின்றது. அந்த சக்திகளை அழுத்தம் கொடுத்து தூண்டி விடுவதன் மூலம், அதனுடைய இயக்கம் சீராக்க படுகின்றது. இதன் மூலம் மன சோர்வும், உடல் சோர்வு நீங்கி உற்சாகமாக செயல்பட தொடங்கிவிடுவீர்கள்.

fingers

இப்போ, இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள இந்த விஷயங்களை, படிப்பவர்கள் கட்டாயம் நம்ப மாட்டீர்கள். உங்களுக்கு உடல் சோர்வு இருக்கும் போது, மன சோர்வு இருக்கும் போது ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க! உங்களுக்கு இது ஒர்க்கவுட் ஆச்சுன்னா, உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு இந்த தியானம், இந்த பயிற்சி ஒரு சிறிய உதவியாக இருக்கட்டுமே! ஒர்க்கவுட் ஆகலேன்னா விட்ருங்க! அவ்வளவு தானே!

இதையும் படிக்கலாமே
சொர்ணாகர்ஷன பைரவரை நினைத்து, உங்கள் வீட்டிலேயே 9 வாரங்கள் இப்படி பூஜை செய்தால், வேண்டுதல் அப்படியே நிறைவேறும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.