- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபஞ்சபூத ஸ்தலங்களும் வழிபாட்டு முறையும்

பஞ்சபூத ஸ்தலங்களும் வழிபாட்டு முறையும்

- Advertisement -

இந்த உலகமே பஞ்சபூத தத்துவத்தின் அடிப்படையில் தான் இயங்கிக்கொண்டு இருக்கிறது. இந்த பஞ்சபூதத்தில் ஏதாவது ஒன்று இல்லை என்றாலும் இந்த உலகம் அழிந்துவிடும் என்பது நம் அனைவரும் அறிந்த உண்மையே. அந்த அடிப்படையில் பஞ்சபூதங்களுக்கு உரிய தலங்களாக கருதப்படும் சிவாலயங்களை நாம் எந்த முறையில் வழிபட்டால் நம்முடைய கர்ம வினைகள் அனைத்தும் நீங்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

நிலம், நீர், காற்று, ஆகாயம், பூமி இந்த ஐந்தும் தான் பஞ்சபூதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை ஐந்துமே நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தொடர்புடையதாக தான் திகழ்கிறது. இதன் அடிப்படையிலேயே தான் ஜோதிடத்திலும் ஒவ்வொரு ராசிகளுக்கும் உரிய பஞ்சபூதங்கள் என்ன என்பதை அறிந்து அதற்கு ஏற்ற வழிப்பாட்டை செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

நெருப்பு ராசி

மேஷம், சிம்மம், தனுசு இந்த ராசியில் பிறந்தவர்களாக இருந்தாலும் அல்லது இந்த லக்னத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் கண்டிப்பான முறையில் அக்னி ஸ்தலமாக கருதப்படுகின்ற திருவண்ணாமலைக்கு சென்று வழிபட வேண்டும். இந்த ராசிக்காரர்கள் கோவிலுக்கு செல்ல வேண்டிய கிழமை செவ்வாய், வியாழன், ஞாயிறு. மேலும் இந்த கோவிலுக்கு சென்று கண்டிப்பான முறையில் கற்பூரம் அல்லது நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

- Advertisement -

நிலம் ராசி

ரிஷபம், கன்னி, மகரம் இந்த மூன்று ராசிகளும் நிலத்திற்குரிய ராசியாக கருதப்படுகின்றது. இவர்கள் காஞ்சிபுரத்தில் இருக்கக்கூடிய ஏகாம்பரேஸ்வரரை சென்று தரிசனம் செய்ய வேண்டும். மேலும் இவர்கள் புதன், வெள்ளி, சனி போன்ற கிழமைகளில் தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு மிகுந்ததாக இருக்கும். இவர்கள் கண்டிப்பான முறையில் அந்த கோவிலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவதன் மூலம் அவர்களின் கர்ம வினைகள் தீரும்.

- Advertisement -

காற்று ராசி

மிதுனம், துலாம், கும்பம் போன்ற ராசிகள் காற்று ராசிகள் என்று கூறப்படுகிறது. காற்று ராசிக்குரிய சிவஸ்தலமாக கருதப்படுவது காலஹஸ்திரி. இந்த ராசிக்காரர்கள் அந்த கோவிலுக்கு சென்று மந்திர வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஊதுபத்தி, சாம்பிராணி தூபம் போன்றவற்றைக் காட்டி வணங்க வேண்டும். இவர்கள் புதன், வெள்ளி, சனி போன்ற கிழமைகளில் சிவபெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பு மிகுந்ததாக இருக்கும்.

நீர் ராசி

கடகம், விருச்சகம், மீனம் இவர்கள் நீர் ராசியாக கருதப்படுகிறார்கள். இவர்கள் திருவானைக்காவலில் இருக்கக்கூடிய ஜம்புகேஸ்வரரை வழிபட வேண்டும். மேலும் இவர்கள் திங்கள், செவ்வாய், வியாழன் போன்ற கிழமைகளில் வழிபடுவது மிகவும் சிறப்பு மிகுந்ததாக இருக்கும். அந்த கோவிலுக்கு சென்று திரவப் பொருட்களை அபிஷேகத்திற்காக வாங்கி கொடுத்து வழிபடுவது அவர்களின் கர்ம வினைகளை தீர்க்கும்.

இந்த கோவில்களுக்கு சென்று வழிபடுவதோடு மட்டுமல்லாமல் ஆகாய தத்துவத்தை நிரூபிக்க கூடிய சிதம்பர நடராஜப் பெருமானையும் சென்று வழிபட்டு வருவதன் மூலம் வாழ்வில் இருக்கக்கூடிய கர்ம வினைகள் அனைத்தும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: வராத பணமும் வர ரத்த சந்தன வழிபாடு

வருடத்திற்கு ஒரு முறையாவது தங்களுடைய பஞ்சபூத ஸ்தலங்களுக்கு சென்று நம்பிக்கையுடன் வழிபாடு மேற்கொண்டால் அவர்கள் வாழ்வில் நன்மைகள் உண்டாகும்.

சற்று முன்